என் மலர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்"
செஞ்சி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மோசவாடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 21). இவரும் இவரது நண்பர்கள் மதி, அன்பு ஆகிய 3 பேரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டனர்.
செஞ்சி அருகே உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிகொண்டு ராணிபேட்டையை நோக்கி லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராம்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் மற்றும் மதி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அன்பு படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
சென்னை எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகள் லட்சுமிக்கு திருமணமாகி நேகாஸ்ரீ (2½) என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை விம்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தது.
இன்று காலை குழந்தையை பள்ளியில் விடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். எண்ணூர் விரைவு சாலை சக்திநகர் பகுதியில் சென்றபோது எதிரே திருவொற்றியூரில் இருந்து மாதவரம் நோக்கி கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.
திடீரென்று லாரி தறிகெட்டு ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மறுபுறம் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தை நேகா ஸ்ரீயை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். டிரைவரை பிடித்து வைத்துக் கொண்டு அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். பின்னர் டிரைவரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்தனர். அவரது பெயர் காளிதாஸ் (40), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
கோவை:
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 25). நேற்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் நவக்கரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்களில் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்து உயருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சதீஸ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஸ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி மஞ்சு கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனபாக்கியம் (வயது 55).
இவர் தனது கணவரின் அண்ணன் காசியண்ணனுடன் ஒரு திணமணத்துக்கு சென்று விட்டு அம்மாபேட்டை அந்தியூர் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பெங்களூர் செல்வதற்காக ஒரு ஈசர் லாரி வந்தது. அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு மக்கள் கூட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் மீது மோதமல் இருக்க லாரியை வலது புறமாக திருப்பினார். இதில் நிலை தடுமாறி எதிரே வந்து கொண்டு இருந்த காசியண்ணன் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காசியண்ணன் மற்றும் தனபாக்கியம் தூக்கி வீசப்பட்டனர்.
அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தனபாக்கியம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
காசியண்ணன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்ரசக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அம்மாபேட் டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சேரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






