search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishnu"

    • சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர்.
    • வ்ரிந்தாவை மணந்த பின், வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.

    சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர்.

    அசுர அரசரான கால்நேமியின் அழகிய இளவரசி தான் இந்த துளசி.

    சிவபெருமானின் சக்தி வாய்ந்த பகுதியாக விளங்கிய ஜலந்தரை அவர் மணந்தார்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீயில் இருந்து பிறந்தவன் என்பதால் ஜலந்தருக்கு அதிக சக்தி இருந்தது.

    பத்தினியாகவும், ஈடுபாடுள்ள பெண்ணாகவும் இருந்ததால், வ்ரிந்தா மீது காதலில் விழுந்தார் ஜலந்தர்.

    விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினார் வ்ரிந்தா.

    ஆனால் ஜலந்தருக்கோ கடவுள்கள் என்றாலே வெறுப்பு தான்.

    இருப்பினும் விதி அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது.

    வ்ரிந்தாவை மணந்த பின், வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.

    வ்ரிந்தாவின் தூய்மையும் கடவுள் பக்தியும் அதற்கு காரணமாக விளங்கி, அவனின் சக்தியை பலமடங்கு அதிகரித்தது.

    சிவபெருமானாலேயே ஜலந்தரை வெல்ல முடியவில்லை.

    அவனின் ஆணவம் அதிகரித்தது.

    சிவபெருமானை வீழ்த்தி, அண்ட சராசரத்திலேயே சக்தி வாய்ந்த கடவுளாக திகழ வேண்டும் என்பதே அவனின் லட்சியமாக இருந்தது.

    ஜலந்தரின் சக்தி அதிகரித்து கொண்டிருந்தது அனைத்து கடவுள்களுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது.

    உதவியை நாடி அனைவரும் விஷ்ணு பகவானிடம் சென்றனர்.

    வ்ரிந்தா அவரின் தீவிர பக்தை என்பதால் விஷ்ணு பகவானுக்கு குழப்பம் உண்டாயிற்று.

    அவளுக்கு அநீதி வழங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.

    ஆனால் ஜலந்தரால் அனைத்து கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததால்,

    விஷ்ணு பகவான் ஒரு விளையாட்டை அரங்கேற்றிட நினைத்தார்.

    அதன்படி, சிவபெருமானுடன் ஜலந்தர் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜலந்தர் போல் வேடமிட்டு வ்ரிந்தாவிடம் வந்தார் விஷ்ணு பகவான்.

    முதலில் அவரை அடையாளம் காண முடியாமல், ஜலந்தர் தான் வந்துவிட்டான் என்று நினைத்து அவரை வரவேற்க சென்றாள் அவள்.

    ஆனால் விஷ்ணு பகவானை அவள் தொட்ட மறு வினாடியே, அது அவளின் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள்.

    அவளுடைய தூய்மை கெட்டுப்போனதால், ஜலந்தர் தாக்குதலுக்கு உள்ளானான்.

    தவறை உணர்ந்த அவள், தன் சுயரூபத்தை காட்டுமாறு விஷ்ணு பகவானிடம் கேட்டுக் கொண்டாள்.

    தன் கடவுளே தன்னிடம் விளையாடியுள்ளார் என்பதை அறிந்த அவள் உடைந்து போனாள்.

    தன்னுடைய தூய்மையை கெடுக்க தன் கணவன் போல் விஷ்ணு பகவான் வேடமிட்டு வந்ததை அறிந்த வ்ரிந்தா அவரை சபித்தார்.

    விஷ்ணு பகவான் ஒரு கல்லாக மாற வேண்டும் என்று அவர் சபித்தார்.

    அந்த சாபத்தை ஏற்றுக்கொண்ட விஷ்ணு பகவான், கண்டக்கா நதி அருகே ஷாலிகிராமத்தில் கல்லாக மாறினார்.

    அதன் பின், தன் மனைவியின் தூய்மை என்ற பாதுகாப்பு ஜலந்தரை விட்டு போனதால், சிவபெருமானால் அவன் கொல்லப்பட்டான்.

