என் மலர்

  செய்திகள்

  மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- வந்தவாசி வாலிபர்கள் 2 பேர் பலி
  X

  மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- வந்தவாசி வாலிபர்கள் 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வந்தவாசி வாலிபர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  செஞ்சி:

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மோசவாடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 21). இவரும் இவரது நண்பர்கள் மதி, அன்பு ஆகிய 3 பேரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டனர்.

  செஞ்சி அருகே உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

  அப்போது அந்த வழியாக வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிகொண்டு ராணிபேட்டையை நோக்கி லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராம்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் மற்றும் மதி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அன்பு படுகாயம் அடைந்தார்.

  விபத்து குறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×