search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife complaint"

    செய்யாறில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் குறித்து இரண்டாவது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த திருமணி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த 2012-ம் ஆண்டில் செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சுதா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    சுதாவுடன் ஒரு ஆண்டு குடும்பம் நடத்தி விட்டு 2013-ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார். அதைத்தொடர்ந்து, திருமணி கிராமத்திலேயே வசிக்கும் தனது அத்தை மகள் அனிதா (22) என்ற இளம்பெண்ணை வற்புறுத்தி இனி ஒழுங்காக இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்தார்.

    தட்சிணபிரியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருமணியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்துவந்த சரிதா (20) என்ற இளம்பெண்ணை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பார்த்தார். சரிதாவிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி காதலை சொன்னார். சரிதாவும் குமரேசனை காதலித்தார். இதையடுத்து, சரிதாவை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    யாருக்கும் தெரியாமல் இருக்க சரிதாவை வேலூரில் குடித்தனம் வைத்தார். இந்த நிலையில், 2-வது மனைவி அனிதாவுக்கு விவகாரம் தெரியவந்தது. அவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து குமரேசனை கைது செய்தனர்.

    மது போதையில் கார் டிரைவர் இறந்ததாக கருதப்பட்டதில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடக்கிறது.
    பூந்தமல்லி:

    சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36), கார் டிரைவர். இவருடைய மனைவி நளினி (34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 15-ந் தேதி வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நண்பர் குமரேசன் (36) என்பவருடன் ராஜேஷ் மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் ராஜேஷ் காரிலேயே படுத்துக்கொண்டார்.

    இதுபற்றி ராஜேசின் மனைவி நளினிக்கு செல்போன் மூலம் குமரேசன் தகவல் தெரிவித்தார். நளினி கேட்டுக்கொண்டதால் ராஜேசுடன் காரை அவரது வீட்டுக்கு ஓட்டிவந்து வாசலில் நிறுத்தினார். கார் சாவியை நளினியிடம் கொடுத்துவிட்டு குமரேசன் சென்றுவிட்டார். ராஜேஷ் அதிக போதையில் இருந்ததால் அவரை நளினியால் வீட்டுக்குள் அழைத்துச்செல்ல முடியவில்லை. எனவே அவரை காரிலேயே படுக்க வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, காருக்குள் ராஜேஷ் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நளினி மற்றும் அவரது உறவினர்கள் ராஜேசை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ராஜேஷ் இறந்துவிட்டதாக நினைத்த அவரது உறவினர்கள் இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்காமல் அவரது உடலை வீட்டுக்கு கொண்டுவந்து இறுதிச்சடங்குகள் செய்து புதைத்துவிட்டனர்.

    இந்த நிலையில், ராஜேஷ் குடிபோதையில் இறக்கவில்லை. அவரை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாக அவரது நண்பர் குமரேசன் குடிபோதையில் உளறினார். இதுபற்றி தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் குமரேசனை பிடித்து விசாரித்தனர். அதில் கள்ளக்காதல் தகராறில் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    ராஜேசுக்கு அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி (34) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ராஜேஷ் அடிக்கடி பத்மாவதி வீட்டுக்கு சென்று அவரை தொந்தரவு செய்துவந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் ராஜேசின் தொந்தரவு அதிகரித்ததால், குமரேசன் மூலம் ராஜேசை தீர்த்துக்கட்ட பத்மாவதி முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று மது போதையில் இருந்த ராஜேசை, குமரேசன் மீண்டும் மது அருந்தலாம் என்று கூறி அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு தான் தயாராக விஷம் கலந்து வைத்திருந்த மதுவை அவருக்கு கொடுத்தார். அதை வாங்கி குடித்த ராஜேஷ் தடுமாறி காரில் அமர்ந்தார்.

    பின்னர் நளினிக்கு தகவல் தெரிவித்து அவரே காரில் கொண்டுபோய் வீட்டில் விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து குமரேசன் மற்றும் பத்மாவதி ஆகிய 2 பேரை பிடித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று  காலை ராஜேசின் உடலை தோண்டி எடுத்து, அந்த இடத்திலேயே தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
    மதுரவாயலில் மதுவில் வி‌ஷம் கலந்து கார் டிரைவர் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    போரூர்:

    மதுரவாயல் மெயின் ரோடு ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கார் டிரைவர். இவரது மனைவி நளினி.

    ராஜேசுக்கு குடிபழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு ராஜேஷ் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக மனைவி நளினிக்கு ராஜேசின் நண்பர் குமரேசன் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு சென்ற நளினி மயங்கி கிடந்த ராஜேசை காரில் வீட்டிற்கு கொண்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்த ராஜேசை மயங்கிய நிலையிலேயே இருந்தார்.

    இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராஜேஷ் உடலை மதுரவாயல் ஓம் சக்தி நகரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து செய்தனர்.

    இந்நிலையில் கணவர் ராஜேஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் குடித்த மதுபானத்தில் யாராவது வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மதுரவாயல் போலீசில் நளினி திடீரென புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேசின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    ஈரோடு அருகே மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் மனைவி புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, நசியனூர் அருகே உள்ள செம்மாம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது54). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் செல்வி(51).

    இவர்களுக்கு விஜயா என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி கணவரும், மனைவியும் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பிறகு மனைவியிடம் ‘நீ வீட்டுக்கு போ.நான் எனது அம்மா வீட்டுக்கு போய் வருகிறேன்’ என்று கூறி விட்டு ஆறுமுகம் போனார்.

    அன்று சைக்கிளில் போனவர்தான் இன்று வரை வரவில்லை. அவர் எங்கு சென்றார்?. என்ன ஆனார்?. இப்போது எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை.

    கடந்த 11 ஆண்டுகளாக மாயமான கணவரை பல இடங்களில் தேடி..தேடி பிறகு அப்படியே மறந்து விட்டார் செல்வி.

    இந்த நிலையில் திடீரென கணவர் நினைப்பு வந்த மனைவி செல்வி. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசில் “என் கணவரை காணவில்லை. கண்டுபிடித்து கொடுங்க” என்று கூறினார்.

    போலீசாரும் புகார் எழுதி கொடுங்கம்மா... தேடுகிறோம்...என்று கூறினர்.

    அதன்படி செல்வி எழுதி கொண்டு வந்த புகார் மனுவை போலீசாரிடம் கொடுக்க அதை படித்த போலீசாருக்கு தூக்கு வாரி போட்டது. 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து கொடுங்கள்...என்று மனுவில் எழுதி இருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.

    என்னம்மா உன் கணவர் காணாமல் போய் 11 ஆண்டுக்கு பிறகு இப்போது வந்து புகார் கொடுக்கிறியே..இது நாள் வரை ஏன் புகார் கொடுக்க வரவில்லை? என கேட்டனர்.

    அதற்கு செல்வி“ நான் உலக நடப்பு தெரியாதவள். வெளி உலகம் பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது. யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். காணாமல் போன என் கணவர் வருவார்...வருவார்..என இத்தனை வரு‌ஷமா காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. எனக்கு சிலர் போலீசில் போய் புகார் கொடு என்று கூறினார்கள். அதனால் தான் இப்போது வந்து புகார் கொடுக்கிறேன் என கணவரை கண்டுபிடித்து தாருங்கள்” என்று கூறினார்.

    புகாரை பெற்ற போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். #tamilnews
    தேமுதிக பிரமுகர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33). தே.மு.தி.க. நகர செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி வளர்செல்வி (28).

    கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த முருகன் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சி அடைந்த முருகனின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். கண்டு பிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை பிருத்திவீமங்கலம் மணிமுக்தாறு பாலத்தின் அடியில் முருகன் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து முருகனின் மனைவி வளர்செல்வி தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். அதில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி அருகே மனைவி, 2 குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள அரண்மனைபுதூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது34). இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் செல்வதாக கூறிசென்ற பொன்னுத்துரை மாயமானார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அபிராமி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார்.

    எங்கு தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பொன்னுத்துரையை தேடி வருகின்றனர்.

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக டெல்லி முதல்வரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். #ArvindKejriwal #Delhisitinprotest

    புதுடெல்லி:

    டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணை நிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தர விடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    நேற்று 4-வது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தர்ணாவில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினர் நேற்று டெல்லி கவர்னர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் வேறு வழியின்றி தர்ணாவில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்காமலேயே வீடு திரும்பினர். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.



    அந்த பதிவில், மதிப்பிற்குரிய துணை நிலை ஆளுநர் அவர்களே, முதல்வரின் தாயார் மற்றும் மனைவி, துணை முதல்வரின் மனைவி, சத்யேந்தர் ஜெயினின் மனைவி உள்ளிட்ட நாங்கள் நான்கு பெண்களும் உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதத்தில் இருப்பதால் உங்கள் வீடு அமைந்திருக்கும் சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறதா? தயவுசெய்து தலையிடுங்கள். தயவுசெய்து அனைவரை கண்டும் அஞ்சாதீர்கள், என கூறியிருந்தார்.

    மற்றொரு பதிவில், துணை நிலை ஆளுநர் அவர்களே, நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம், ஆனால் எங்கள் குடும்பத்தை சந்திக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கைதிகள் கூட தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர், என கூறியுள்ளார். #ArvindKejriwal #Delhisitinprotest
    ராஜபாளையம் அருகே கணவர் சாவில் மர்மம் உள்ளது என அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவரம் பட்டியைச்சேர்ந்தவர் மாடசாமி (வயது 26). டிராக்டரில் மணல் ஏற்றும் லோடு மேனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு மாடசாமியை அம்மன்பொட்டல் தெரு வைச்சேர்ந்த பால்பாண்டி, மேல ஆவரம்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்ததில் மாடசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்று கூறி மாடசாமியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.

    அதிர்ச்சியடைந்த மாடசாமியின் மனைவி ராமலட்சுமி மற்றும் உறவினர்கள் மாடசாமியை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாடசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராமலட்சுமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மதுரை அருகே பணிக்கு சென்ற கணவர் திடீர் மாயமானது குறித்து போலீசில் மனைவி புகார் அளித்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லாணை பகுதியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது32). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பணிக்கு சென்ற பட்டாபிராமன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சூரியகலா சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தார்.

    அப்போது அங்கு பணிபுரிந்துவரும் பெண் ஊழியர் செல்வி என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் பட்டாபிராமன் மாயமானதாக தெரியவந்தது.

    இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசில் சூரியகலா புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×