    மனம் உடைந்த வ்ரிந்தா, தன் வாழ்க்கையை முடிக்க முடி வெடுத்தாள்.

    வ்ரிந்தா இறக்கும் முன், இனி அவள் துளசியாக அறியப்படுவாள் என விஷ்ணு பகவான் அவருக்கு வரம் அளித்தார்.

    அதன்படி, இனி விஷ்ணு பகவானை வழிபடும் போது துளசியும் வழிபடப்படும்.

    துளசி இலை இல்லாமல் விஷ்ணு பகவானுக்கு செய்யப்படும் பூஜை முழுமை பெறாது.

    அதனால் தான் இந்து சடங்குகளின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது துளசி.

    நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரையும் ஆசீர்வதிக்க அனைத்து மக்களின் வீட்டில் வளரும் ஒரு செடியாக அருளளிக்கப்பட்டார்.

    • லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
    • அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் துளசி தோட்டமான நந்தவனத்தில் தான் பிறந்தாள்.

    லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.

    அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.

    இதில் கொட்டப்பட்டிருக்கும் மணலை பக்தர்கள் தங்கள் பர்சில் போட்டுக் கொள்கின்றனர்.

    லட்சுமி தேவியின் பார்வை பட்ட இடம் என்பதால் தங்களுக்கு செல்வம் சேரும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்கிறார்கள்.

    கல்லால் ஆன இந்த துளசி மாடத்தின் கீழே ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

    துளசி தோட்டத்தின் முகப்பில் ஆண்டாளின் பிறப்பை சித்தரிக்கும் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

    • மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
    • அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.

    பூமி பெற்றெடுத்த பாக்கியமே! மோட்சமே நிரந்தரமானது என்பதால் அதை அடைவதற்கு ஸ்ரீமன் நாராயணன் முதலான

    எல்லா தேவதைகளையும், எல்லா ஆச்சார்ய புருஷர்களையும் போதிப்பதற்காக துளசி பத்திரத்தை பறிக்கிறேன்

    என் செயலை மன்னிப்பாயாக! என்று சொன்ன பிறகே துளசியை நாம் பறிக்கவேண்டும்.

    பறித்த துளசியை கிள்ளி கிள்ளி எறியக்கூடாது.

    மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.

    அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.

    • அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது.
    • ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக இது விளங்குகிறது.

    இயற்கைக்கு ஈடு இவ்வுலகில் ஏதுமில்லை.

    அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது.

    அந்த வகையில் மற்ற செடிகளுக்கு இல்லாத சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

    அதற்கு காரணம் துளசி செடியை தெய்வமாக பார்க்கின்றனர் இந்து மக்கள்.

    எந்த ஒரு சடங்கும் துளசி செடிகள் இல்லாமல் நடைபெறாது என்று கூறலாம்.

    துளசி செடியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக இது விளங்குகிறது.

    இதுபோக சளி, இருமல் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.

    சுற்றுச்சூழலை தூய்மையாக்கி கொசு விரட்டியை போல் செயல்படுகிறது இந்த துளசி செடி.

    சரி, இந்த அதிசயமான செடியை பற்றிய கதையை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?

    அப்படியானால் மேலும் படியுங்கள்.

    • அவர்கள் மத்தியில் ஒளிப் பிழம்பாக, பிரம்மாண்ட வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார்.
    • அந்த மலையைப் பூஜிப்பதும் கடினம் என்பதால், தானே ஒரு அழகிய லிங்க வடிவெடுத்து காட்சி தந்தார்.

    திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று விவாதித்தனர்.

    அவர்கள் மத்தியில் ஒளிப் பிழம்பாக, பிரம்மாண்ட வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார்.

    அந்த ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் காண முடியாது நான் முகனும், நாராயணும் திகைத்தனர்.

    பரமேஸ்வரனே பரம்பொருள் என்று போற்றினர்.

    அவர்கள் பக்திக்கு இறங்கி ஒரு மலை வடிவானார் சிவ பெருமான்.

