search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee suicide attempt"

    குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரது மகன் கோகுல் (5), மகள்கள் அஸ்வினி (4), மோனிஷா (1½). நேற்று சக்திவேல் தனது குழந்தைகள் 3 பேரையும் அழைத்து கொண்டு வாணியம்பாடி பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, 3 குழந்தைகளின் மீது ஊற்றிவிட்டு, அவரும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் உறவினர்களுக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உறவினர்கள் சக்திவேலையும், அவரது குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது குற்றமில்லை என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வாணியம்பாடி பஸ் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #adultery

    வாணியம்பாடி:

    கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு அவர் திடீரென கூச்சலிட்டார்.

    அப்போது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சில வாசகங்களை கூறியதோடு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சத்தமாக கூறி விட்டு தீவைக்க முயன்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தீக்குளிக்க முயன்றதை தடுத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #adultery 

    பெண்ணை அடித்துக்கொன்று தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல மரத்தோணி காலனி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கரேசுவரி (வயது 35). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமி (45). சந்திரசேகர் வெளிநாட்டில் வேலை செய்வதால் சங்கரேசுவரி குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சங்கரேசுவரியின் தனிமையை அறிந்து அவருக்கு கருப்பசாமி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு சங்கரேசுவரி மறுத்ததோடு அதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார்.இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஊர் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சங்கரேசுவரி ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.

    அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி முருகலட்சுமி (42) என்பவரும் ஆடு மேய்த்தார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, சங்கரேசுவரியின் கையை பிடித்து இழுத்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அருகில் நின்ற முருகலட்சுமியும் கருப்பசாமியை கண்டித்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அருகே கிடந்த கம்பை எடுத்து சங்கரேசுவரியை சரமாரியாக தாக்கினார். இதில் சங்கரேசுவரிக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதையடுத்து அங்கிருந்து கருப்பசாமி தப்பிச் சென்று விட்டார். கொலையை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்த முருகலட்சுமி இதுபற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சங்கரேசுவரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி உள்ள கருப்பசாமியை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சங்கரேசுவரிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமிக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே சங்கரேசுவரி கொலைபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அப்பகுதியில் கூடினர். ஆத்திரத்தில் அவர்கள் கருப்பசாமியின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே சங்கரேசுவரியை கொலை செய்த கருப்பசாமி ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்து பகுதியில் இன்று காலை வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சங்கரேசுவரி கொலையில் போலீசுக்கு பயந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண்ணை அடித்துக்கொன்று தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த மேல மரத்தோணி காலனி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

    சம்பளம் வழங்கப்படாததால் பாப்ஸ்கோ அலுவலகத்தில் ஊழியர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் நிறுவனமான பாப்ஸ்கோவில் நிரந்தர ஊழியர்கள் மற்றும் தினக்கூலி, வவுச்சர் ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க கோரி அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் குடும்பத்தினர் வறுமையில் வாழ்வதாகவும், குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்றும் அவர்கள் அரசிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் அரசிடம் போதிய நிதி இல்லாததால் அவ்வப்போது ஒரு சில மாதங்களுக்கான நிலுவை தொகை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்த பாப்ஸ்கோ தினக்கூலி ஊழியர் வேலு சம்பளம் வழங்கப்படாத வேதனையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இன்று காலை எலிமருந்தை (வி‌ஷம்) குடித்துவிட்டு தட்டாஞ்சாவடியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

    அலுவலகத்திற்கு வந்த சிறிது நேரத்தில் வேலு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக வேலுவை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து தொழிற்சங்கம், பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் மற்றும் போலீசாருக்கு தனித்தனியாக 3 கடிதங்களை எழுதி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தார்.

    ×