என் மலர்
செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி சிறுவன் பலி
செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சிறுவன் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த நல்லூர், கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சோனியா, மகன் ஜெயசீலன் (வயது 13). இன்று காலை ஜெயசீலன் மோட்டார் சைக்கிளில் அக்காள் சோனியாவை ஏற்றிக் கொண்டு வந்தார்.
வடகரை ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிசென்ற எண்ணை டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசீலன் பலியானார். சோனியா லேசான காயத்துடன் தப்பினார். மாதவரம் போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story