search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2018"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கோவை கிங்ஸ் அணி. #TNPL2018 #LKKvSMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

    அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர். கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். 
    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாருக் கான், அபினவ் முகுந்த் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அபினவ் முகுந்த் 12 ரன்களில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. அடுத்து இறங்கிய ரவிகுமார் ரோஹித் ஷாருக் கானுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் எண்ணிக்கை 52 ஆன போது ஷாருக் கான் 29 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய அஷ்வின்  வெங்கட்ராமன் ரோஹித்ஹுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணி 17. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரவிகுமார் ரோஹித் 34 ரன்களுடனும், அஷ்வின் வெங்கட்ராமன் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். #TNPL2018 #LKKvSMP 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ் அணி. #TNPL2018 #LKKvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

    அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர்.

    கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 #LKKvMP 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்க்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். #TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 25-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.



    3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.

    ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. #TNPL2018
    நத்தம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று இரவு திண்டுக்கல் நத்தத்தில் நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முதல் 5 ஆட்டத்தில் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது. ஏற்கனவே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டதாக தனது லீக் ஆட்டத்தில் வெற்றியுடன் முடிக்கும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடும் திண்டுக்கல் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தோற்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு கிடைக்கும். இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கு கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஸ்ரீகாந்த் அனிருதா ஆட்டத்தால் மதுரை பாந்த்ர்ஸ்க்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 24-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளையின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதித்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 43 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.



    அதன்பின் வந்த ஷாஜகான் 1 ரன்னில் வெளியேறினார். 6-வது வீரராக களம் இங்கிய ராஜ்குமார் 9 பந்தில் 20 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 பந்தில் 23 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மதுரை பாந்தர்ஸ் அணியின் கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, கவுசிக், தன்வர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    டி.என்.பி.எல். தொடரில் இன்று மோதும் காரைக்குடி காளை, மதுரை பாந்தர்ஸ் இரு அணிகளும் சம புள்ளிகளுடன் இருப்பதால் எந்த அணி பிளேஆப் சுற்றுக்கு நுழையும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNPL2018
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரில் இன்று மோதும் காரைக்குடி காளை, மதுரை பாந்தர்ஸ் இரு அணிகளும் சம புள்ளிகளுடன் இருப்பதால் எந்த அணி பிளேஆப் சுற்றுக்கு நுழையும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    3-வது டி.என்.பி.எஸ். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 23 ஆட்டம் முடிந்துவிட்டன. இதுவரை எந்த அணியும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறவில்லை. காரைக்குடி காளை, திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடனும், கோவை கிங்ஸ், டூட்டி பேட்ரியாஸ், திருச்சி வாரியர்ஸ் தலா 6 புள்ளிகளுடனும் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்று ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

    டி.என்.பி.எல். போட்டியின் 24-வது லீக் ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அனிருத் தலைமையிலான காரைக்குடி காளை- ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தலா 8 புள்ளியுடன் உள்ளன. இதனால் வெற்றி பெறும் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். தோல்வி அடைந்தாலும் இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு ஆட்டம் உள்ளன.

    காரைக்குடி காளை அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கோவையிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக காஞ்சி வீரன்ஸ் (8 விக்கெட்), சேப்பாக் சூப்பர் கில்லிஸ் (47 ரன்), திருச்சி வாரியர்ஸ் (1 விக்கெட்), திண்டுக்கல் டிராகன்ஸ் (6 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தியது.

    மதுரை பாந்தர்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (26 ரன்), டூட்டி பேட்ரியாஸ் (7 விக்கெட்), காஞ்சி வீரன்ஸ் (11 ரன்), திருச்சி வாரியர்ஸ் (5 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தியது. திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்று இருந்தது.

    காரைக்குடி காளையை போலவே மதுரை அணியும் தொடர்ச்சியாக 4 வெற்றியை பெற்று இருந்தது. இதனால் இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திருச்சி வாரியர்ஸ்க்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் எஸ் தினேஷ், கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவுசிக் காந்தி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எஸ் தினேஷ் 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.



