search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle lorry crash"

    மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 50). சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தில் அக்கவுண்ட் சூப்பர்வைசவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா.

    நேற்று மாலை இருவரும் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    பொன்னேரியை அடுத்த சயனாவரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பக்தவச்சலத்தின் மீன் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

    சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சித்ரா சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சிறுவன் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த நல்லூர், கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சோனியா, மகன் ஜெயசீலன் (வயது 13). இன்று காலை ஜெயசீலன் மோட்டார் சைக்கிளில் அக்காள் சோனியாவை ஏற்றிக் கொண்டு வந்தார்.

    வடகரை ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிசென்ற எண்ணை டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசீலன் பலியானார். சோனியா லேசான காயத்துடன் தப்பினார். மாதவரம் போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வந்தவாசி வாலிபர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    செஞ்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மோசவாடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 21). இவரும் இவரது நண்பர்கள் மதி, அன்பு ஆகிய 3 பேரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டனர்.

    செஞ்சி அருகே உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிகொண்டு ராணிபேட்டையை நோக்கி லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராம்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் மற்றும் மதி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அன்பு படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மகள் லட்சுமிக்கு திருமணமாகி நேகாஸ்ரீ (2½) என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை விம்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தது.

    இன்று காலை குழந்தையை பள்ளியில் விடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். எண்ணூர் விரைவு சாலை சக்திநகர் பகுதியில் சென்றபோது எதிரே திருவொற்றியூரில் இருந்து மாதவரம் நோக்கி கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

    திடீரென்று லாரி தறிகெட்டு ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மறுபுறம் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தை நேகா ஸ்ரீயை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். டிரைவரை பிடித்து வைத்துக் கொண்டு அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். பின்னர் டிரைவரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்தனர். அவரது பெயர் காளிதாஸ் (40), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாப உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 25). நேற்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் நவக்கரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்களில் மீது மோதியது. 

    இதில் பலத்த காயம் அடைந்து உயருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சதீஸ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஸ்குமார் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நண்பர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் பெரியகாருகுடி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கார்த்தி (வயது 22). அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சக்திவேல்(25), இவர்களது நண்பர் மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மிதுன்.

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை திருக்குவளையில் இருந்து பெரிய காருகுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது கொளப்பாட்டில் இருந்து எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள், லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் கார்த்தி, சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மிதுன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த மிதுன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உறவினருடன் திருமணத்துக்கு சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி மஞ்சு கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனபாக்கியம் (வயது 55).

    இவர் தனது கணவரின் அண்ணன் காசியண்ணனுடன் ஒரு திணமணத்துக்கு சென்று விட்டு அம்மாபேட்டை அந்தியூர் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பெங்களூர் செல்வதற்காக ஒரு ஈசர் லாரி வந்தது. அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு மக்கள் கூட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் மீது மோதமல் இருக்க லாரியை வலது புறமாக திருப்பினார். இதில் நிலை தடுமாறி எதிரே வந்து கொண்டு இருந்த காசியண்ணன் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காசியண்ணன் மற்றும் தனபாக்கியம் தூக்கி வீசப்பட்டனர்.

    அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தனபாக்கியம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    காசியண்ணன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்ரசக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அம்மாபேட் டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சேரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செய்யாற்றில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தூசி:

    தூசி அருகே மடிப்பாக்கம் கிராமம் சமுதாய கூடம் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர், மாங்கால் கூட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மணிகண்டன் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்து மாலையில் காஞ்சீபுரத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். மாங்கால் கூட்ரோடு சந்திப்பில் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது செய்யாற்றில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை அருகே சாலை விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் பின்னர் பணி முடிந்து இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். மணப்பாறை-மதுரை நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த வடுகப்பட்டி பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சரவணன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் சப்-இன்ஸ் பெக்டர் ரூபினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ  மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×