ஓசூர் அருகே ஏரிகரையோரம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி

கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஓசூர் அருகே ஏரிகரையோரம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி.

இந்த நிலையில் நேற்று சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள செஞ்சகவுன் ஏரி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கோபால் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் சூளகிரி அருகே ஏனு சோனையை சேர்ந்த சதீஷ் என்பவர் அந்த ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்திருந்த நிலையில் கோபால் அங்கு மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சதீஷ் ஆத்திரமடைந்து கோபாலை தாக்கியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கோபால் அங்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

கோபால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தாக்கப்பட்டு அவரை சடலத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து சதீசிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com