search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமாலின் வாகனம் கருட பகவான்
    X

    திருமாலின் வாகனம் கருட பகவான்

    • கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது.
    • கருடன் பார்வைபட்டால் உடலிலுள்ள விஷக்கிருமிகள் அழிந்து விடும்.

    கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது.

    எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உலவும் மற்ற வஸ்துக்கள் அதன் பார்வைக்குத் தெரியும்.

    தொலைநோக்குப் பார்வை கொண்டது அது. காக்கும் கடவுளான திருமால் அதை வாகனமாக ஏற்றார்.

    மனிதன் தன் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களை வைத்திருக்க வேண்டும்.

    ஒரு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றால் அதனுள் கழிவுகளைப் போட்டு நிரப்பக்கூடாது.

    எதிர்காலத்தில் தனது சந்ததியும் அதே ஆற்றைப் பயன்படுத்த வேண்டுமே என்ற உணர்வு வர வேண்டும்.

    இவ்வாறு தொலைநோக்கின்றி இஷ்டத்திற்கு நடந்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

    காக்கும் கடவுள் நம்மை கைவிட்டு விடுவார்.

    இயற்கை நம்மைத் தண்டித்து விடும்.

    இதை உணர்த்தும் வகையிலேயே கூரிய பார்வையுடைய கருடனை வாகனமாகக் கொண்டுள்ளார் திருமால்.

    மேலும் கருடன் பார்வைபட்டால் உடலிலுள்ள விஷக்கிருமிகள் அழிந்து விடும்.

    நோயற்ற வாழ்வு கிட்டும். நோயில்லாதவர் உலகின் பெரிய பணக்காரர் ஆகிறார்.

    எனவே செல்வத்தின் சின்னமாகக் கருடன் கருதப்படுகிறது.

    Next Story
    ×