search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman died"

    • கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த திரிகூடபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியம்மாள்(வயது 32).
    • ஆய்க்குடி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு ஆட்டோவும், முனியம்மாள் வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த திரிகூடபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியம்மாள்(வயது 32).

    இவர் அப்பகுதியில் உள்ள மாட்டு எலும்பு அரவை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி சென்றார். ஆய்க்குடி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு ஆட்டோவும், முனியம்மாள் வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் ஆட்டோவின் கம்பி வளைந்து முனியம்மாளின் கழுத்தில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுதொடர்பாக ஆய்க்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வைகையாற்றின் ரெயில்வே பாலம் அருகில் பெண் இறந்து கிடந்தார்.
    • அவர் எவ்வாறு இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் துரைச்சாமிபுரம் மேற்குதெருவை சேர்ந்த பொன்னையா மனைவி கருப்பாயம்மாள்(65). கணவர் இறந்துவிட்டதால் மகன் மற்றும் மகள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    உடல்நிலை சரியில்லாததால் மனவேதனையில் இருந்தார். சம்பவத்தன்று வீரபாண்டி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார்.

    அவரை தேடிச்சென்று பார்த்தபோது குன்னூர் வைகையாற்றின் ரெயில்வே பாலம் அருகில் இறந்து கிடந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (வயது 51).

    இவர்களது மகள் நியூனா (23). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி டெல்பின் வீட்டு காம்பவுண்டக்குள் குப்பையை தீ வைத்து எரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ டெல்பின் மீது பட்டு பலத்த தீகாயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டில் புணரமைக்கும் பணியில் நடந்தபோது திடீரென சுவர் இடிந்துவிழுந்தது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த பெண் பலியானார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே சில்லமர த்துப்பட்டியை சேர்ந்தவர் முரு கேசன் மனைவி அம்சமணி (வயது47).

    சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள வீட்டில் புணரமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது சுவரை இடித்தபோது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த அம்சமணியை தேனி க.வி லக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்த னர்.

    அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரி ழந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த பெண் பலியானார்.
    • திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே என்.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். அவரது மனைவி அம்மையத்தாள் (வயது 45). இவர் திண்டுக்கல் நாகல்நகரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு அவரது சகோதரர் வெள்ளைச்சாமி என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் நாகல் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அம்மையத்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியநாயக்கன்பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள பிளிச்சி பெட்டதாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 50). இவரது சொந்த ஊர் பொள்ளாச்சியை அடுத்த தொழில்பேட்டையாகும். கணவர் இறந்ததையடுத்து இங்கு வந்து வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை.

    இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியவில் வீட்டில் இருந்து மளிகை கடைக்கு செல்ல மேட்டுப்பாளையம் சாலையை கடந்துள்ளார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

    மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி பலியானார். வாலிபர் படுகாயமடைந்தார்.

    மதுரை:

    மதுரை திருப்பாலை அன்புநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). இவர் நேற்று காலை தனது உறவினர் வெங்கடராகவ கிருஷ்ணன் (20) என்ப வருடன் மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

    தேனி மெயின் ரோடு முடக்குச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள வளைவை கடக்க முயன்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரி டயர் கீர்த்தனா மீது ஏறியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயமடைந்த வெங்கடராகவகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காளவாசல்-தேனி பிரதான சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இருபுறமும் கடைகள் இருப்பதால் அங்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை.

    மேலும் காளவாசல் முதல் முடக்குச்சாலை வரை சென்டர் மீடியன் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது வழக்கதை விட அதிக நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் காளவாசல் பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ்களையும் நிறுத்தாமல் காளவாசல் திரும்பும் இடத்தில் அனைத்து பஸ்கள், ஷேர்ஆட்டோக்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை காளவாசல் பகுதியில் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீசார் கண்டு கொள்வதில்லை.

    எனவே இனிமேலாவது தனி கவனம் செலுத்தி காளவாசல்-தேனி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மணலி புதுநகரில் கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாதவரம்:

    மணலி புதுநகரில் இந்தியன் வங்கியில் காசாளராக பணி புரிந்து வருபவர் மகேந்திரன். நேற்று இரவு 7 மணியளவில் தனது மனைவி ஜெகதீஸ்வரி, மகள் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கொரட்டூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரி வண்டியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஸ்வரி உயிரிழந்தார். அவரது உடலை கண்டு கணவரும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திண்டுக்கல்லில் இன்று மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற தந்தை-மகன் காயம் அடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாறைக்குளம் என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 43). தனியார் கம்பெனியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (36). இவர்களுக்கு மாசிலா மணி (15), ஆறுமுகம் (13) என்ற மகன்கள் உள்ளனர்.

    இன்று காலை ஆரோக்கியம்மாள் குளித்து விட்டு துணிகளை காய போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது மின்சார வயர் அறுந்து தொங்கியதை கவனிக்காததால் அதில் கைப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

    வீட்டுக்குள் இருந்த கருப்பையா தன் மனைவியின் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவரது மகன் ஆறுமுகமும் ஓடி வந்து தனது தந்தையை பிடிக்க முயன்ற போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

    2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த ஆரோக்கியம்மாள் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி தாலுகா வரு‌ஷநாடு அருகே உள்ள கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவரது மனைவி அமுதா (45). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது.

    இதற்காக வரு‌ஷநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு சில நாட்களில் காய்ச்சல் சற்று குறையவே வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மீண்டும் அமுதாவுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது.

    தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு என்ன காய்ச்சல்? என டாக்டர்கள் தெரிவிக்க வில்லை. இது குறித்து வரு‌ஷநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். ஜெயங்கொண்டம் பிரிவு சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. 

    இதில் டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சியாமளா (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். 

    இந்நிலையில் நேற்று சின்னபிள்ளை என்பவரின் மனைவி இளஞ்சியம்(60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டியைச் சேர்ந்தவர் சேக்இப்ராகிம். இவரது மகள் சுல்தான் பேகம் (வயது28). சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குணமாகவில்லை.

    எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் சுல்தான்பேகம் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    எனவே அவரை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுல்தான்பேகம் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பன்றிகாய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu
    ×