search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker death"

    • தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (வயது 38).

    இவர் கிரி சமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

    வழக்கம்போல் தொழிற்சாலைக்கு இன்று காலை வேலைக்கு சென்றார். தொழிற்சாலையில் ஏராளமான எலக்ட்ரிக் மெஷின்கள் உள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் சாமுவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் சாமுவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமுவேல் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணன் தெருவில் லஷ்மி என்பருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது.
    • வீட்டை இடிக்காமல் அதனை ஜாக்கி மூலம் உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணன் தெருவில் லஷ்மி என்பருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது. பழமையான இந்த வீடு சாலையின் அளவுக்கு தாழ்வாக இருப்பதால் மழை நீர் அடிக்கடி வீட்டுக்குள் புகுந்தது.

    இதனால் வீட்டை இடிக்காமல் அதனை ஜாக்கி மூலம் உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார். இதற்கான பணியை உத்தர பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற் கொண்டது. கடந்த சில நாட்களாக ஜாக்கியின் மூலம் வீட்டை உயர்த்தும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வடமாநில தொழிலாளி பேஸ்கார்(28) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஜாக்கிமூலம் கட்டிடத்தை மேலும் உயர்த்தினர். அப்போது திடீரென கட்டிடத்தின் ஒருபக்க சுவர் இடிந்து சரிந்து விழுந்தது,

    இந்த இடிபாடுகளில் பேஸ்கார் உள்பட 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதனை கண்டு மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தாம்பரம், மேடவாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளி பேஸ்கார் இடிபாடுகளில் சிக்கி பலியாகி கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் கட்டிட இடிபாடில் சிக்கிய தொழிலாளி ஓம்கார் என்பவருக்கு கால் எலும்பு முறிந்தது. மேலும் மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கட்டிடத்தை உயர்த்தியபோது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட தொழிலாள்கள் வேலைபார்த்து உள்ளனர். அதிர்ஷ்டவசமாக கட்டிடம் முழுவதும் இடியாமல் ஒரு பகுதி மட்டும் இடிந்ததால் மற்ற தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் முருகன். இவரது விவசாய தோட்டத்தில் கிணறு உள்ளது.

    இந்த கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதன், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வேலு ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள், தலைக்கவசம், வலைகள் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று அவர்கள் 3 பேரும் கிணற்றில் இறங்கி சரளை கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலு காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே அங்கிருந்தவர்கள் வேலுவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து அங்கு வந்த சின்னகோவி லான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மஞ்சுநாதன் மனைவி சரண்யா(22) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன், வீரசிகாமணியை சேர்ந்த ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக வட மாவட்டங்களில் இருந்து கிணறு வெட்டும் பணிக்காக ஒவ்வொரு குழுவினராக வந்து இங்கு தங்கி அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிணறு ஆழப்படுத்தும் பணி உள்ளதா என கேட்டு அதை செய்து வருகின்றனர். அவர்களாகவே சென்று வேலை கேட்கும்போது வேலை கொடுப்பவர்கள் எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வேலை வழங்குவதாக கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை முறைப்படுத்தி கிணறு ஆழப்படுத்தும் வேலைக்கான பணிகளை செய்யும்போது முறையான அனுமதி மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா? என கவனித்து அதன் பின் அனுமதி வழங்கினால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
    • விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம், சதுப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 31). இவரது மனைவி ஷீலா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு செந்தமிழ் செல்வனுடன் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோர் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர். இதில் செந்தமிழ் செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகையன் அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
    • முருகையன் நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தை சேர்த்து சாப்பிட்டார்.

    தருமபுரி:

    கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்க ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தென்பெண்ணை ஆறு ஓரமாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று சாமுவேல்
    • தகர செட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருந்தார்

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை புது நண்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சாமுவேல் (வயது 24) கடந்த 3 வருடமாக மேல் பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆறு ஓரமாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.நேற்று சாமுவேல் திடீரென்று அங்குள்ள தகர செட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருந்தார். இதனை பார்த்த சாமுவேல் தம்பி ராஜவேல் அதிர்ச்சி அடைந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சாமுவேல் உடலை கைப்பற்றி முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து சக்திவேல் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் இறப்பில் சந்தேகம் இருப்ப தாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    • பொதுமக்கள் நவ்ஷாத் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காட்டு யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(வயது38). தொழிலாளி.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால்(28) என்பவரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து வந்தனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென 2 பேரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து 2 பேரையும் தாக்கியது. இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி காயம் அடைந்த ஜமாலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நவ்ஷாத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் அவர்கள் எடுக்கவிடவில்லை. யானையை இந்த பகுதியை விட்டு விரட்ட வேண்டும், யானையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டம் விடிய, விடிய நீடித்தது.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக யானை தாக்கி இறந்த நவ்ஷாத்தின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை உடனே பிடிக்க வேண்டும்.

    இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு யானையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • சடையங்குப்பத்தில் உள்ள கண்டெய்னர் சரக்கு பெட்டகத்தில் சுரேஷ் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இரும்பு கொக்கி திடீரென அறுந்து சுரேஷ் மீது விழுந்தது.

    திருவொற்றியூர்:

    மணலி புது நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). திருவெற்றியூர் அருகே சடையங்குப்பத்தில் உள்ள கண்டெய்னர் சரக்கு பெட்டகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர், லாரியில் இருந்து கண்டெய்னர் பெட்டியை இறக்குவதற்காக உள்ள ராட்சத எந்திரத்தின் இரும்பு சங்கிலியை சரி பார்த்தார். அப்போது அதில் இருந்த இரும்பு கொக்கி திடீரென அறுந்து சுரேஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    • வெடி விபத்தில் அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    வட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதை முன்னிட்டு தற்போது இங்கு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தங்கல் மேல மாட வீதியைச் சேர்ந்த ரவி (வயது 58), சாமுவேல் ஜெயராஜ் ஆகிய 2 பேர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த இவர்கள் ஆலையில் உள்ள தனியறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தீ பரவி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அவை வெடிக்க தொடங்கியது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து நடந்த கட்டிடம் 80 சதவீதம் இடிந்து தரை மட்டமாகி உள்ளது. விபத்தில் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி(50). கள்ளிக்குடியில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்தார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்த மணி, பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இந்தநிலையில் கள்ளிக்குடி-டி.கல்லுப்பட்டி மெயின்ரோட்டில் அகத்தாபட்டி கண்மாய் கரையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பொதுமக்கள் கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று பார்த்த போது இறந்து கிடந்தது மணி என்பது தெரியவந்தது.

    • பாளை மேல குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலி தொழிலாளி.
    • மோட்டார் சைக்கிள் மோமி மணி தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்தா அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    பாளை மேல குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1-ந் தேதி குறிச்சி சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

    • தொழிலாளி சித்து விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார்.
    • மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியையொட்டி உள்ள எக்கத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்து (55). தொழிலாளி.

    இவர் நேற்று மதியம் விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஒற்றை யானை சித்துவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    தொடர்ந்து இறந்துவிட்ட சித்துவின் உடல் அருகே அந்த யானை நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அப்போது அவர் யானை தாக்கி இறந்து கிடப்பதையும் அவரது அருகில் ஒற்றை யானை நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தீ மூட்டி யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானை தாக்கி பலியான சித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×