என் மலர்

  செய்திகள்

  மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
  X

  மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணப்பாறை அருகே சாலை விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  மணப்பாறை:

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் பின்னர் பணி முடிந்து இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். மணப்பாறை-மதுரை நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த வடுகப்பட்டி பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

  அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சரவணன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் சப்-இன்ஸ் பெக்டர் ரூபினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ  மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×