search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி மரணம்"

    • கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி.

    இந்த நிலையில் நேற்று சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள செஞ்சகவுன் ஏரி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கோபால் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் சூளகிரி அருகே ஏனு சோனையை சேர்ந்த சதீஷ் என்பவர் அந்த ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்திருந்த நிலையில் கோபால் அங்கு மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சதீஷ் ஆத்திரமடைந்து கோபாலை தாக்கியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கோபால் அங்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

    கோபால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தாக்கப்பட்டு அவரை சடலத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து சதீசிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.
    • மது போதையில் கோழிக்கறியை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    குடிமகன்கள் மது குடிக்கும் பொழுது விதவிதமான தின்பண்டங்களை சாப்பிடுகின்றனர். மது குடிக்கும் போது சைவம், அசைவம் என எதையும் பார்ப்பதில்லை கையில் கிடைப்பதை சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

    ஆந்திராவில் மது குடிக்கும் போது சமைக்காத கோழிக்கறியை தின்றுவிட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கொத்த குடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் பீம நாயக் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று வீட்டில் வைத்து மது குடித்தார்.

    அப்போது வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.

    மது போதையில் அதனை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது. மதுவை குடித்தபடி சமைக்காத பச்சை கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டார்.

    சிறிய துண்டுகளை அவர் விழுங்கினார். பின்னர் மது குடித்த படி பெரிய கோழிக்கறி துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு அப்படியே விழுங்கினார்.

    அப்போது எலும்புடன் இருந்த அந்த கோழி கறி துண்டு அவரது தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நர்சாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பச்சைக்கோழி கறியை தின்று தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் பைக்கின் அருகே பிணமாக கிடந்தார்.
    • மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 60). இவர் கல்பாக்கம் அருகே உள்ள லத்தூரில் ஆலோபிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி வேலைக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    அதனால் அவரது குடும்பத்தார் சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் பைக்கின் அருகே பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன தனுஷ், 2 நாட்களாக எங்கே இருந்தார்? குடிபோதையில் விழுந்து இறந்தாரா? விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது எவரேனும் கொலை செய்து சாலையோரம் கொண்டு வந்து போட்டார்களா? என மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த ரத்த காயங்களுடன் வடிவேல் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
    • வீடு முழுவதும் ரத்த கரை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் செவந்தானூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (45).

    கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலுவின் மனைவி சாலை விபத்தில் இறந்து விட்டார்.

    அதன் பிறகு மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு வடிவேல் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்

    கல் உடைக்கும் வேலைக்காக கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் வடிவேல் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த ரத்த காயங்களுடன் வடிவேல் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவசர அவசரமாக வடிவேலுவின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக மின்சார எந்திரத்தை வரவழைத்து அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு சென்று வடிவேலுவின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்து உள்ளனர்.

    இந்த நிலையில் இதுகுறித்து நேற்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் உள்ளிட்ட போலீசார் வடிவேலு வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் வீடு முழுவதும் ரத்த கரை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வடிவேல் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் இது தொடர்பாக வடிவேலுவின் மகன்கள் சுந்தர்ராஜன், சேட்டு மற்றும் உடலை தகனம் செய்த உறவினர்கள், உடலை எரிக்க உதவிய மின்சார எந்திர உரிமையாளர் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த கூலி தொழிலாளியின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து தொழிலாளி குடித்திருக்கிறார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார்.

    அப்போது அவர், தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மரணம் குறித்து இயற்கைக்கு மாறாண மரணம் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது.
    • அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    டோலி கட்டி தூக்கி செல்லும்போது உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    10 கிலோமீட்டர் தூரம் வரை தாய், குழந்தையின் உடலை சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சாலை அமைக்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையை கட்டுவது போல் பிண்ணி கொண்டது.

    பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயன்ற போது சங்கரின் கையில் 2 முறை கடித்தது. வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகள்கள் எழுந்து கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனர்.

    இது குறித்து அந்த கிராமத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் அல்லேரியில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர்.

