மது போதையில் சமைக்காத கோழிக்கறியை தின்ற தொழிலாளி மரணம்

வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.மது போதையில் கோழிக்கறியை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது.
மது போதையில் சமைக்காத கோழிக்கறியை தின்ற தொழிலாளி மரணம்
Published on

திருப்பதி:

குடிமகன்கள் மது குடிக்கும் பொழுது விதவிதமான தின்பண்டங்களை சாப்பிடுகின்றனர். மது குடிக்கும் போது சைவம், அசைவம் என எதையும் பார்ப்பதில்லை கையில் கிடைப்பதை சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

ஆந்திராவில் மது குடிக்கும் போது சமைக்காத கோழிக்கறியை தின்றுவிட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கொத்த குடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் பீம நாயக் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று வீட்டில் வைத்து மது குடித்தார்.

அப்போது வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.

மது போதையில் அதனை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது. மதுவை குடித்தபடி சமைக்காத பச்சை கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டார்.

சிறிய துண்டுகளை அவர் விழுங்கினார். பின்னர் மது குடித்த படி பெரிய கோழிக்கறி துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு அப்படியே விழுங்கினார்.

அப்போது எலும்புடன் இருந்த அந்த கோழி கறி துண்டு அவரது தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நர்சாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சைக்கோழி கறியை தின்று தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com