search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Narasimmar"

    • கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார் பிரபு சாலமன்.
    • இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர்.

    2010 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் அமலா பால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மைனா. இப்படத்தை பிரபு சாலமன் இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று பல விருதுகளை குவித்தது. இதற்கு முன் பிரபு சாலமன் கிங், கொக்கி, லீ, லாடம், போன்ற படங்களை இயக்கி இருந்தாலும். மைனா திரைப்படமே தமிழ் திரையுலகை திரும்பி பார்க்கச் செய்தது.

    அதற்கடுத்து கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார். கடைசியாக செம்பி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் செம்பி மற்றும் அஸ்வின் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர். இது ஒரு சிறுவனுக்கும் , சிங்கத்திற்கும் இடையே உள்ள நட்பை பிரதிபளிக்கும் படமாக அமைந்துள்ளது.

    இப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித சி.ஜி காட்சிகளும் இல்லாமல் படமாக்க முயற்சித்துள்ளனர். இதற்காக விஜய் ஸ்ரீ சிங்கக்த்துடன் பயிற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவே ஆகும்.

    இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் படத்தின் இசையே மேற்கொள்கிறார். இப்படத்தை காஜா மைதீன் மற்றும் அப்துல் கானி தயாரித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உற்சவமூர்த்தி சாந்த நரசிம்மர் (லட்சுமி நரசிம்மர்) ஆவார்.
    • இவருக்கு உகந்த நாட்கள் சுவாதி நட்சத்திரம்.

    இந்த சன்னதி அலங்கார மண்டபத்தில் மேற்கு நோக்கி ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு நேர் எதிரே மூல நரசிம்மர் ஸ்ரீ அமிர்தவல்லி தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.

    உற்சவமூர்த்தி சாந்த நரசிம்மர் (லட்சுமி நரசிம்மர்) ஆவார்.

    அதே சமயம் மூலவர் உக்கிரமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    அவருடைய தோற்றத்திற்கும் அமைப்பிற்கும் பொருந்துவது போல கண்கள் சிவக்க காட்சி அளிக்கிறார்.

    இவருடைய கண்கள் தீப ஆர்த்தியின் போது இயற்கையாக சிம்மத்தின் கண்கள் ஒளியை உமிழ்வது போல தோற்றம் அளிப்பது இங்கு மிகச் சிறந்த விசேஷம் ஆகும்.

    உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பில்லி சூனியம் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம்

    (48 நாட்கள்) தரிசித்தால் அவர்கள் குறைகள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இவருக்கு உகந்த நாட்கள் சுவாதி நட்சத்திரம்.

    வெள்ளி, ஞாயிறு, நரசிம்மர் ஜெயந்தி அன்று ஸ்தம்பமாக (தூண்) அலங்காரம் செய்து, உபவாசம் விரதம் இருந்து

    நரசிம்மர் வேடம் தரித்து பிரகலாதனையும், இரணியக சிபுவையும் உருவகப்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் மாலை

    நேரத்தில் நடைபெறும் வைபவம் குறிப்பிடத்தக்கது ஆகும்.

    (திருக்குறுங்குடியில் கைசிக துவாதசியில் நடைபெறும் விழா போல் இந்த விழாவும் நடைபெறுகிறது)

    மன அமைதி இழந்த, மனநிலை சரி இல்லாதவர்களுக்கு இந்த சன்னதியில் சங்கு தீர்த்தம் தெளிப்பது முக்கிய விசேஷம் ஆகும்.

    இதனுடைய பலனை உடனடியாக அறிய முடியும்.

    அந்த அளவுக்கு வரப்பிரசாதியாக லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    • சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும்.
    • மகாவீரரான நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை

    விடுக்கும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கிறேன்.

    மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! பக்தர்கள் கேட்கும் வரத்தைக் தருபவரே! மகாவீரரே!

    என் கடன்களில் இருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டு பிரார்த்தனை செய்கிறேன்.

    நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைச் தரித்துக்

    கொண்டவரே! மகாவீரரே! என்னைக் கடன் உபாதைகளில் இருந்து காத்தருள பிரார்த்திக்கிறேன்.

    நினைத்த மாத்திரத்திலேயே பாவங்களை நீக்குபவரே! கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல்

    காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும்.

    அப்பேற்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! கடன் தொல்லைகளில் இருந்து நான் விடுதலை பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சை கிழித்தவரே!

    மகாவீரரான நரசிம்கரே! என் கடன்களில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்தில் இருக்கும் பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்கரே!

    கடன் உபாதையில் இருந்து நிவாரணம் பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    வேதம், உபிநிஷத் யக்ஞம் இவைகளின் ஈச்வரனே பிரம்மா, ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே!

    மகாவீரரான நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படிப்பதற்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில்

    சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும்.

    அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.

    ஸ்ரீ நரசிம்ம காயத்ரீ மந்திரம் சொல்லிவர அனைத்து நன்மைகளும் கைகூடும்

    ஓம், வஜ்ரநகாய வித்மஹே, தீக்ண தம்ட்ராயதீமஹே, தந்னோ, நாரசிஹ்ம ப்ரசோதயாது.

    ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டுப் மந்திரம் :

    ஓம், உக்ரம், வீரம், மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம், நரசிஹ்மம் பீஷணம் பத்ரம், ம்ருத்தும் ம்ருத்து நாம்யஹம்.

    • பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
    • 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது.

    1. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்திக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று ரதோஸ்வம் நடைபெறுகிறது.

    2. பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.

    3. கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. புதுவை மாநிலம், தமிழ்நாடு மாநிலம் இவர்களால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் ஆட்சிக்குட்பட்டது.

    4. 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப்பட்டது.

    5. ஸ்ரீ ராஜ ராஜசோழன், விஜயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆகியோர்களாலும் சில கைகங்கர்யங்கள் செய்யப்பட்டுள்ளன.

    6. இந்த கோவிலுக்கு பின்புறம் ஸ்ரீமத் அகோபில மடம் 4-வது பட்டம் ஸ்ரீயர் சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது.

    • இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.
    • இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

    இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.

    இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்தி இந்தியாவிலேயே உள்ள ஒரு ஒருவர் தான் என்பது தனிச்சிறப்பு

    தவிர இந்த பழமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பது விசேஷமான அம்சம்.

    இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

    முக்கியமாக நவக்கிரக தோஷங்கள் போகும்.

    சுவாதி நட்சத்திரத்திலும், பிரதோஷத்திலும் மற்றும் செவ்வாய்க் கிழமையில் இந்த மூர்த்தியை (ஸ்ரீ லட்சுமி நரசிம்மனை) தரிசித்தால் மிகவும் நல்லது.

    எல்லா குறைகளும் தீரும்.

    சிங்கிரிகோவில், பூவரங்குப்பம், பரிக்கல் ஆகிய ஊர்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதால் இந்த மூன்று நரசிம்மனை

    ஒரே நாளில் தரிசித்தால் தீராத கஷ்டங்கள் யாவும் தீரும்.

    • இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.
    • இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

    இதுவரை தலபுராணத்தை பற்றி பார்த்தோம்.

    இந்த ஆலயத்துள் துண்டு கல்வெட்டுகள் உள்ளன.

    இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.

    இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

    ராஜ கோபுரவாயிலில், 16-ம் நூற்றாண்டை சேர்ந்து எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்து இருக்கிறது.

    இப்பாடல் எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்த வடிவில் அமைந்துள்ளது.

    • ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.
    • இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.

    சன்னதிக்கு எதிரில் இருக்கும் விநாயகரை எடுத்து கோபுர நுழைவாயிலுக்கு பக்கத்தில் வைக்க எண்ணி ஒரு கோவில்

    அமைத்து விநாயகரை எடுத்ததும் ஊரில் தீ விபத்து ஏற்பட்டதால் பழைய இடத்திலேயே வைத்துவிட்டதாக பரம்பரை வரலாறு உள்ளது.

    ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.

    பிரெஞ்சுக்காரர்களும் சுவாமிக்கு திருவாரணங்கள் சமர்ப்பித்து உள்ளனர்.

    புராணம், சரித்திரம் ஆகிய இரு வகைகளிலும் சிறப்புடையதும் இந்தியாவிலேயே அபூர்வமானதுமான

    ஸ்ரீ நரசிம்மர் சன்னதி உள்ள தலம் சிங்கிரிகுடி என்பதை இதுவரை கண்டோம்.

    இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.

    இந்த ஊரில் கல்வி கேள்விகளில் வல்ல பல சான்றோர்கள் இருந்திருக்கிறார்கள்.

    மூலஸ்தானம் மட்டும் தான் பழமையானது.

    தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி இவைகள் பிற்காலத்தவையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    திருவந்திரபுரம், ஸ்ரீ தேவனாதப்பெருமாள், பிரகலாதனின் பிரார்த்தனையின் நிமித்தமாக ஹிரண்ய சம்கார

    நரசிம்மனாக பிரகலாதனுக்கு சேவை சாதித்தருளினார்.

    • ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.
    • இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

    இந்தியாவிலேயே அபூர்வமாக இரண்டு இடங்களில் தான் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

    அந்த இரு சேத்திரங்களுள் ஒன்று சிங்கர்கோவில் மற்றொன்று ராஜஸ்தானில் உள்ளது.

    மூர்த்தியின் கைகளில் காணப்படும் ஆயுதங்களும் அவற்றின் நிலைகளும்:

    பதாகஸ்தம், ப்ரயோக சக்ரம், ஷீரிகை என்னும் குத்துக்கத்தி, பாணம், ராட்சனின் தலையை அறுத்தல், கத்தியால் அசூரன் ஒருவனைக் கொல்லுதல், இரணியனின் கைகளில், குடல் மாலையைப் பிடித்திருப்பது, சங்கம், வில், கதை, கேடயம்,வெட்டப்பட்ட தலை, இரணியனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது.

