என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நரசிம்மர் அவதார கதை
    X

    நரசிம்மர் அவதார கதை

    • அவன் பல வருடங்கள் பிரம்மனைக் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினான்.
    • பிரம்மன் அறிந்தோ அல்லது அறியாமலோ அவன் கேட்ட வரததை அளித்தார்.

    இக்கதை மிகவும் முக்கியமானதாகும்.

    அவதார நோக்கத்தின் முக்கியத்துவமும், பற்பல நீதிகளும் பின்னிப் பிணைந்த சரித்திரமாகும்.

    ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் வைகுண்டத்தைக் காவல் செய்த இரண்டு பக்தர்களான ஜெய, விஜயர்கள், சநகாதி முனிவர்களை, ஸ்ரீவைகுண்டத்தில் நித்யாவசம் செய்யும் பகவானை அடைய முடியாதபடி தடுத்ததால் ஏற்பட்ட சாபத்தைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

    சாபத்தினால் அவர்கள் இருவரும் ராட்சகர்களாகவும், விஷ்ணுவை நிந்திப்பவர்களாகவும் பிறப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அடுத்தடுத்த பிறவிகளில் பகவானுடைய கருணையால் ஜெய, விஜயர்கள் ஹிரண்யாட்சகாவும், ஹிரண்யகசிபுவாகவும் பிறந்தார்கள்.

    ஆகையால் பகவான் விஷ்ணு வராக அவதாரத்தில் சிரண்யாட்சனை, வதம் செய்து அசுரர்களுக்கு பாடம் புகட்டினார்.

    தன்னுடைய மூத்த சகோதரனைக் கொன்ற விஷ்ணுவையும் அவனுடைய பக்தர்களையும் பலவிதமாக நிந்திக்கத் தொடங்கினான் ஹிரண்யகசிபு.

    அவன் பல வருடங்கள் பிரம்மனைக் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினான்.

    பிரம்மாவும் அவனுடைய கடும் தவத்தை கண்டு மகிழ்ச்சி அவனுக்கு வரம் கொடுத்தார்.

    அவன் பிரம்மனிடம் ஒரு வரத்தை வேண்டி பெறுகிறான்.

    அவ்வரத்தின்படி இந்த உலகத்தில் உள்ள இயற்கை நியதிப்படி தான் மரணம் அடையக் கூடாது என்றும் மனிதர்களாலும், தேவர்களாலும் தனக்கு அழிவு நேரக்கூடாது என்றும் வேண்டினான்.

    அந்த அசுரன் தன்னுடைய சாமர்த்தியத்தால் இந்த உலகத்தில் எவ்வாறெல்லாம் மரணம் ஏற்படும் என்பதை சிந்திதது, தன்னுடைய மரணம் அவ்வாறெல்லாம் நிகழக் கூடாது என்று வரமாகக் கேட்டான்.

    அவ்வரத்தின் முக்கிய அம்சங்கள்:

    1. கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட எந்த பொருளாலும் தனக்கு அழிவு நேரக்கூடாது.

    2. பகலிலோ அல்லது இரவிலோ நேரக்கூடாது.

    3. பூமியிலோ அல்லது ஆகாயத்திலோ நேரக்கூடாது.

    4. எவ்விதக் கருவியாலும், கைகளாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது.

    5. மனிதனாலோ அல்லது விலங்குகளாலோ தனக்கு மரணம் நேரக்கூடாது.

    இவ்வாறு அவன் வரம் வேண்டினான்.

    மேலும் பிரம்மனிடம் தனக்கு மிகவும் பலமான சக்தியைக் கொடுக்கும் படியும் வேண்டினான்.

    பிரம்மன் அறிந்தோ அல்லது அறியாமலோ அவன் கேட்ட வரததை அளித்தார்.

    Next Story
    ×