search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishnu"

    • சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல நிலை கிட்டும்.
    • அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும்.

    ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமையில் கருட தரிசனம் செய்ய சர்வ ரோகங்களை (நோய்கள்) நிவர்த்தி செய்து தேக,

    மன ஆரோக்கியத்தைத் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு!

    திங்கள்: ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷம் நீங்கி சுபிட்சம் பெறவும்,

    மாதுர் தோஷம், சாபம் நிவர்த்தி அடைய திங்கட்கிழமை கருடதரிசனம் செய்யவும்.

    கடகராசி, லக்னகாரர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வை எதிர்நோக்கலாம்.

    ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12ல் இருப்பவர்களும் நீச்சம், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற தீய

    கிரகங்களின்சேர்க்கை, பார்வை பெற்றிருப்பது போன்ற சந்திர பாதிப்படைந்த ஜாதகர்கள்

    திங்கட்கிழமையில் சந்திர ஓரையில் கருட தரிசனம் செய்வது சந்திர தோஷ நிவர்த்தியும், சந்திர அனுக்கிரகமும் பெற்றுத்தரும்!

    லக்னத்திற்கு 1, 5, 9ல் சந்திரன் இருப்பவர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது

    வாழ்வில் பெரிய முன்னேற்றங்களை அடையலாம்.

    செவ்வாய்: செவ்வாய் கிரகம் 6, 8, 12ல் உள்ளவர்களும், நீச்சம் அஸ்தமனம், பகை, வக்ரம், பாதகஸ்தானம், சனி,

    ராகு, கேது தொடர்பு பெற்றிருத்தல் போன்ற நிலையில் உள்ள ஜாதகர்கள் செவ்வாய்க்கிழமை

    கருட தரிசனம் செய்வது செவ்வாய் கிரக தோஷம் நீங்கி, யோக பலன்கள் சித்திக்கும்.

    நிலம், வீடு, மனைகள் போன்றவற்றில் குறைகள், பிரச்சினைகள் நிவர்த்தி அடைய

    செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் உத்தம பலன் தரும்!

    செவ்வாய்க்கிரகத்தின் ராசி, லக்னம், நட்சத்திரங்களில் கிழமையில், ஓரையில் பிறந்தவர்கள்

    செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் சிறந்த நிலை அடைய வழி வகுக்கும்.

    வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கிட, சுபிட்சம் ஏற்பட வேண்டுவோர்

    தவறாமல் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    புதன்: அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும்.

    கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி வெற்றிகள் ஏற்பட புதன்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்!

    புதனின் ராசி, லக்ன, நட்சத்திரங்களில் (மிதுனம், கன்னி, ஆயில்யம், கேட்டை, ரேவதி) பிறந்தவர்கள்

    புதன்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும்.

    புதன் ஜாதகத்தில் 6, 8, 12ல் பாதகம், நீச்சம், வக்கிரம், அஸ்தமனம், நீச்சாம்சம் போன்ற எதிரிடையான

    அமைப்பைப் பெற்றவர்கள் புதன்கிழமையில் கருட தரிசனம் செய்வது நல்லது.

    வியாழன்: வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது

    வியாழக்கிழமை மாலை நேர கருட தரிசனம் ஆகும். இன்றும் வியாழக்கிழமை கருட தரிசனத்திற்காக

    ஏரிக்கரைகளில் பல கருட தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைபோகத்தைக் காணலாம்.

    குருவார கருட தரிசனத்தால் எடுத்த காரிய வெற்றி, பணவரவு, சத்ரு ஜெயம்,தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி ஆகும்!!

    புத்திரப்பேறு வேண்டுவோர் குருவார கருட தரிசன பலன்களை ஜோடியுடன் தரிசனம் செய்ய வேண்டும்.

    வெள்ளி: வெள்ளிக்கிழமை கருட தரிசனம் நோய், கடன், சத்ரு உபாதைகள் நீங்க வழிவகுக்கும். கொடுத்த கடன் வசூல் ஆகும்.