    அந்த மலையைப் பூஜிப்பதும் கடினம் என்பதால், தானே ஒரு அழகிய சிவலிங்க வடிவெடுத்து காட்சி தந்தார்.

    இந்த சிவலிங்கத் திருமேனியே ஸ்ரீ அருணாசலேசுரர் ஆகும்.

    • 13-ம் நூற்றாண்டில் கோவில் அமைந்துள்ள இடத்தில் கடல் இருந்ததாக சொல்கின்றனர்.
    • தமிழ்நாட்டிலேயே சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் இங்கு மட்டும் தான் அமைந்துள்ளது.

    கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது.

    20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    13-ம் நூற்றாண்டில் இந்த கோவில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    13-ம் நூற்றாண்டில் கோவில் அமைந்துள்ள இடத்தில் கடல் இருந்ததாக சொல்கின்றனர்.

    பெருமாள் கடலில் குளித்து விட்டு அந்த குன்றின் மீது வந்து அமர்ந்ததாகவும் அப்போது தனது வலது கையில் உள்ள

    சக்கரத்தை அங்கு வைத்து விட்டு சென்றதாகவும் நம்பப்படுகிறது.

    இதையடுத்து சக்கரத்தாழ்வார் கோவில் சுயயம்புவாக தோன்றியதாக கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டிலேயே சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் இங்கு மட்டும் தான் அமைந்துள்ளது.

    கோவிலில் உள்ள சக்கரம் 3 அடி உயரம் உள்ளது.

    இந்த சக்கரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 1 அடி உயரம் மட்டுமே இருந்தாகவும் அது தானாக வளர்ந்து

    இப்போது இந்த உயரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    கோவிலில் சித்திரை வருட பிறப்பின் போது லட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

    ஆனி மாதத்தில் சுதர்சன ஜெயந்தியும், சிறப்பு யாகமும் நடக்கின்றன.

    புரட்டாசி 3-ம் சனிக்கிழமை கருட வாகனசேவை மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    தைமாதம் 3-ம் வெள்ளி, 5-ம் வெள்ளி கிழமைகளில் அரசு-வேம்பு திருக்கலயாணம் நிகழ்ச்சியும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் வழிபடும் போது ஒவ்வோரு விசேஷ பலன் இருப்பதாக ஐதீகம் உள்ளது.

    செவ்வாய்க்கிழமை வழிபட்டால் இடப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும், வியாழக்கிழமை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும், கல்வி யோகமும் கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    குழந்தை இல்லாதவர்களும், திருமணதடை உள்ளவர்களும் வெள்ளிக்கிழமை வழிபட்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பில்லிசூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை வழிபட்டால் அவர்கள் பிரச்சினை தீரும்.

    • பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர்.
    • சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர்.

    பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர்.

    மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

    இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.

    சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும்.

    சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில்

    அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர்.

    `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.

    • சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர்.
    • கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.

    சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர்.

    அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.

    மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது.

    அதனால் குருஷேத்திரமே இருண்டது.

    இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.

    கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி,

    கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.

    பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.

    • சிவன் கோவில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு.
    • விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.

    சிவன் கோவில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு.

    அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக் கொள்வார்கள்.

    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.

    சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம' என்ற மந்திரம் சொன்னால்

    நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம்.

    இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை.

    அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    • சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.
    • திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

    சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.

    அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை.

    இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

    பெருமாள் கையை அலங்கரிப்பவர்

    சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.

    ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு.

    திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

    அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.

    • திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.
    • திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

    திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.

    இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.

    இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர்.

    திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

    இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

    பெரியாழ்வார் 'சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு' என வாழ்த்திப் பாடியுள்ளார்.

    திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

    • சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர்.
    • சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார்.

    சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர்.

    ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர்.

    பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.

    சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார்.

    இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும்.

    அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.

    ×