    ஆட்டு கொந்தரை மலை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினர் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்சுடன் காத்திருந்த மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் இறந்துபோன சங்கரின் உடலை தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர்.

    சாலை வசதி இருந்திருந்தால் நாங்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருப்போம். 3 கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்ததால் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. எனவே அல்லேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மலை கிராமத்தில் பாம்பு கடித்து அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார்.
    • மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி கிராமத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடுகளுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மூர்த்தி இறப்பதற்கு 3 நாட்கள் முன்பு இருந்தே தனக்கு அடிக்கடி தலை சுற்றல் வருவதாக கூறி மருத்துவமனைக்கு சென்று, மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மூர்த்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி சாவு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 7 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக நன்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உடல் கூறு ஆய்வில் மூர்த்தியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் குச்சி குத்தி ஏற்பட்டது தான் என் உறுதியாக தெரியவந்த பின்பு தான் நாங்கள் இயற்கை மரணம் என முடிவு செய்தோம்.

    சமூக வலைத்தளத்தில் இவ்வாறு அவதூறு பரப்புவது தவறு. மேலும் தேவைப்பட்டால் மூர்த்தியின் உடலை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளோம் எனவும், இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

    மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை சுட்டு கொன்றதாக கூறப்படும் 7 நபர்கள் யார்? என்றும் கேள்வி எழுதுள்ளது. எனவே இந்த விசயத்தில் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை விவரங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்று ஏற்காடு பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொதுமக்கள் நவ்ஷாத் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காட்டு யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(வயது38). தொழிலாளி.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால்(28) என்பவரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து வந்தனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென 2 பேரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து 2 பேரையும் தாக்கியது. இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி காயம் அடைந்த ஜமாலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நவ்ஷாத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் அவர்கள் எடுக்கவிடவில்லை. யானையை இந்த பகுதியை விட்டு விரட்ட வேண்டும், யானையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டம் விடிய, விடிய நீடித்தது.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக யானை தாக்கி இறந்த நவ்ஷாத்தின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை உடனே பிடிக்க வேண்டும்.

    இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு யானையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • மாடி படி ஏறிய போது ஏழுமலை 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ராமாபுரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 13- ந் தேதி மாலை பணி முடிந்து மதுபோதையில் வீடு திரும்பினார். பின்னர் மொட்டை மாடிக்கு செல்வதற்காக மாடி படி ஏறிய போது ஏழுமலை 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஏழுமலை உயிரிழந்தார். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவரப்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் பெயர், ஊர் விவரம் குறித்து விசாரிக்கும் போது அவர் திருச்சியை சேர்ந்த கந்தசாமி என்பதும் பல்லடம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

    கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது மர்மநபர்கள் அவரை அடித்துக்கொன்று கிணற்றுக்குள் வீசினரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருந்தாளியாக வந்த நபர் ஏரியில் பிணமாக மிதந்தது எப்படி என பூலாம்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • ஊருக்கு வந்த விருந்தாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ளது வெள்ளரி வெள்ளி கிராமம். இங்கு எடப்பாடி-கோனேரிப்பட்டி பிரதான சாலையை ஒட்டி பெரிய அளவிலான ஏரி அமைந்துள்ளது.

    இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் இந்த ஏரிக்கு குளிக்க சென்றனர். அங்கு கரையோரம் தண்ணீரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் பிணமாக மிதந்தவர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் , அவர் ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூரைச் சேர்ந்த சரவணன் (வயது 45), என்பதும், அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து விட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அவர் ஏரியில் சடலமாக மிதந்ததும் தெரிய வந்தது.

    விருந்தாளியாக வந்த நபர் ஏரியில் பிணமாக மிதந்தது எப்படி? என பூலாம்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊருக்கு வந்த விருந்தாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அரிசி ஆலையில் நேற்று காலை நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு தொழிலாளி அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
    • எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று இயங்குகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காளி முக்கியா (வயது 25) என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று காலை அரிசி ஆலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது. இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து வாலிபரின் சகோதரி நித்திஷ் முக்கியா பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×