search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman killed"

    சிதம்பரம் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி பிரேமா (வயது 50). இவர் பி.முட்லூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

    பிரேமாவின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டிகிடந்தது. இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வீட்டுமுன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் பரங்கிபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் பிரேமா பிணமாக கிடந்தார். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங் களும் இருந்தன.

    இதையடுத்து போலீசார் பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேமா பிணமாக கிடந்தது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பிரேமாவை யாராவது கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே நத்தப்பேட்டை - வாலாஜாபாத் இடையே உள்ள தண்டவாளத்தில் 50வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் மோதி பலியாகி கிடந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இதுபற்றி செங்கல்பட்டு ரெயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குடும்ப தகராறில் பெண்ணை அடித்து கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி குமரன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் மாரி (வயது42). இவரது மனைவி ரோகமணி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் நடத்தையில் மாரி சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

    கடந்த 14-ந்தேதியும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மாரி, மனைவியை அடித்து உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த ரோகமணி சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ரோகமணி இறந்தார். இந்த நிலையில் மாரி தாக்கியதால் தான் ரோகமணி இறந்ததாக அவரது தந்தை முத்து, அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ரோகமணியை மாரி தாக்கியதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பில் அவர் இறந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் இன்று காலை மாரி கைது செய்யப்பட்டார்.

    காரமடையில் 2-வது திருமணம் செய்த இளம்பெண் கழுத்தில் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கணு வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 35).

    இவர்களுக்கு மணிகண்டன்(7), சிவா(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். சின்னராஜ் கடந்த சில வருடங்களுக்கு இறந்து விட்டார். அதன் பிறகு மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது அங்கு வேலை பார்த்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1 வருடத்துக்கு முன்பு மாரியம்மாள் அந்த வாலிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்

    இந்நிலையில் மாரியம்மாள் காரமடையை அடுத்த தோலம்பாளையம் புதூர் பகுதியில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து அவரது தாய் செல்வி அங்கு விரைந்து சென்றார். மாரியம்மாளின் கழுத்தில் ரத்தக் காயங்கள் இருந்தது.

    உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரியம்மாள் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மாரியம்மாளின் கழுத்தில் ரத்தக்காயங்கள் இருந்ததால் அவரை யாரோ மர்மநபர்கள் கழுத்தை நெரித்தோ அல்லது ஆயுதங்களால் தாக்கியோ கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதட்சணை கொடுமையால் பெண் இறந்த வழக்கில் கணவர், மாமியார் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி குளிச்சோலை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்ற பாபு (வயது 42), தோட்ட உரிமையாளர். இவருக்கும், மஞ்சுளா என்பவருக்கும் திருமணமாகி தீரன் என்ற மகன் உள்ளார். தற்போது தீரனுக்கு 9 வயதாகிறது.

    கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் 23–ந் தேதி ஊட்டியில் ரோஸ்மவுண்ட் பகுதியில் பாபுவின் வீட்டில் மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக மஞ்சுளாவின் தந்தை மாரிச்சாமி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் பாபு, மாமியார் உமாதேவி (62), அவரது மகள்கள் கவிதா (41), சங்கீதா (37) ஆகியோர் துன்புறுத்தியதால் இறந்தார் என்றும் ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாபு, உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 5 ஆண்டாக நடந்து வந்த வரதட்சணை கொடுமையால் இளம்பெண் இறந்த வழக்கில் நேற்று இரவு நீதிபதி முரளிதரன் தீர்ப்பு அளித்தார். அதில் பாபு, உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.80 ஆயிரம் அபராத தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து பாபு உள்பட 4 பேரும் ஜாமீன் வழங்கும்படி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் பெற்றதும் 4 பேரும் கோர்ட்டின் பின்பக்கம் வழியாக சென்று அங்கு தயார் நிலையில் இருந்த காரில் ஏறி சென்று விட்டனர். வழக்கு தொடர்பாக நீதிமன்றம் முன்பு கார்களில் உறவினர்கள், வக்கீல்கள் திரண்டு இருந்தனர்.

    கருவடிக்குப்பத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக கணவர் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னரசன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரும், செல்லப்பெருமாள் பேட்டையை சேர்ந்த சுந்தரேசன் மகள் நிவேதாவும் (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பொன்னரசன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதில், விரக்தி அடைந்த நிவேதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதனைக்கண்ட பொன்னரசனின் தாய் செந்தமிழ்செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிவேதாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நிவேதாவின் தந்தை சுந்தரேசன் லாஸ்பேட்டை போலீசில் வரதட்சணை கொடுமையால் தனது மகளை பொன்னரசன் அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மகள் பிரச்சினையில் பெண்ணை அடித்துக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் உதயாநகரை சேர்ந்தவர் ஜான்கென்னடி. கூலி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா செல்வி(வயது 51). இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஜான்கென்னடிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜான்கென்னடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜான்கென்னடி அருகில் கிடந்த கம்பால் மல்லிகா செல்வியை சரமாரி தாக்கியுள்ளார். அப்போது இவர்களது மகன் ஜான்வாசிங்டன் தடுத்துள்ளார். அவரையும் ஜான் கென்னடி தாக்கியுள்ளார்.

    இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மல்லிகா செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மல்லிகா செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜான் கென்னடியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் கென்னடியின் மகள் சோனியா என்பவரை சங்கரன்குடியிருப்பில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அங்கு கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோனியா கணவருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இது ஜான் கென்னடிக்கு பிடிக்கவில்லை. சோனியாவை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனைவியுடன் கூறி வந்துள்ளார். இதே போல் நேற்று இரவும் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கம்பால் தாக்கி மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐகோர்ட்டு அருகே 18 இடங்களில் காயங்களுடன் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    புதூர்:

    மதுரை கே.புதூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட உத்தங்குடியில் ஐகோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில், 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக ஒத்தக்கடை கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி ராணிக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து புதூர் போலீசில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

    பிணமாக கிடந்த பெண்ணின் உடலில் 18 இடங்களில் காயங்கள் காணப்பட்டன. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் வாகனத்தில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது கடத்தி வந்து கற்பழித்துக் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தேனி அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் பெண்ணை கொன்ற ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அமராவதி நகரைச் சேர்ந்த தங்கவேல் மனைவி சரணமணி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    தங்கவேல் தனது மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். சரணமணி கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களாக சரணமணியை காணவில்லை என அவரது தங்கை கார்த்திகா செல்வி தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். நேற்று பூட்டி இருந்த அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் சரணமணி இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு பாகங்களில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் சரணமணி ஏலக்காய் தோட்டத்துக்கு திடீர் நகரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (35) என்பவரது ஜீப்பில் சென்று வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. ஆண்டிச்சாமி அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சரணமணியை அடித்து கொன்று விட்டு வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ஆண்டிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி மேட்டுத்தெருவில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று ஒரு சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் போலீசார், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி அந்த சாக்குமூட்டையை மேலே கொண்டு வந்தனர். அந்த சாக்கு மூட்டையை போலீசார் பிரித்து பார்த்த போது உள்ளே பலத்த காயத்துடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் இருந்தது.

    போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, பின்னர் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பெண்ணின் உடல் ஆடையின்றி இருப்பதால் மர்ம நபர்கள் அவரை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 

    இதைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற சம்பவம் கல்லாவி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னிமலையில் பெண்ணை கடத்தி கொலை செய்த தொழிலாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 24). தொழிலாளி.

    இதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    சிந்துவுக்கு தனசேகர் உறவு முறையில் தம்பி ஆவார். இந்த நிலையில் தனசேகரிடம் சிந்துவின் கணவர் ஆறுமுகம் குடும்ப செலவிற்கு ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டார்.

    நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர் தோப்பு பாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக சொல்லி இருக்கிறார். நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும் என கூறினார்.

    இதையடுத்து சிந்துவை அழைத்து செல்லுமாறு ஆறுமுகம் கூறினார். அதன் படி சிந்துவை மோட்டார் சைக்கிளில் தனசேகர் அழைத்துச் சென்றார். பின்னர் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகர் ரூ. 5 ஆயிரத்தை கொடுத்து விட்டு சிந்துவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றி விட்டேன் என கூறினார்.

    ஆனால் அதன்பின்னர் சிந்து வீட்டுக்கு வரவில்லை. அவரது செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஆறுமுகம் இது பற்றி தனசேகரை விசாரித்தார்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சிந்துவின் உறவினர்கள் தனசேகரனை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது சிந்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    மேலும் பிணத்தை ஊத்துக்குளி அருகே உள்ள அரசன்ன மலை வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக கூறினார். சிந்துவின் பிணத்தை அடையாளம் காட்டினார்.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார், சென்னிமலை ஆய்வாளர் செல்வராஜ், தடய அறிவியல் நிபுணர்கள் சென்றனர். அங்கு சிந்துவின் பிணம் கிடந்தது. பிணத்தின் மீது கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    பிணத்தை போலீசார் கைப்பற்றி தனசேகரை கைது செய்தனர். போலீசாரி டம் தனசேகர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் ஆறுமுகம் என்னிடம் பணம் கேட்டார். அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறினேன்.

    அவர் கூறியபடி பணம் வாங்க சிந்துவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். அவளது கழுத்தில் கிடந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

    விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய்? என கேட்டு தகராறு செய்தாள்.

    அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    பின்னர் அவள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக் கொடியை கழற்றி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் ரூ. 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன். பின்னர் அதே பணத்தில் ரூ. 5 ஆயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன்.

    எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்துவை பஸ் ஏற்றி விட்டதாக பொய் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன்.

    இவ்வாறு தனசேகர் கூறினார்.கொலையுண்ட சிந்துவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிந்துவை கொன்றதாக தனசேகர் கூறி இருந்தாலும் அவர் மட்டும்தான் சிந்துவை கொன்றாரா? அல்லது பலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்ணை அடித்துக்கொன்று தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல மரத்தோணி காலனி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கரேசுவரி (வயது 35). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமி (45). சந்திரசேகர் வெளிநாட்டில் வேலை செய்வதால் சங்கரேசுவரி குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சங்கரேசுவரியின் தனிமையை அறிந்து அவருக்கு கருப்பசாமி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு சங்கரேசுவரி மறுத்ததோடு அதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார்.இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஊர் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சங்கரேசுவரி ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.

    அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி முருகலட்சுமி (42) என்பவரும் ஆடு மேய்த்தார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, சங்கரேசுவரியின் கையை பிடித்து இழுத்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அருகில் நின்ற முருகலட்சுமியும் கருப்பசாமியை கண்டித்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அருகே கிடந்த கம்பை எடுத்து சங்கரேசுவரியை சரமாரியாக தாக்கினார். இதில் சங்கரேசுவரிக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதையடுத்து அங்கிருந்து கருப்பசாமி தப்பிச் சென்று விட்டார். கொலையை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்த முருகலட்சுமி இதுபற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சங்கரேசுவரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி உள்ள கருப்பசாமியை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சங்கரேசுவரிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமிக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே சங்கரேசுவரி கொலைபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அப்பகுதியில் கூடினர். ஆத்திரத்தில் அவர்கள் கருப்பசாமியின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே சங்கரேசுவரியை கொலை செய்த கருப்பசாமி ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்து பகுதியில் இன்று காலை வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சங்கரேசுவரி கொலையில் போலீசுக்கு பயந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண்ணை அடித்துக்கொன்று தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த மேல மரத்தோணி காலனி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

    ×