என் மலர்
நீங்கள் தேடியது "Chepauk Super Gillies vs VB Kanchi Veerans"
திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். #TNPL2018
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 22-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி எஸ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கோபிநாத் களம் இறங்கினார். எஸ் கார்த்திக் - கோபிநாத் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கோபிநாத் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய எஸ் கார்த்தி 44 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவர் அவுட்டாகும்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் வந்த உதிரசாமி சசிதேவ் 11 ரன்னிலும், ஸ்ரீஹரிஸ்குமார் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முருகன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 34 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்துள்ளது.