    சுக்கிரன் ஜாதகத்தில் 6, 8, 12லும், நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், பாதகம், பகை, பாபிகளின் சூழல் போன்ற

    எதிரிடையான தன்மையில் இருந்தால் வெள்ளிக்கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்!

    சுபிட்சங்கள் உண்டாகும்.

    சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்னம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்

    சுக்கிர வார கருட தரிசனம் செய்வது வாழ்வில் உன்னத நிலையைத் தரும்.

    சனிக்கிழமை: வேலைக்காரர்கள், ஊழியர்கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர்கள்

    சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல நிலை கிட்டும்.

    சனி ஜாதகத்தில் 6, 8, 12லும், பாதகம், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற

    கிரக தொடர்புகள் பெற்று எதிரிடையாக இருப்பின், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால்

    சனியின் எதிர்மறை பலன்கள் தணியும். சுபங்கள் உண்டாகும்.

    ஞாயிறு: பிதுர் சாபம், தோஷம், பிதுர் துரோகம், தந்தை வர்க்காதிகளின் குரோத, விரோத எண்ணங்களின்

    தாக்கங்கள் போன்ற தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    சூரியன் ஜாதகத்தில் 6, 8, 12 பாதகம், நீச்சம், பகை, செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற எதிரிடையான

    பலன்கள் விலகி சுபங்கள் ஏற்பட ஞாயிறு கருட தரிசனம் செய்ய வேண்டும்!

    சூரியனின் சிம்ம ராசி, லக்னம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

    ஞாயிற்றுக் கிழமையில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.இதனால் வாழ்வில் நல்ல ஏற்றம், மாற்றம் காணலாம்.

    • வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
    • நல்ல நினைவாற்றல் பெருகும்.

    கருட தரிசனம் எங்கு, எப்போது, எப்படி, எத்திசையில் தரிசித்தாலும் நன்மையே! கருட தரிசனம் கிடைப்பதே

    மாபெரும் பாக்கியம் ஆகும். பத்மபுராணத்தில் கூறப்படும் கருட அருளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு

    • வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.

    • சத்ருஜெயம் கிடைக்கும்.

    • நல்ல நினைவாற்றல் பெருகும்.

    • வாதத்திறமை, வானில் உலவுதல் உணடாகும்.

    • வித்தையில் தேர்ச்சி, இந்திரஜாலம் காட்டுதல் அதிகரிக்கும்.

    • நீர், நெருப்பு, காற்றில் அச்சமின்றி உலவுதல் வரும்.

    • மயங்க வைத்தல், உணர்விழக்கச் செய்தல் தரும்.

    • மனை அமைப்புகளைக் கொண்டு வாஸ்துவில், சிங்க மனை, யானை மனை, கருடமனை எனப் பலவகை உள்ளன.
    • மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும். நல்ல வெற்றி, முன்னேற்றம் உண்டாகும்.

    மனை அமைப்புகளைக் கொண்டு வாஸ்துவில், சிங்க மனை, யானை மனை, கருடமனை எனப் பலவகை உள்ளன.

    இதில் கருடமனை அமைப்பில் வீடு கட்டினால் அந்த வீட்டிற்கு விஷஜந்துக்கள், சத்துருக்களால் எப்போதும் பாதிப்பு ஏற்படாது.

    கருடனின் அருட்கடாட்சம் எப்போதும் இருக்கும்.

    வீடுகட்ட தொடங்கும்போது கருடன் தரிசனம் கொடுப்பதும், கருடன் வட்டமிடுவதுமான சகுணம் கண்டால் அந்த வீடு நல்ல முறையில் எளிதாகக்கட்டி முடித்து, கிரக பிரவேசம் செய்யப்படும்.

    மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும். நல்ல வெற்றி, முன்னேற்றம் உண்டாகும்.

    • கருடனின்குரு பிரகஸ்பதி.
    • குரு, புதன் கிரகங்களின் தோஷ பரிகாரமாக கருட வழிபாடு செய்ய உத்தம பலனைத்தரும்.

    ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற

    பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.

