மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி பலி

தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி பலி
Published on

கோபி:

கோபி அருகே உள்ள வடுக பாளையத்தை சேர்ந்தவர் அப்பாச்சி (70). கூலி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று இரவு அப்பாச்சி தனது மோட்டார் சைக்கிளில் வடுகபாளையம் பிரிவைத் தாண்டி கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அப்பாச்சி படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அப்பாச்சி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com