search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidya Balan"

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தின் மூலம் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி தமிழில் அறிமுகமாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #JhanviKapoor
    இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்கவும் விருப்பப்பட்டுள்ளார்.

    அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக போனி கபூர் தயாரிப்பில் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தி பிங்க் படத்தின் கதையில் அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். வித்யா பாலனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார் என்றும் செய்தி வருகிறது. 



    தடக் என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்விக்கு தமிழில் இது முதல் படமாக அமைய இருக்கிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #JhanviKapoor

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, இந்தியில் ஷ்ரத்தா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Thala59 #AK59 #ShraddhaSrinath
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தை வரும் கோடை விடுமுறைக்கே ரிலீஸ் செய்வதற்காக பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என தென் இந்திய மொழிகளில் நடித்து வந்த டாப்சி இந்தியில் அறிமுகமாகி நடித்து வந்தாலும், அவருக்கு பிங்க் திரைப்படம் தான் பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தியின் முன்னணி கதாநாயகியாகவும் மாற்றியது. 


    இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    “குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி சில நாள்கள் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற உள்ளதால் படக்குழு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Thala59 #AK59 #ShraddhaSrinath

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் பணிபுரிபவர்கள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #AK59 #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து போனி கபூர் கூறும் போது, வித்யாபாலன் தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.

    அஜித் பற்றி போனி கபூர் கூறும்போது, “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்பதால் அதனை உருவாக்குகிறோம். அத்துடன் அஜித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைவது மகிழ்ச்சி. பிங்க் ரீமேக்கை மே 1-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அஜித்துடனான இரண்டாவது படம் 2020 ஏப்ரலில் திரைக்கு வரும். எச்.வினோத் போன்ற சிறந்த இயக்குநர் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார். #AK59 #Thala59 #AjithKumar #VidyaBalan #ShraddhaSrinath

    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன், தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். #Thala59 #PinkRemake #VidyaBalan
    விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு.

    முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனிடம் பேசப்பட்டது. ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்து அதன் தரத்தை குறைத்துவிடக் கூடாது என அதில் நடிக்க மறுத்தார்.



    தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் எவ்வாறு நடிக்கச் சம்மதித்தேன் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “இந்தப் படத்தில் நான் சிறிய வேடத்தில் நடிக்கிறேன். போனி கபூர் தயாரிக்கிறார். அவர்தான் சிறப்பு தோற்றம் தான் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உங்களுக்காக நடிக்கச் சம்மதிக்கிறேன் என்றேன். எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே நடிக்கிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார். #Thala59 #AjithKumar #PinkRemake #VidyaBalan

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க இந்திய சினிமாவில் முக்கிய நடிகையும், தேசிய விருது வென்றவருமான வித்யாபாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இந்த படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி பிரியதர்‌ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மேலும் தேசிய விருது வென்ற நடிகை வித்யா பாலனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் பதிப்புக்கு ஏற்ப எச்.வினோத் திரைக்கதையை மாற்றி அமைத்திருப்பதால், வித்யா பாலனுக்கு முக்கிய வேடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. #Thala59 #AjithKumar #HVinoth #VidyaBalan #Nazriya #ShraddhaSrinath #YuvanShankarRaja

    அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை பாலிவுட் நடிகை வித்யா பாலன் சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். #VidyaBalan #HillaryClinton
    முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. அம்பானி வீட்டுத் திருமணத்தில் வித்யா பாலன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

    அதனுடன், ‘விலைமதிப்பற்ற புகைப்படம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளிண்டனை மிகவும் பிடிக்கும். விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

    சில நாட்களுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஒரு கண்ணாடி மேற்கூரையை உடைத்தால் மட்டுமே வானத்தை அடைய முடியும் என்று. அவர் நமக்காக உடைத்துள்ளார். எதிர்காலத்தில் யாராவது ஒருவர் நிச்சயம் வானத்தை அடைவார். 

    உங்களுக்கு அவரைப் பிடிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவ்வளவுதான் நீங்கள் அவரைக் கணித்துள்ளீர்கள். எங்களுக்கு ஒரு ஹீரோவாக இருப்பதற்கு நன்றி ஹிலாரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் விமர்சனம். #KaatrinMozhiReview #Jyothika #Vidharth
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் - ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

    ஜோதிகாவுக்கு இரு அக்காள்கள், 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததால், ஜோதிகாவை இருவரும் மட்டம் தட்டி வருகிறார்கள். இதற்கிடையே தனது திறமையை நிரூபிக்க ஏதாவது மேடை கிடைக்காதா என்று எதிர்பார்த்து வருகிறார் ஜோதிகா. இந்த நிலையில் ஹலோ எப்.எம். நடத்தும் நிகழ்ச்சியில் பரிசு வெல்லும் ஜோதிகா, எப்.எம்.-ல் ஆர்.ஜே.,வாகும் முயற்சியில் இறங்குகிறார். குரல் தேர்வு முடிந்து எப்.எம்.-ல் வேலைக்கும் சேர்கிறார். ஜோதிகாவுக்கு இரவு நேர நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை.



    மனைவியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று விதார்த் வருத்தப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இது இவர்களது குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறது? எப்.எம்-க்கும் போன் செய்யும் பலரது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா, தனது குடும்ப பிரச்சனையை எப்படி சமாளித்தார்? ஆர்.ஜே. வேலையில் தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஜோதிகா தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். தனது தனித்துவமான முகபாவனை, பேச்சின் மூலம் படத்தின் காட்சிகளை நகர்த்துகிறார்.



    ஜோதிகாவுடன் வரும் காட்சிகளில் விதார்த் போட்டிபோட்டு நடித்திருக்கிறார். காட்சிக்கு ஏற்ப மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். 

    லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா, இளங்கோ குமரவேல் என அனைத்து கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக நடித்திருக்கிறார். சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.



    சாதாரண திரைக்கதையில் சென்டிமெண்ட் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு செல்வதும், அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்களையும் அன்பு, காதல், காமெடி என அனைத்து கலந்த கலவையான தனது பாணியில் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கி ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் கதையின் போக்குக்கு ஏற்ப விதார்த்தை காட்டிய இயக்குநர், தொடக்கம் முதல் இறுதிவரை ஜோதிகாவை ஒரே மாதிரியாக காட்டியிருக்கிறார். ஜோதிகாவின் உடை, அலங்காரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க வசதியான வீட்டுப் பெண்ணாகவே வலம் வருகிறார்.

    ஏ.எச்.காஷிப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `காற்றின் மொழி' இனிமை. #KaatrinMozhiReview #Jyothika #Vidharth

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள ஜோதிகா மற்றும் படக்குழுவுக்கு நடிகை வித்யா பாலன் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #KaatrinMozhi #Jyothika #VidyaBalan
    ஜோதிகா நடிப்பில் நாளை ரிலீசாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கி உள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, யோகி பாபு நடித்துள்ளனர்.

    இந்தியில் வெளியான ‘தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். இந்த நிலையில், படத்தையும், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வித்யா பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    அந்த வீடியோவில் வித்யா பாலன் கூறியதாவது, “எனக்கு ரொம்பவே சந்தோ‌ஷமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘தும்ஹரி சூளு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். #KaatrinMozhi #Jyothika #VidyaBalan

    ×