    கருட மந்திர ஜெபம், காயத்ரி ஜெபம், பஞ்சாட்சரி, அஷ்டோத்ரம் போன்ற கருட சம்பந்தமான மந்திர

    ஜெபபாராயணங்கள் செய்வதால் சர்ப்பதோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆகும்.

    கருடனுக்குரிய முக்கிய விசேஷ ஹோம, யாகங்கள் செய்து வழிபாடு செய்வது அதீத பலத்தையும்,

    மிக சிறப்பான பலன்களை வாரி வழங்கும்.

    ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள குரு, புதன் கிரகங்களின் தோஷ பரிகாரமாக கருட வழிபாடு செய்ய உத்தம பலனைத்தரும்.

    கருடனின் குரு பிரகஸ்பதி.

    • எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
    • படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்புக்கிடைக்கும்.படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    *எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    *சர்வரோக நிவாரணம், பிணி பீடைகள் நிவர்த்தி கிடைக்கும்.

    * பில்லி, சூன்யம், ஏவல் கண்திருஷ்டி தோஷம், செய்வினைக் குற்றம் போன்றன நிவர்த்தி ஆகும்.

    *ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும் கண்டாதி தோஷங்கள், விபத்து, ஆயுள்பயம்

    போன்றன நிவர்த்தி ஆகும்.

    *போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும்.

    *நிலம், வீடு, மனைபோன்றவற்றில் லாபம் ஏற்படும்.

    *திருமண பாக்கியம் கைகூடுதல், புத்திரதோஷம்

    நீங்கி, புத்திரப்பேறு உண்டாகும்.

    *படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி

    பெறுதல், வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

    *அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில்,

    வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.

    *குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌக்கியம் உண்டாகும்.

    *கிடைக்க வேண்டிய சொத்துகள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல்

    போன்றன கருட பகவான் அருளால் கிடைக்கும்.

    * நியாயமான எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும்.

    *விஷ ஜந்துக்கள், சர்ப்ப வாக்குகளில் இருந்து சதா பாதுகாப்பு சக்தி கிடைக்கும்.

    *விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

    • இவர் தட்சப்பிரஜாபதியின் மகள்களான கத்ரு, விநதை என்பவர்களை மணந்து கொண்டார்.
    • அவர்கள் சுண்டு விரலின் பாதிக்கும் குறைவான உயரத்துடன் காணப்பட்டனர்.

    மரீசி எனும் மகரிஷிக்கு கச்யப மகரிஷி மகனாகப் பிறந்தார்.

    இவர் தட்சப்பிரஜாபதியின் மகள்களான கத்ரு, விநதை என்பவர்களை மணந்து கொண்டார்.

    தன் மனைவியர் இருவர் மீதும் மாறாத அன்புடன் வாழ்ந்து வந்தார் கச்யபர்.

    பல்லாண்டுகள் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லாததால் கச்யப மகரிஷி, புத்ர காமேஷ்டி யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    அந்த யாகத்தில் கலந்து கொள்ள தேவர்களும், முனிவர்களும் சமித்துக்களோடு வந்திருந்தனர்.

    தேவர்களின் தலைவனான இந்திரனும் பொரச மரத்தின் கிளையையே யாகத்திற்காக ஒடித்துக்கொண்டு வந்திருந்தான்.

    பிரம்மாவின் மனதில் தோன்றிய புத்திரர் க்ருது என்பவர். இவர் க்ரியா என்பவரை மணந்து பத்தாயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்.

    அவர்கள் சுண்டு விரலின் பாதிக்கும் குறைவான உயரத்துடன் காணப்பட்டனர்.

    அவர்களை வாலகில்யர்கள் என்று அழைத்தனர்.

    இந்த வாலகில்யர்கள் மகா தபஸ்விகளாக விளங்கினர்.

    தினமும் சூரிய மண்டலத்தை வலம் வந்தும் ஆல மரத்திலும் மூங்கில் இலைகளிலும் தலைகீழாகத் தொங்கியும் கடுந்தவம் செய்து வந்தனர்.