    நிதிஷ் ராஜகோபால் 26 பந்தில் 41 ரன்களும், எஸ் அபிஷேக் 27 பந்தில் 30 ரன்களும் அடிக்க ரூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சோனு யாதவ், குமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 22-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி எஸ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கோபிநாத் களம் இறங்கினார்.  எஸ் கார்த்திக் - கோபிநாத் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கோபிநாத் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய எஸ் கார்த்தி 44 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இவர் அவுட்டாகும்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் வந்த உதிரசாமி சசிதேவ் 11 ரன்னிலும், ஸ்ரீஹரிஸ்குமார் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முருகன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 34 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய காஞ்சி அணி முதலில் அதிரடியாக விளையாடியது. விஷால் வைத்யா 24 ரன்களிலும், அருண் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து, சேப்பாக் பவுலர்களின் கை ஓங்கியது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தன.

    20 ஓவர்கள் முடிவில் காஞ்சி அணி 167 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து ஆட்டமிழந்தது. 
    திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 22-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி எஸ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கோபிநாத் களம் இறங்கினார்.  எஸ் கார்த்திக் - கோபிநாத் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கோபிநாத் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய எஸ் கார்த்தி 44 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இவர் அவுட்டாகும்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் வந்த உதிரசாமி சசிதேவ் 11 ரன்னிலும், ஸ்ரீஹரிஸ்குமார் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முருகன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 34 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்துள்ளது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது காரைக்குடி காளை அணி. #TNPL2018 #DDvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஜெகதீசன் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பால்சந்தர் அனிருத் சிறப்பாக ஆடி 53 ரன் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஆர்.விவேக் அதிரடியாக ஆடி 13 பந்தில் 5 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் குவித்தார். இறுதியில், 
    கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    காரைக்கு காளை அணியின் அஷ்வத் முகுந்தன் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதித்யா மற்றும் ஸ்ரீகாந்த் அனிருதா இறங்கினர். இருவரும் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். ஆதித்யா 49 ரன்னிலும், ஸ்ரீகாந்த் அனிருதா 43 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ராஜ்குமார் இறுதி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ராஜ்குமார் 41 ரன்களும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், காரைக்குடி காளை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. #TNPL2018 #DDvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக ஒரே ஓவரில் 32 ரன்கள் வழங்கி மோசமான சாதனையை பதிவு செய்தார் மோகன் பிரசாத் #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ஆட்டத்தின் 16-வது ஓவரை காரைக்குடி காளை அணியின் மோகன் பிரசாத் வீசினார். இந்த ஓவரை திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஆர் விவேக் சந்தித்தார். முதல் பந்தை லாங்-ஆஃப் திசையில் சிக்சருக்கு தூக்கினார் விவேக். 2-வது பந்தை லாங்-ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கினார்.



    3-வது பந்தை டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை ஓவர் லாங்-ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார். 5-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஐந்து பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

    இதன்மூலம் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததை சமன் செய்தார் மோகன் பிரசாத். கடைசி பந்தை பவுண்டரிக்கு தூக்கினார் விவேக். இதன்மூலம் மோகன் பிரசாத் ஒரே ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காரைக்குடி காளை வெற்றிக்கு 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL2018 #DDvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஜெகதீசன் 25 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

    அதன்பின் வந்த பால்சந்தர் அனிருத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்தாவது வீரராக களம் இறங்கிய ஆர் விவேக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 பந்தில் 5 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    பால்சந்தர் அனிருத் 41 பந்தில் அரைசதத்தை கடந்தார். அரைசதம் அடித்த அடுத்த பந்தில் பால்சந்தர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 53 ரன்கள் சேர்த்தார். பால்சந்தர் அனிருத் மற்றும் ஆர் விவேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் காரைக்குடி காளைக்கு 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ். காரைக்கு காளை அணியின் அஷ்வத் முகுந்தன் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
    ×