search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus hit"

    காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 43). ஷேர் ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று சங்கொலி குப்பம் பகுதியில் இருந்து முதுநகருக்கு ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கி விட்டார்.

    பின்னர் முதுநகரில் இருந்து சங்கொலி குப்பம் திரும்பி வந்தபோது காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42). திருமணமாக தவரான இவர் கோவில் பூசாரி இருந்தார். நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சங்ககிரியை அடுத்து வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது. இதில், குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் குமரேசனின் உடலை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ் டிரைவரான சங்ககிரி அக்கமாபேட்டையைச் சேர்ந்த சுதாகர் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்தவுடன் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ராணிப்பேட்டையில் 40 பயணிகளுடன் சென்ற ஆந்திர அரசு பஸ் டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    வாலாஜா:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) பகுதியில் இருந்து சென்னைக்கு இன்று காலை அம்மாநில அரசு பஸ் 40 பயணிகளுடன்சென்று கொண்டிருந்தது.

    சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு வளைவில் பஸ் திரும்பியது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து நொறுங்கியது. மின்வயர்கள் பஸ் கூரை மீது கொத்தாக விழுந்தது.பஸ்சுக்குள் இருந்த 40 பயணிகளும் ‘அபயக்குரல்’ எழுப்பினர். பஸ்சை விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பஸ்களில் தங்களது ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    களக்காடு அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவரும் இவரது நண்பருமான மாவடியை சேர்ந்த குமாரும் (20) நேற்று இரவில் மோட்டார்சைக்கில் களக்காட்டில் இருந்து மாவடிக்கு சென்றனர். சாலைப்புதூர் அடுத்த அண்ணா நகரில் சென்ற போது வள்ளியூரில் இருந்து களக்காடு நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார் படுகாயம் அடைந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குமாரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×