என் மலர்
செய்திகள்

தொழிலாளி பலி
கந்திகுப்பம் அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்த தொழிலாளி பலி
கந்திகுப்பம் அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள அழகியபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 21-ந் தேதி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






