search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishnu"

    • சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர்.
    • கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.

    சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர்.

    அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.

    மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது.

    அதனால் குருஷேத்திரமே இருண்டது.

    இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.

    கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி,

    கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.

    பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.

    • சிவன் கோவில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு.
    • விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.

    சிவன் கோவில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு.

    அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக் கொள்வார்கள்.

    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.

    சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம' என்ற மந்திரம் சொன்னால்

    நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம்.

    இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை.

    அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    • சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.
    • திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

    சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.

    அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை.

    இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

    பெருமாள் கையை அலங்கரிப்பவர்

    சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.

    ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு.

    திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

    அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.

    • திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.
    • திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

    திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.

    இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.

    இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர்.

    திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

    இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

    பெரியாழ்வார் 'சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு' என வாழ்த்திப் பாடியுள்ளார்.

    திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

    • சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர்.
    • சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார்.

    சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர்.

    ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர்.

    பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.

    சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார்.

    இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும்.

    அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.

    • சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார்.
    • திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

    சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார்.

    இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப் பெறுகிறார்.

    இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப் பெறுகிறார்.

    திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

    • கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது.
    • கருடன் பார்வைபட்டால் உடலிலுள்ள விஷக்கிருமிகள் அழிந்து விடும்.

    கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது.

    எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உலவும் மற்ற வஸ்துக்கள் அதன் பார்வைக்குத் தெரியும்.

    தொலைநோக்குப் பார்வை கொண்டது அது. காக்கும் கடவுளான திருமால் அதை வாகனமாக ஏற்றார்.

    மனிதன் தன் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களை வைத்திருக்க வேண்டும்.

    ஒரு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றால் அதனுள் கழிவுகளைப் போட்டு நிரப்பக்கூடாது.

    எதிர்காலத்தில் தனது சந்ததியும் அதே ஆற்றைப் பயன்படுத்த வேண்டுமே என்ற உணர்வு வர வேண்டும்.

    இவ்வாறு தொலைநோக்கின்றி இஷ்டத்திற்கு நடந்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

    காக்கும் கடவுள் நம்மை கைவிட்டு விடுவார்.

    இயற்கை நம்மைத் தண்டித்து விடும்.

    இதை உணர்த்தும் வகையிலேயே கூரிய பார்வையுடைய கருடனை வாகனமாகக் கொண்டுள்ளார் திருமால்.

    மேலும் கருடன் பார்வைபட்டால் உடலிலுள்ள விஷக்கிருமிகள் அழிந்து விடும்.

    நோயற்ற வாழ்வு கிட்டும். நோயில்லாதவர் உலகின் பெரிய பணக்காரர் ஆகிறார்.

    எனவே செல்வத்தின் சின்னமாகக் கருடன் கருதப்படுகிறது.

    • கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும்.
    • பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.

    எந்த திதியன்று கருட தரிசனம் செய்கிறோமோ அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும்,சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும்.

    கல்வி,ஞானம், அறிவு, படிப்பில் நல்ல உயர்வு, வெற்றி கிடைக்க வேண்டுவோர் வளர்பிறை 'நவமி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை 'அஷ்டமி' திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை 'பிரதமை'யன்று கருட தரிசனம் ஆகும்.

    சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை 'திரிதியை' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை 'சஷ்டி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க 'வளர்பிறை சதுர்த்தி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை 'துவாதசி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    கருட பகவானுக்கு உரிய திதி 'பஞ்சமி' ஆகும்.

    எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு.

    பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.

    தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்ய வேண்டும்.

    மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் 'துவாதசி' திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை 'தசமி'திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை 'சப்தமி' அன்று கருட தரிசனம் செய்யவும்.

    குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை 'பிரதமை' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை 'நவமி' அன்று கருட தரிசனம் செய்யவும்.

    கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை 'ஏகாதசி' அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.

    ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை 'அஷ்டமி' அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.

    அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.

    ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.

    பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.

    சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை 'திரயோதசி' பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை 'துவாதசி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.

    ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, 'சஷ்டியில்' கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.

    எனவே ' நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.

    ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.

    • ஒவ்வொரு இந்துவின் திருமண சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு.
    • மாங்கல்யம் செய்யக் கொடுக்கும்போது கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஒவ்வொரு இந்துவின் திருமண சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு.

    திருமாங்கல்ய தாரணம் என்னும் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது,

    நாதஸ்வரக் கலைஞர்கள் கருடத்வனி என்னும் ராகத்திலேயே இசைக்கின்றனர்.

    இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம்.

    வேத மந்திரங்களைக் கூறி நடைபெறும் திருமணத்தில், வேத மந்திரங்களை ஒலிக்கும் போது ஏதாவது தோஷம்

    ஏற்பட்டாலும் கூட, இந்த கருடத்வனி அதனை நீக்கி விடுகிறது.

    மேலும் திருமணத்தின் முக்கிய அங்கமான திருமாங்கல்யம் என்னும் தாலியை செய்யக் கொடுக்கும்போது

    கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும்.

    அல்லது திருமாங்கல்யத்தை வாங்கும்போதாவது சுவாதி நட்சத்திரத்தில் வாங்குவது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு.

    • அந்த கொடியில் ஸ்ரீ கருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.
    • அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.

    நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது,

    அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம்.

    அந்த கொடியில் ஸ்ரீ கருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.

    அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.

    இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.

    • கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
    • எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.

    நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும்,

    குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.

    அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர்.

    கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.

    இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன்.

    வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும்.

    ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை?

    எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.

    • அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான்.
    • பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.

    காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. காரணம் பின்வருமாறு:

    ராமர், ராவண வதம் செய்தபின்சேதுவில் சிவ பூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி ஏவினார்.

    அனுமார் காசியை அடைந்து பார்த்தார். எங்கும் லிங்கங்கள்; எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் விழித்தார்.

    அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான்.

    பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமார் அந்தச் சிவலிங்கத்தைப் பேர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

    காசியின் காவலராகிய காலபைரவர் அதுகண்டு கோபித்தார். "என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்?" என்று கூறித் தடுத்தார்.

    பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.

    அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி, "உலக நன்மைக்காக இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

    பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.

    தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமாருக்குத் துணை புரிந்த கருடன் காசிநகர எல்லைக்குள்

    பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.

    அந்த சாபத்தின்படி இன்றும் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை.

    ×