    மூலாயத்தில் பெரிய வடிவில் பதினாறு கைகளுடன் இரணியனைச் சங்கரிப்பவராகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    கீழே இடப்புறம் இரணியனின் மனைவியான நீலாவதி, கீழே வலப்புறம் மூன்று அசூரர்கள், பிரகலாதர்,

    சுக்கிரர் வஷிட்டர் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.

    வடக்கு நோக்கியவர்களாகச் சிறிய வடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் என இருவர் இருக்கிறார்கள்.

    ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.

    இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

    திரு.ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பில் இருந்து பிரெஞ்சு அரசாங்கம் நரசிம்ம சுவாமிக்கு

    அவிசுப்பாக்கத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

    • இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.
    • இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

    சிங்கிரிகுடி (சிங்கர்கோவில்) என்னும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேஷத்திரத்தின் தலவரலாறு கூறும் இச்சிறு நூல்

    சிங்கர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவடித் தாமரைகளில் அடியோங்களால் சமர்ப்பிக்கப்படுகிறது.

    இத்திருத்தலம் இக்காலம் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வட்டத்துள் இருக்கிறது.

    சிங்கர்கோவில் என நரசிம்மர் பெயராலேயே வழங்கப்படுகிறது.

    இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.

    இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

    வசிஷ்டமாமுனிவர் இத்திருத்தலத்தில் நரசிங்கரைத் தியானம் செய்து கொண்டு தவம் புரிந்து சித்தி பெற்றுத்

    தம்முடைய பாவங்களைப் போக்கி கொண்டார்.

    இவ்வூரைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் கூறலாம்.

    ஊர் பெயர்: சிங்கர்கோவில்

    புராணப்பெயர்: கிருஷ்ணாரண்யசேத்ரம்

    சுவாமி பெயர்: லட்சுமி நரசிம்மர்

    தாயார் பெயர்: கனகவல்லித்தாயார்

    விமானத்தின் பெயர்: பாவன விமானம்

    தீர்த்தங்கள் ஐந்து: ஜமதக்னி தீர்த்தம்,

    இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்,

    வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்.

    • தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.
    • லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.

    நரசிம்ம அவதாரத்தின் போது பெருமான் மிகுந்த கோபத்துடன் இரணியனை வதம் செய்தார்.

    வதம் முடிந்த பிறகும் கூட அவரின் கோபம் தணிந்தபாடில்லை.

    லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    அந்த சமயம் சிறுவனான பிரகாலாதன் தைரியமாக பகவானை நோக்கி சென்றான்.

    பின் பகவானின் மடியில் போய் தைரியமாக ஏறி அமர்ந்துக்கொண்டான்.

    அவரின் முகத்தினை நோக்கி தனது கையை கொண்டு போய் வருடி விட்டான்.

    வெப்பம் கக்கும் கோபத்தில் இருந்த பகவானின் நாக்கு ஏதோ நீண்ட நெடுங்கை போல் நீட்டிக் கொண்டு பாலன் பிரகலாதன் முதுகில் தேய்த்து தனது சூட்டைத் தணித்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்தது. பகவான் தன் பழைய நிலைக்கு வந்தார்.

    பகவானின் கோபம் தணிந்தபிறகே தேவர்கள், முனிவர்கள் ஏன் லட்சமிதேவியே அருகில் செல்ல முடிந்தது.

    முத்தாலங்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சன்னதியில் லட்சுமி நரசிம்மர் உள்ளார்.

    இதில் நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் லட்சுமி நரசிம்மர் கேட்ட வரம் தரும் தெய்வமாக இங்கே அமர்ந்து உள்ளார்.

    இந்த கோவிலை எப்போது வேண்டும்மென்றாலும் திறந்து பக்தர்களுக்கு காட்ட உள்ளூரில் குணவதியம்மன் கோவில் பூசாரி வீட்டில் சாவி உள்ளது.

    ஆகவே இந்த ஊருக்கு சென்றால் உடனே சுவாமி தரிசனம் செய்து விடலாம்.

    இந்த கோவிலுக்கு செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

    நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 16 வது கிலோ மீட்டரில் உள்ள செய்துங்கநல்லூரில் இறங்கினால்

    அங்கிருந்து ஆட்டோ மூலம் 6 கிலோ மீட்டரில் உள்ள முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை அடையலாம்.

    • மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
    • பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும்.

    மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

    போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

    ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம்.

    இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும்.

    இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும்.

    பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

    இதனை மேற்குத்திக்குப் பரிவேட்டை என்றும் கூறுவர்.

    விடியற் காலையில் பெருமாள் தனித்துத்தலைப்பாகை, குற்றுவாள், கேடய அலங்காரத்துடன்

    கிளிக்கூண்டில் புறப்பாடு காண்பார் கண்டருளி மேற்குத்திசைக் கிராமங்களுக்குச் செல்வார்.

    திரும்பும் போது எறும்பி எனும் அசுவரேந்தபுரம் கிராம மண்டபத்தில் திருவாராதளம், திருப்பாவை நடைபெறும்.

    பின்னர் திருப்பாவை சாற்று தீர்த்த விநியோகம் நிகழும்.

    ×