search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker death"

    • லாலாபேட்டை போலீசார் விசாரணை
    • படிக்கட்டில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.

    கரூர்

    லாலாபேட்டை அருகே உள்ள கணக்குப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கே.புதுப்பட்டியில் உள்ள தனது மருமகன் சேகர் வீட்டிற்கு வந்து உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டின் படிக்கட்டில் ஆறுமுகம் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • இன்று கடைக்கு வந்த அவர் பின்னர் கலெக்சனுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து (வயது 48). இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கார் மோதி பலி

    இவர் தினமும் கலெக்‌சனுக்கு செல்வது வழக்கம். இன்று கடைக்கு வந்த அவர் பின்னர் கலெக்சனுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பாளை கீழ நத்தம் விலக்கு பகுதியில் 4 வழிச்சாலையில் சென்ற போது , எதிரே நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட அந்தோணி சவரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் விசாரணை

    மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேரிகார்டு மீது மோதி நின்றது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாளை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து நடந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது.
    • அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் மந்தக்கரை சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கவரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். மேலும் குடிப்பதற்கு பணம் இல்லாததாலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்து வந்த செல்வராஜ் நேற்று வீட்டில் இருந்த கவரிங் நகை தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த சைனைடை சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் மனைவி காமாட்சி சிதம்பரம் நகர போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருச்சி பாலக்கரை கான்மியான் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (வயது 53). தொழிலாளி
    • எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் உமர் பாரூக் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    திருச்சி

    திருச்சி பாலக்கரை கான்மியான் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (வயது 53). தொழிலாளி.

    இவர் தனதுமோட்டார் சைக்கிளில் மேலப்புதூர் பகுதியில்சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் உமர் பாரூக் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உமர் பாரூக் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி அருகே உள்ள மாவத்தூரை சேர்ந்த வைரன்(வயது 55). கூலி தொழிலாளி.
    • திருச்சி- பாலையம்பட்டி சாலையில் வீரச்சிங்கம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்றார்.

    கரூர் :

    கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி அருகே உள்ள மாவத்தூரை சேர்ந்த வைரன்(வயது 55). கூலி தொழிலாளி.

    இவர் திருச்சி- பாலையம்பட்டி சாலையில் வீரச்சிங்கம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேகர் (வயது 65). தொழிலாளி. மதுபழக்கத்துக்கு அடிமையான இவர் அதேபகுதியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு மது போதையில் மயங்கி விழுந்தார்
    • அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருச்சி,

    திருச்சி செந்தண்ணீர்புரம் திரு.வி.க. தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 65). தொழிலாளி. மதுபழக்கத்துக்கு அடிமையான இவர் அதேபகுதியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு மது போதையில் மயங்கி விழுந்தார்.

    அவரது மகன் மணிகண்டன் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்மலைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரிசி ஆலையில் நேற்று காலை நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு தொழிலாளி அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
    • எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று இயங்குகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காளி முக்கியா (வயது 25) என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று காலை அரிசி ஆலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது. இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து வாலிபரின் சகோதரி நித்திஷ் முக்கியா பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி(26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 4 நாட்களாக ஆனந்தகுமார் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது தீடீரென மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்த வர்கள் உடனடியாக ஆனந்தகுமாரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருமத்த ம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி.
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரிய கொமேஸ்வரம் பகுதியை சேர்ந்த சூராவேலு மகன் ஏழுமலை வயது (31) கட்டட தொழிலாளி நேற்று இரவு உடல்நிலை சரியில்லை என ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். டாக்டர்கள் ஏழும லையை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்திகுப்பம் அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே உள்ள அழகியபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 21-ந் தேதி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகாசி அருகே குளிக்க சென்ற போது தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள தடுப்பணைக்கு அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் இரவு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தடுப்பணை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து முத்துவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது முத்துவின் ஆடைகளும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முத்துவை தேடினர். சுமார் 4½ மணி நேர தேடுதலுக்கு பின்னர் முத்துவின் உடல் கிடைத்தது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தடுப்பணையில் குளித்த போது நீரில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
    நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடியபோது போலீஸ் வந்ததால் பயந்துபோய் கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்துக்கு பிறகு அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    ஆவடி:

    ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் கூவம் ஆற்றின் ஓரமாக உள்ள சுடுகாட்டில் அமர்ந்து சீட்டு விளையாடினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டாபிராம் போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். போலீஸ் வருவதை கண்டதும், அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி தலைதெறிக்க ஓடினார்கள்.

    அப்போது சரவணன், போலீசுக்கு பயந்து அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் கூவம் ஆற்றில் செடி, கொடிகள், ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து இருந்ததால் செடிகொடிகளுக்கு இடையே சரவணன் சிக்கிக்கொண்டார்.

    இதை கண்ட அவரது நண்பர்கள், கூவம் ஆற்றில் இறங்கி சரவணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் பயந்துபோய் ஆற்றில் இருந்து வெளியேறி விட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், இருள் சூழ்ந்து விட்டதால் மின் விளக்குகள் உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராடி இரவு 9 மணியளவில் கூவம் ஆற்றில் செடி கொடிகளுக்கு இடையே சிக்கி இருந்த சரவணனை பிணமாக மீட்டனர். அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரிந்தது.

    பட்டாபிராம் போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பலியான சரவணனுக்கு சத்தியவாணி (38) என்ற மனைவியும், ஷாலினி (21), மாலினி (19) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    போலீசுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி, நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×