search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman died"

    நெல்லித்தோப்பில் மின்சாரம் தாக்கி உடல் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார்நகரை சேர்ந்தவர் ரொசாரியோ. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று விக்டோரியா வீட்டின் மொட்டை மாடியில் துணி காய வைக்க சென்றார்.

    ஈரத்துணியை விசிறும்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடி வழியே சென்ற உயர்மின்அழுத்த கம்பியில் துணி பட்டதால் விக்டோரியாவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய நிலையில் விக்டோரியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விக்டோரியா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி நான்குவழிச் சாலையில் நேற்று இரவு சுமார் 36 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த பெண் மீது மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். பலியான பெண் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. 

    இது குறித்து போலீசார் காரை ஓட்டி வந்த பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாணிக்கம் என்பவரை கைது செய்தனர்.
    கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த பெண் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள உண்ணாமலை செட்டிச்சாவடி பனங்காட்டுகாலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவானி(வயது 24). இவர்களுக்கு கவுதம்(2) என்ற மகன் உள்ளான். 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்தனர். 

    பவானி, கடலில் குளித்தார். அப்போது எழுந்த ராட்சத அலை, பவானியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன், ஓடிச்சென்று பவானியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பவானி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உறவினருடன் திருமணத்துக்கு சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி மஞ்சு கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனபாக்கியம் (வயது 55).

    இவர் தனது கணவரின் அண்ணன் காசியண்ணனுடன் ஒரு திணமணத்துக்கு சென்று விட்டு அம்மாபேட்டை அந்தியூர் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பெங்களூர் செல்வதற்காக ஒரு ஈசர் லாரி வந்தது. அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு மக்கள் கூட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் மீது மோதமல் இருக்க லாரியை வலது புறமாக திருப்பினார். இதில் நிலை தடுமாறி எதிரே வந்து கொண்டு இருந்த காசியண்ணன் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காசியண்ணன் மற்றும் தனபாக்கியம் தூக்கி வீசப்பட்டனர்.

    அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தனபாக்கியம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    காசியண்ணன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்ரசக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அம்மாபேட் டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சேரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிங்கம்புணரியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கிழக்காட்டு ரோடு ஆர்.ஆர்.டி. நகர் பகுதியில் வசிப்பவர் பொன்னுத்தாய் (வயது50). இவர் குடும்பத்தினருடன் திருப்பத்தூர் அருகே வைரன்பட்டில் உள்ள சாய்பாபா கோவிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். முதல்வாகனத்தில் பொன்னுத்தாயின் மகள் திருமலைக்குமாரி, உறவினர் விஜி (33) மற்றும் 2 குழந்தைகள் சென்றனர். விஜி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்றொரு வாகனத்தில் பேச்சியப்பன், பொன்னுத்தாய் ஆகியோர் சென்றனர்.

    திருப்பத்தூர் சாலையில் சிவபுரிபட்டி வகுத்துப்பிள்ளையார் கோவில் அருகே செல்கையில் திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக விஜி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    இதில் அதில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அதிர்ச்சியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுத்தாய் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு விஜி மற்றும் அவருடைய குழந்தைகள் ஜனனி மற்றும் பிரியதர்சினி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமலைக்குமாரி மற்றும் பொன்னுத்தாய் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருமலைக்குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மனநிலை பாதிக்கப்பட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பாண்டியம்மாள்(வயது 40). இவர் சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணென்னையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பாண்டியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். பெண் பார்க்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அசோக்நகரை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 74). இவரது உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளனர். இந் நிலையில் மீனாட்சி அவர்களை பார்க்க செஞ்சிக்கு சென்றார். பின்னர் உறவினர்கள் ஜெயந்தி (60), ஜெயலட்சுமி,  நிசாந்தன் (1) சாரதா உள்பட 5 பேருடன் ஒரு வாடகை காரில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றனர். காரை செல்வம் என்பவர் ஓட்டினார்.

    கார் இன்று அதிகாலை திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக  ஓடி சாலையில் ஒரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த ஜெயந்தி, ஜெயலட்சுமி, நிசாந்தன், சாரதா, கார் டிரைவர் செல்வம் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மீனாட்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வானூர் அருகே பாம்பு கடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வரகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 63). இவர் கோழிகள் வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இவரது கோழி முட்டையிட்டது. அதனை எடுக்க வெள்ளச்சி சென்றபோது, அங்கு கிடந்த பனை ஓலையில் இருந்த நல்லப்பாம்பு அவரை கடித்து விட்டது.

    மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளச்சி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிளியனூர் போலீசில் வெள்ளச்சியின் மகன் ஆறுமுகம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அய்யங்குட்டிபாளையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பலியானார்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே வி.நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அறுமுகம். இவரது மனைவி இளங்கலை (வயது60). இவர் நேற்று புதுவை கல்மேடுபேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் மாலையில் ஊர் திரும்ப அய்யங்குட்டிபாளையத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இளங்கலை மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட இளங்கலை படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளங்கலை பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து அவரது மகன் பிரதாப் கொடுத்த புகாரின்பேரில் வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×