search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman attack"

    ஆண்டிப்பட்டி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு தேவராஜன் நகரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி அபிராமி(வயது29). இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் அபிராமி கோவித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்று குமரேசன் மற்றும் நாகராஜ் ஆகியோர் அபிராமியிடம் சென்று தகராறு செய்தனர். மேலும் அவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்கினர். இதை தடுக்கவந்த அபிராமியின் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து குமரேசன் மற்றும் அவரது நண்பர் நாகராஜை கைது செய்தனர்.

    பூமியான்பேட்டையில் ஏலச்சீட்டு தகராறில் பெண்ணை தாக்கியதாது தொடர்பாக தாய்-மகன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை தியாகராஜர்வீதியை சேர்ந்தவர் கணபதி ரவி. இவரது மனைவி விமலா (வயது38). இவர் பூமியான்பேட்டையை சேர்ந்த கிரிஜா என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். ஏலச்சீட்டு தவணைக்காலம் முடிந்தும் விமலாவுக்கு அதற்கான பணத்தை கிரிஜா கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு விமலா ஏலச்சீட்டு பணத்தை கேட்க கிரிஜா வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கிரிஜா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து விமலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து விமலா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    பெரம்பலூரில் அழகு நிலைய பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். #DMK #selvakumar
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் முத்து நகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது46). தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலரான இவர் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து தொழில் செய்து வந்தார்.

    பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சத்யா (40). பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் செல்வக்குமாருக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் சத்யா, தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக செல்வக்குமாரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யா நடத்தி வரும் அழகு நிலையத்திற்கு சென்ற செல்வக்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த செல்வக்குமார் சத்யாவை சரமாரி தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அழகு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.


    இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர், சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பி வைத்ததோடு, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.

    அந்த காட்சிகள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. அதில் செல்வக்குமார், சத்யாவை காலால் எட்டி உதைப்பது போன்றும், சரமாரி தாக்குவதும் போன்றும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க. வினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, செல்வக்குமாரை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி மோகனபிரியா, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் செல்வக்குமாரை பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட செல்வகுமார், நிருபர்களிடம் கூறுகையில், எனக்கும் பெரம்பலூர் நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரனுக்கும் பிரச்சனை உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர் தூண்டுதலின் பேரில் வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். பெரம்பலூர் போலீசார் எந்த வித முகாந்திரமும் இல்லாமலும், விசாரணை செய்யாமலும் என்னை கைது செய்துள்ளனர் என்றார்.

    இதனிடையே செல்வக்குமாரை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் ப வியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #DMK #Selvakumar
    பெரம்பலூரில் அழகு நிலைய பெண்ணை தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானதையடுத்து போலீசார் கைது செய்தனர். #DMK #selvakumar
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.

    கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தி.மு.க.வினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகு நிலையத்திற்குள் புகுந்து சத்தியாவை காலால் செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கிறார். பலமுறை சத்தியாவிற்கு உதை விழுகிறது. அப்போது சத்தியா அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று கதறுவதும் மற்ற பெண் ஊழியர்கள் அதை தடுக்க முடியாமல் தவிப்பதும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.


    இந்த சம்பவம்தான் வாட்ஸ்அப்பில் இன்று வைரலாக பரவியது. 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இதுவரை வெளியில் விடாமல் இப்போது அதனை வெளியிட்டது ஏன்? வெளியிட்டது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டது சத்தியா என்பது தெரிய வந்தது. செல்வகுமார் தாக்கியது தொடர்பாக சத்தியா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

    இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடைக்குள் புகுந்து தி.மு.க. பிரமுகர்கள் யுவராஜ், ரகுபதி, கணேஷ் உள்ளிட்ட கும்பல் காசு இல்லாமல் பிரியாணி கேட்டு தர மறுத்த கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதிர்ச்சியடைந்த மு.க. ஸ்டாலின் பிரியாணி கடைக்கு சென்று பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர்களையும் கட் சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #selvakumar

    கூடலூர் அருகே குடும்ப பிரச்சினையில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே கூடலூர் கே.ஜி.பட்டி பி.வி.கே. தெருவைச் சேர்ந்தவர் ராஜா மனைவி அன்னபெருமாயி. (வயது 55). இவரது உறவினர் கலைவாணியை அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவானந்தன் அன்னபெருமாயி மீது ஆத்திரத்தில் இருந்தார். சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்ற அன்னபெருமாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு அருகே பெண்ணை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரை சேர்ந்தவர் அருண்குமார் மனைவி இசைபிரியா (வயது 32). இவரது தம்பி ஸ்ரீதர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகளுக்கு போன் செய்து வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ஈஸ்வரனின் மனைவி சங்கரம்மாள் இதுபற்றி இசைபிரியாவிடம் தட்டி கேட்டார், இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவத்தன்று சங்கரம்மாள், அவரது மகள் தங்கம் ஆகியோர் இசைபிரியாவை கம்பால் தாக்கினர்.

    இதில் காயமடைந்த இசைபிரியா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து சங்கரம்மாள் அவரது மகள் தங்கம் ஆகியோரை தேடி வருகிறார்.

