search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமத்தம்பட்டி"

    • குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
    • மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கருமத்த ம்பட்டி நான்கு ரோடு அருகில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரிய வந்தது.

    இதனை அடுத்து அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாதாராம் (31), தீபாராம்(25) ஆகியோர் மூலம் இப்பகுதியில் குட்கா பொருள்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து வாகராயம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் இருவருக்கும் உடந்தையாக செயல்பட்ட பிரகாஷ் குமார்(40), ரஞ்சித் குமார் (26), சோகரம் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் , பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 354 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

    • தொழிலாளி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி(26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 4 நாட்களாக ஆனந்தகுமார் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது தீடீரென மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்த வர்கள் உடனடியாக ஆனந்தகுமாரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருமத்த ம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கருமத்தம்பட்டி:

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதியில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சப் -இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமை யிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வாகராயம்பாளையத்தை சேர்ந்த தீபக்குமார்(20) சந்தோஷ்(24) மற்றும் சதீஷ்குமார் (32) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

    • 14 வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
    • விசைத்தறி மற்றும் நெச வாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

    கோவை:

    இலவச வேட்டி சேலை திட்டங்களை ஆந்திர மாநில விசைத்தறி யாளர்களுக்கு வழங்கி தமிழக அரசு அங்கு கொள்முதல் செய்துள்ளது. இதனால் இங்குள்ள விசைத்தறி மற்றும் நெச வாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    இதனை கண்டித்து பா.ஜ.க. நெசவாளர் பிரிவு சார்பில் கருமத்தம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி பேசியதாவது:-

    இலவச வேட்டி சேலை விசைத்தறி நெசவா ளர்களுக்கு கொடுக்காமல் வேறு மாநிலத்திற்கு கொடுக்கப்படுகிறது.தேர்தலின் போது நெசவாளர்களுக்கு கொடுத்த 14 வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

    மேலும் தமிழ்நாடு தமிழகத்தின் வருவாயில் 50 சதவீதத்தை வரியாக கொடுக்கிறது. ஆனால் இங்கு முக்கிய தொழிலாக விளங்கும் ஜவுளி தொழிலை அரசு முடக்க நினைக்கிறது. பள்ளிச் சீருடை இலவச வேட்டி சேலை ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு வழங்காமல் வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவது இங்குள்ள விசைத்தறி மற்றும் நெசவாளர்களை மிகவும் பாதிக்கும். தமிழக அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கி றோம். என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர்க னகசபாபதி, நெசவாளர் பிரிவு மாநில தலைவர் கே. எஸ். பாலமுருகன், துணைத்தலைவர் தனலட்சுமி, மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட தலைவர் பரசுராமன், கோவை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர்கள் மாணிக்கவாசகம், சிதம்பரம், மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், கருமத்தம்பட்டி மண்டல தலைவர் மகேஷ், ஆர்த்தி ரவி கவிதா, சூலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் மகேந்திரன், அரசு தொடர்புத்துறை கோவை மாவட்ட தலைவர் மயில்சாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கை நிறை வேறாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். 

    • கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை உள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    கருமத்தம்பட்டி :

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருமத்த ம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையம் பகுதியில் கருணாகரன்(36) என்பவரின் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை உள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையின் உரிமையாளர் கருணாகரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    தொடர்ந்து பதுவம்பள்ளி பகுதியில் உள்ள சுந்தரமூர்த்தி(59) என்பவரின் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டதில் 5 கிலோ குட்கா பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதனை தொடர்ந்து உரிமையாளர்களிடம் மேலும் இதனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் பிரபு (44) என்பவர் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
    • தொழிற்சாலையில் வைக்க ப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி பகுதியில் மூர்த்தி (வயது 51) என்பவருக்கு சொந்தமான தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் பிரபு (44) என்பவர் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 20-ந் தேதி செந்தில் பிரபு அலுவலக அறையில் ரூ. 52 ஆயிரம் வைத்து வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.52 ஆயிரம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் தொழிற்சாலையில் வைக்க ப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அப்போது அங்கு வேலை செய்து வந்த வேலூரை சேர்ந்த சுரேஷ் (24) என்பவர் அலுவலக அறையில் வைக்கப்ப ட்டிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து செந்தில் பிரபு கருமத ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய தொழில ாளியை தேடி வந்தனர்.

    அப்போது சுரேஷ் கடலூர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

    பஸ் நிலையத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை திறக்க படக்கூடாது என டாஸ்மார்க் கடை திறக்க கூடிய இடத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருமத்தம்பட்டி:

    சோமனூர் பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை திறக்க படக்கூடாது என டாஸ்மார்க் கடை திறக்க கூடிய இடத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த வழியில் செல்ல அச்சப் படுவார்கள். அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளதால் இங்கு மதுபானக்கடை திறக்க வேண்டாம் என முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இது தொடர்பாக கலெக்டர் மற்றும் நகராட்சி தலைவர், தாசில்தார், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு மனு அளித்து இருப்பதாகவும் உடனடியாக டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    • கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
    • 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அரசு மதுபான கடை கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் இருந்து கருமத்தம்பட்டி புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வந்தது.

    அப்பகுதியில் குழந்தைகள் நல மருத்துவ மனை உள்ளது. மற்றும் தேவாலயம் செல்லும் சாலையாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கருமத்தம்பட்டி பஸ் நிலையத்திற்கு வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் இருந்த மதுபானக்கடை அகற்றப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் அதே இடத்தில் அரசு மதுபான கடை திறப்பதாக தகவல் பரவி உள்ளது. மேலும் மதுபான கடை திறக்க பணிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து அப்பகுதி யைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான க்கடையை இப்பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    இப்பகுதியில் மதுபான கடை திறந்தால் பெண்கள், குழந்தைகளுக்கு பாது காப்பற்ற நிலை ஏற்படும் எனவும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ×