என் மலர்

  நீங்கள் தேடியது "Perambalur dmk Member arrest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூரில் அழகு நிலைய பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். #DMK #selvakumar
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் முத்து நகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது46). தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலரான இவர் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து தொழில் செய்து வந்தார்.

  பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சத்யா (40). பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் செல்வக்குமாருக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் சத்யா, தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக செல்வக்குமாரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யா நடத்தி வரும் அழகு நிலையத்திற்கு சென்ற செல்வக்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த செல்வக்குமார் சத்யாவை சரமாரி தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அழகு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.


  இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர், சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பி வைத்ததோடு, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.

  அந்த காட்சிகள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. அதில் செல்வக்குமார், சத்யாவை காலால் எட்டி உதைப்பது போன்றும், சரமாரி தாக்குவதும் போன்றும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க. வினர் அதிர்ச்சியடைந்தனர்.

  இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, செல்வக்குமாரை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி மோகனபிரியா, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் செல்வக்குமாரை பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

  முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட செல்வகுமார், நிருபர்களிடம் கூறுகையில், எனக்கும் பெரம்பலூர் நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரனுக்கும் பிரச்சனை உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர் தூண்டுதலின் பேரில் வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். பெரம்பலூர் போலீசார் எந்த வித முகாந்திரமும் இல்லாமலும், விசாரணை செய்யாமலும் என்னை கைது செய்துள்ளனர் என்றார்.

  இதனிடையே செல்வக்குமாரை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் ப வியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #DMK #Selvakumar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூரில் அழகு நிலைய பெண்ணை தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானதையடுத்து போலீசார் கைது செய்தனர். #DMK #selvakumar
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.

  கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  தி.மு.க.வினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகு நிலையத்திற்குள் புகுந்து சத்தியாவை காலால் செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கிறார். பலமுறை சத்தியாவிற்கு உதை விழுகிறது. அப்போது சத்தியா அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று கதறுவதும் மற்ற பெண் ஊழியர்கள் அதை தடுக்க முடியாமல் தவிப்பதும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.


  இந்த சம்பவம்தான் வாட்ஸ்அப்பில் இன்று வைரலாக பரவியது. 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இதுவரை வெளியில் விடாமல் இப்போது அதனை வெளியிட்டது ஏன்? வெளியிட்டது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்தநிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டது சத்தியா என்பது தெரிய வந்தது. செல்வகுமார் தாக்கியது தொடர்பாக சத்தியா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

  இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடைக்குள் புகுந்து தி.மு.க. பிரமுகர்கள் யுவராஜ், ரகுபதி, கணேஷ் உள்ளிட்ட கும்பல் காசு இல்லாமல் பிரியாணி கேட்டு தர மறுத்த கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதிர்ச்சியடைந்த மு.க. ஸ்டாலின் பிரியாணி கடைக்கு சென்று பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர்களையும் கட் சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #selvakumar

  ×