    இவர்களும் யாகத்திற்கு வரத்தொடங்கினர்.

    இவர்கள் யாகத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டனர்.

    எனவே இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிறிய சமித்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மிகவும் சிரமத்துடன் நடந்து வந்தனர்.

    கச்யப மகரிஷி யாகம் செய்வதற்கு முதல்நாள் நாட்டில் நல்ல மழை பெய்திருந்தது.

    அதனால் வழியெங்கும் மழைநீர் தேங்கி இருந்தது.

    ஒரு மாட்டின் குளம்படி பட்டு பள்ளமாகி இருந்த இடத்திலும் மழைநீர் தேங்கி இருந்தது.

    அந்த இடத்தை பத்தாயிரம் வாலகில்யர்களும் கடக்கும்போது சில வாலகில்யர்கள் அதில் விழுந்து விட்டனர்.

    இதைக் கண்ட இந்திரன் கேலி செய்து சிரிந்து விட்டான்.

    மனம் நோந்த வாலகில்யர்கள், இனி நாங்களே புது இந்திரனை உண்டாக்குவோம் என்று சொல்லி

    மகாயாகம் செய்யத்தொடங்கி விட்டனர்.

    இதை நாரத மகரிஷி இந்திரனிடம் தெரிவித்தார்.

    உடனே இந்திரன் கலங்கித் தவித்தான். தான் அறியாமல் செய்த தவற்றை உணர்ந்து வருந்தினான்.

    இதில் இருந்து விடுபட என்ன வழி என்று நாரத மகரிஷியிடம் கேட்டான்.

    அதற்கு அவரும் கச்யப மகரிஷியை சரணடைந்து உதவி கேள் என்றார்.

    உடனே இந்திரனும் கச்யப மகரிஷியின் திருவடியில் சரணடைந்து தன்னைக்காக்கும்படி வேண்டினான்.

    மனம் உருகிய கச்யப மகரிஷி, வாலகில்யர்களிடம் பிரம்மதேவனால் பதவியில் அமர்த்தப்பட்ட இந்திரனை சபிக்க வேண்டாம்.

    இவனது குற்றத்தை உடனே நிறுத்துங்கள் என்றார்.

    ஆனால் வாலகில்யர்கள் யாகத்தை நிறுத்தமாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

    அதனால் கச்யப மகரிஷி, அப்படியானால் நீங்கள் உண்டாக்கும் இந்திரன் பறவைகளின் அரசனாக வேண்டுமானால் இருக்கட்டும்.

    மகாவிஷ்ணுவையே சுமக்கும் பாக்கியத்தைப் பெற்று, அனைவராலும் பெரிய திருவடி என்று போற்றப்படுவான் என்று வேண்டிக்கொண்டார்.

    மனம் இளகிய வாலகில்யர்கள், கச்யபரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்வாறே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டனர்.

    மேலும் அப்படி உருவாகும் பிள்ளைக்கு கச்யபரே தந்தையாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.

    கச்யபரும் ஒத்துக்கொண்டு இந்திர யாகத்தின் பலனையும் புத்ர காமேஷ்டி யாகத்தின் பலனை பெற்று தன் இல்லத்தை அடைந்தார்.

    அங்கு தன் மனைவியர் இருவரையும் அழைத் யார் யாருக்கு எப்படிப்பட்ட குழந்தைகள் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு மூத்தவளான கத்ரு என்பவள் அனைத்து சக்திகளையும் ஒருங்கே பெற்று மகிமைகளை உடைய

    ஆயிரம் பிள்ளைகள் ஒரே நேரத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டினாள்.

    இளையவள் விநதை, கத்ருவிற்கு பிறக்கப்போகும் ஆயிரம் குழந்தைகளுக்கு ஈடான இரண்டு தவப்புதல்வர்கள் வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

    அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்தி யாகப் பலன்களை சமமாகப் பங்கிட்டு அவர்களுக்கு வழங்கினார் கச்யபர்.