    கம்பம் அருகே குடும்ப பிரச்சினையில் தங்கையை தாக்கி தாயின் உடலை தூக்கி சென்ற விவசாயி உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்சாமி மனைவி புஷ்பம் (வயது51). இவரது தாய் கருப்பாயி கடந்த 15 ஆண்டுகளாக இவரது பராமரிப்பிலேயே இருந்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி கருப்பாயி இறந்து விட்டார். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கருப்பாயி மகன் ராசு என்பவர் தனது தாய் உடலை எடுத்து சென்று தனது வீட்டில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு புஷ்பம் இத்தனை நாட்கள் நான்தான் அவருக்கு எல்லா வி‌ஷயங்களையும் செய்து வந்தேன். எனவே இறுதி காரியத்தையும் நானே செய்து விடுகிறேன் என்றார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் புஷ்பத்தை தாக்கி கருப்பாயி உடலை எடுத்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் அபகரித்து சென்றதாக புஷ்பம் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராசு, மனைவி முருகேஸ்வரி, மகன்கள் சுரேந்தர், பிரசாத், மருமகள் உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உப்பளம் நேதாஜி நகரில் ஆட்டோ டிரைவரின் மனைவியை தாக்கி மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகர் அசோகன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் தனது நண்பர் கலையரசன் என்பவருடன் அன்னை இந்திரா நகர் வழியாக வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அசோக் (20), விக்கி (23), தமிழ் (25) மற்றும் அப்துல்கலாம் நகரை சேர்ந்த மனோ ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. பின்னர் அவர்கள் செந்தில் குமாரை தாக்க பாய்ந்தனர். அப்போது அவர்களை கலையரசன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து செந்தில் குமார் தனது வீட்டுக்கு வந்து விட்டார். ஆனாலும், ஆத்திரம் தீராத அந்த கும்பல் இரவு செந்தில்குமார் வீட்டுக்கு வந்தது.

    விபரீதம் நடக்க போவதை உணர்ந்து கொண்ட செந்தில் குமாரின் மனைவி ரோஸ்மேரி (22) கணவரை வீட்டின் உள்ளே பூட்டி வைத்து விட்டு அந்த கும்பலிடம் விசாரித்தார். ஆனால், அந்த கும்பல் செந்தில்குமாரை வீட்டில் இருந்து வெளியே அனுப்புமாறு மிரட்டியது. ஆனால், ரோஸ்மேரி மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ரோஸ்மேரியை தாக்கியது. இதனை தடுக்க முயன்ற அவரது தந்தையையும் தாக்கிய அந்த கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது. உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவேஅந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து அசோக் உள்ளிட்ட 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    திண்டுக்கல் அருகே வாங்கிய கடனை தராததால் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த தாதன் மனைவி முத்துலெட்சுமி (வயது 40). இவர்கள் குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக கடன் தொகையை கட்டாமல் இருந்தனர். இது குறித்து அவர்களுக்குள் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சின்னவர், முருகன் ஆகிய 2 பேரும் கடன் தொகையை கேட்டு சென்றுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமியை அடித்து தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.

    படுகாயமடைந்த முத்துலெட்சுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    #tamilnews
    திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னீஸ்வரி (வயது 40). இவருக்கும் தஞ்சாவூர் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வியாபாரி, உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    பொன்னீஸ்வரி தஞ்சையில் கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் உதய குமாருக்கும், தஞ்சையை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதையறிந்த பொன்னீஸ்வரி தனது கணவரை சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் உதயகுமார் மகாலட்சுமியுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உதயகுமாரும், மகாலட்சுமியும் சேர்ந்து பொன்னீஸ்வரியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை கைது செய்தார். தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகிறார்.
    தர்மாபுரியில் சொத்து தகராறில் மருமகளை தாக்கிய மாமனார் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை தர்மாபுரி வழுதாவூர் சாலையில் வசித்து வருபவர் ராஜ்மோகன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது தங்கை சபீதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்மோகனின் தந்தை சங்கரதாஸ் (வயது61) தனது பெயரில் உள்ள வீட்டை ராஜ்மோகனின் பெயரில் எழுதி வைத்து சபீதாவுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கூறினார்.

    ஆனால் ராஜ்மோகன் தங்கை சபீதாவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சங்கரதாஸ் வீட்டை பாகம் பிரித்து சபீதாவுக்கு கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால் ராஜ்மோகன் இதற்கு மறுத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ராஜ்மோகன் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி சாதனா (23) மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது சங்கரதாஸ், அவரது மனைவி சிவகாமி, மகள் சபீதா ஆகியோர் ராஜ்மோகன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டை பாகம் பிரித்து கொடுப்பது குறித்து அவர்கள் சாதனாவிடம் கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கரதாஸ், சிவகாமி மற்றும் சபீதா ஆகிய 3 பேரும் சேர்ந்து சமையல் கரண்டியால் சாதனாவை தாக்கினர்.

    இதுகுறித்து சாதனா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சங்கரதாசை கைது செய்தனர். மேலும் சிவகாமி, சபீதா ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஏ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் முத்தையா. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு நாகஜோதி, சிவசுதா என்ற 2 மகள்களும் முத்துச்செல்வம் என்ற மகனும் உள்ளனர்.

    நாகஜோதியின் கணவர் ஆண்டிச்சாமியும், சிவசுதாவின் கணவர் முத்துராஜாவும் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.

    தற்போது முத்தையா தனது மகன் முத்துச் செல்வத்துக்காக புதிய வீடு கட்டி வந்தார். இது தொடர்பாக விடு முறையில் ஊருக்கு வந்திருந்த மருமகன்கள் ஆண்டிச்சாமியும், முத்து ராஜாவும் மாமனாரிடம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது.

    நேற்றும் ஆண்டிச்சாமி இதுதொடர்பாக மனைவி நாகஜோதியிடம் பிரச்சினை செய்துள்ளார். அப்போது தன்னை தாக்கியதாக ஆண்டிச்சாமி, முத்துராஜா உறவினர் முத்து ஆகியோர் மீது நாகையாபுரம் போலீசில் நாகஜோதி புகார் செய்தார்.

    அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராணுவ வீரர்கள் ஆண்டிச்சாமி, முத்துராஜா உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    ×