என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் சிறப்பு
- எல்லா இடங்களிலும் அவருடைய அர்ச்சாவிக்ரகம் சாந்தமாகவும், ஆனந்தமாகவும் அமைதியாகவே உள்ளது.
- நாம் நவ நரசிம்மர்களை 9 விதமான உருவங்களில் வணங்குகிறோம்.
ஸ்ரீமந் நாராயணனின் 10 அவதாரங்களில் துஷ்டர்களை அழிக்கவும், இந்த உலகத்தில் உள்ள நல்லவர்களையும், அசையப் பொருள்களையும் காப்பதற்கும், தோன்றிய மிகச் சிறந்த அவதாரம் ஸ்ரீநிசரம்ம அவதாரமாகும்.
ஸ்ரீமகாவிஷ்ணுவே பூர்ணாவதாரமாக இந்த விபவ அவதாரத்தில் உலகத்தில் தோன்றியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்தது மிகவும் பயங்கரமாக இருந்தது.
ஆனால் எல்லா இடங்களிலும் அவருடைய அர்ச்சாவிக்ரகம் சாந்தமாகவும், ஆனந்தமாகவும் அமைதியாகவே உள்ளது.
அவருடைய சிலாவடிவம் (திவ்யமங்கள விக்ரகம்) பக்த பிரகலாதன், மற்ற முனிவர்களுடைய பிம்பங்களுடன் சேர்ந்தே அமைந்துள்ளது.
ஸ்ரீநரசிம்ம பகவானுடைய அர்ச்சா விக்ரகங்கள் 36 விதமாக அமைந்துள்ளது. எண்ணற்ற விதத்தில் மகாவிஷ்ணுவின் திருக்கோவில்களில் அவருடைய வெவ்வேறு பிம்பங்கள் தூண்களிலும் சுவர்களிலும் காணப்படுகினறன.
ஆனால் நாம் நவ நரசிம்மர்களை 9 விதமான உருவங்களில் வணங்குகிறோம்.
1. சத்திரவட நரசிம்மர் (பகவான் ஒரு ஆல மரத்தரடியில் அமர்ந்திருப்பது போல)
2. யோக நரசிம்மர் (யோகத்திருப்பது போல்)
3. உக்ர வடிவ நரசிம்மர் (சில மிகவும் கோபமாக)
4. கிரோட நரசிம்மன் (வராக நரசிமமர், இரண்யாட்சனிடம் மிகவும் கோபமாக)
5. ஸ்ரீமாலோல நரசிம்மர் (ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடியவராக)
6. ஜவாலா நரசிம்மர் (தூணிலிருந்து தோனறுபவராக)
7. பாவன நரசிம்மர் (எல்லா பாவங்களையும் போக்கக் கூடிய நரசிம்மராக)
8. பார்க்கவ நரசிம்மர் (எல்லோரையும் கடாட்சிக்கிறவராக)
9. காரஞ்ச நரசிம்மர் (கூர்மையான நகங்களையுடையவர்.
இந்த விதமான அமைப்புக்களை உடைய உருவச் சிலைகளை நாம் எல்லா திருக்கோவில்களிலும் காணலாம்.
ஆகவே நரசிம்ம அவதாரத்தின் சிறப்பு எண்ணற்றதாகும்.