    கத்ரு ஆயிரம் முட்டைகளையும், விநதை இரண்டு முட்டைகளையும் பெற்றனர். ஐநூறு வருடங்கள் கழித்து,

    ஆயிரம் முட்டைகளில் இருந்தும் ஆயிரம் மகா சக்தி வாய்ந்த நாகங்கள் தோன்றின.

    அவற்றில் அநந்தனும், சங்கபாலனும் வெண்மை நிறத்தோடும், வாசுகியும் பத்மனும் சிவப்பு நிறத்தோடும்,

    மஹாபத்மனும் தட்சகனும் மஞ்சள் நிறத்தோடும், கார்க்கோடகனும் குளிகனும் கறுப்பு நிறத்தோடும் பிறந்தனர்.

    தன் சகோதரிக்கு ஆயிரம் குழந்தைகள் பிறந்தும், நமக்கு இரண்டு குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லையே

    என்ற வேதனையில் ஒரு முட்டையை உடைத்தாள் விநதை.

    அதில் இருந்து மேல்பாகம் நல்ல ஒளி பொருந்திய உடலோடும், கீழ்பாகம் எதுவும் வளர்ச்சி அடையாமலும் ஒரு பறவை தோன்றியது.

    தான் அவசரப்பட்டதை உணர்ந்த விநதை அழத்தொடங்கினாள்.

    அப்பொழுது பாதி உடலோடு தோன்றி பறவை, தாங்கள் அவசரப்பட்டு முட்டையை உடைத்தனதால் இந்த விபரீதம் நடந்தவிட்டது.

    எனவே நீங்கள் யாரைக்கண்டு பொறாமைப் பட்டீர்களோ, அவருக்கு ஐநூறு ஆண்டுகள் அடிமையாகப் பணி செய்வீர்கள்.

    அதன்பிறகு இரண்டாவது முட்டையில் இருந்து தோன்றும் என் தம்பியே உங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பான் என்று கூறியது.

    அப்படி பாதி உடலோடு தோன்றிய பறவையே சூரியனின் தேரோட்டியாக அருணன் என்ற பெயரோடு இன்றும் இருந்து வருகிறது.

    • நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.
    • அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    கிருஷ்ண பரமாத்மாவுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.

    அதுபற்றி மகாபெரியவர் சொன்ன ஒரு சிறிய விளக்கம்...

    நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.

    'நவ' என்றால் புதுசு என்று அர்த்தம். 'நீதம்' என்றால் எடுக்கப்பட்டது என்று அர்த்தமாகும்.

    புத்தம் புதுசாக அதிகாலை நேரத்தில் பசும்பாலில் உறை ஊற்றி சாயங்காலமே அந்த தயிரை எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம் என்று சொல்லப்படுகிறது.

    அதோடு சேரும் கிருஷ்ணன், நவநீத கிருஷ்ணராவார்.

    கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துள்ளனர்.

    அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

    மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமாக மழை நீரை கொட்டும்.

    அந்த தண்ணீர் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமாக கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

    • விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.
    • தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    "எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்" என்று

    பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.

    விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.

    அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

    வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்று இது அழைக்கப்படுகிறது.

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்

    சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார்.

    3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் ,

    8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

    தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.

    நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை

    அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது...

    வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும்

    உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.

    ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று

    கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

    ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு

    மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

    • இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.
    • ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    இந்த மந்திர உச்சரிப்பில் இருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர்

    பெறச் செய்யும் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாகவோம்.

    ஆனால் பவுதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற் கெட்டாத காலத்திலிருந்தும்

    நமது உணர்வானது மாசடைந்துள்ளது.

    நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம் பவுதிக இயற்கைக்கு எதிரான மாயை உடனேயே நிறுத்த முடியும்.

    கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல, இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும்.

    இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.

    ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும்.

    ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது.

    இது பேச்சு வழக்கில் ஹரே என்று மாறி உள்ளது.

    இந்த மந்திரமானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.

    ஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும்.

    மந்திர உச்சாடனமானது கட்டுண்ட அத்மாக்களுக்கு பாதுக்கு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது

    உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும்.

    தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது.

    இந்த மந்திர உச்சாடனம், ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்னர் என்று அழைக்கப்படும்

    உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார்.

    ஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    என்ற இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த மந்திரம் ஒன்றுமில்லை.

    தற்போதைய கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 6 நாமங்களே, பிறரிப் பெருங்கடலைக் கடக்க

    இப்புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள்.

    உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.


    • ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம்.
    • வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீ லட்சுமி வசிக்கிறாள்.

    சுமங்கலிகள், பூரண கும்பம் மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை,

    திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில்

    மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

    அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம்,

    சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.

    தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும்,

    கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

    வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீ லட்சுமி வசிக்கிறாள்.

    ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம்.

    அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும்.

    ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள்.

    அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.

    ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

    ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம்.

    ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.

    வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள்.

    இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

    நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது.

    அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை "ஹரி பலம்" என்று கூறுவர்.

    நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.

    இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பதும் விசேஷம்.

    மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.

    பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது.

    குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.

    மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.

    அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள்.

    திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது.

    திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம்.

    ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

    இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

    அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.

    அதிகாலையில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

    ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள்.

    இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.

    • தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.
    • லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.

    நரசிம்ம அவதாரத்தின் போது பெருமான் மிகுந்த கோபத்துடன் இரணியனை வதம் செய்தார்.

    வதம் முடிந்த பிறகும் கூட அவரின் கோபம் தணிந்தபாடில்லை.

    லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    அந்த சமயம் சிறுவனான பிரகாலாதன் தைரியமாக பகவானை நோக்கி சென்றான்.

    பின் பகவானின் மடியில் போய் தைரியமாக ஏறி அமர்ந்துக்கொண்டான்.

    அவரின் முகத்தினை நோக்கி தனது கையை கொண்டு போய் வருடி விட்டான்.

    வெப்பம் கக்கும் கோபத்தில் இருந்த பகவானின் நாக்கு ஏதோ நீண்ட நெடுங்கை போல் நீட்டிக் கொண்டு பாலன் பிரகலாதன் முதுகில் தேய்த்து தனது சூட்டைத் தணித்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்தது. பகவான் தன் பழைய நிலைக்கு வந்தார்.

    பகவானின் கோபம் தணிந்தபிறகே தேவர்கள், முனிவர்கள் ஏன் லட்சமிதேவியே அருகில் செல்ல முடிந்தது.

    முத்தாலங்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சன்னதியில் லட்சுமி நரசிம்மர் உள்ளார்.

    இதில் நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் லட்சுமி நரசிம்மர் கேட்ட வரம் தரும் தெய்வமாக இங்கே அமர்ந்து உள்ளார்.

    இந்த கோவிலை எப்போது வேண்டும்மென்றாலும் திறந்து பக்தர்களுக்கு காட்ட உள்ளூரில் குணவதியம்மன் கோவில் பூசாரி வீட்டில் சாவி உள்ளது.

    ஆகவே இந்த ஊருக்கு சென்றால் உடனே சுவாமி தரிசனம் செய்து விடலாம்.

    இந்த கோவிலுக்கு செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

    நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 16 வது கிலோ மீட்டரில் உள்ள செய்துங்கநல்லூரில் இறங்கினால்

    அங்கிருந்து ஆட்டோ மூலம் 6 கிலோ மீட்டரில் உள்ள முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை அடையலாம்.

    • போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம்.
    • கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான்.

    துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன்,

    பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ

    என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார்.

    என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்" என்றான் துரியோதனன்.

    பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்" என்றார் தர்மர் யோசிக்காமல்.

    சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள்.

    தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை.

    ஒருவேளை, "எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்" என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன் கவுரவர்களை ஜெயித்து இருப்பார்.

    இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, கண்ணனை நினைத்து "கோவிந்தா" என்று அழைத்தாள்.

    அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது.

    அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம்.

    கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான்.

    மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.

    ×