search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuti patriots"

    நெல்லையில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணிகள் மோதிய ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நெல்லையில் 2 ஆட்டங்கள் நடந்தன. இரவு நடந்த 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின்போது, வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இருந்தனர். அவர்கள், போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்களிடம் ரூ.100 கட்டணம் வசூலித்து கொண்டு, பவுண்டரி அடித்தால் ரூ.500 மற்றும் சிக்சர் அடித்தால் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறி, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நித்தியானந்த் (வயது 37), மகேஷ் சர்மா (26), சுனில் ஷெட்டர் (30), ஜெர்லால் (27), அபே (37), மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயிந்த் (26), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கோரத் (26), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகிந்த் (42), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அபின் (32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.  #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் காரைக்குடி காளை அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.



    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கவுஷிக் காந்தி மற்றும் தினேஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சுவாமிநாதன் வீசிய 4-வது ஓவரில் கவுஷிக் காந்தி பாஃப்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் அடித்திருந்தார்.

    அடுத்து, தினேஷ் 16 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் சுவாமிநாதன் வீசிய பந்தில் பௌல்டு ஆகி வெளியேறினார். சுப்ரமணியம் ஆனந்த் 32, நிதிஷ் ராஜகோபால் 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராஜகோபால் சதீஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    அதன்பின், அபிஷேக் 7, ரங்கராஜன் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினாலும், சதீஷின் சிறப்பான ஆட்டத்தினால், 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் ராஜகோபால் சதீஷ் 57 ரன்களுடனும், கனேஷ் மூர்த்தி ஒரு ரன்னுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    காரைக்குடி காளை அணியின் சுவாமிநாதன் 3 விக்கெட்டுக்களையும், யோ மகேஷ், பாஃப்னா, ராஜ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். ராஜகோபால் சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    இன்றைய போட்டியில் 18.4 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 165 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த டூட்டி பேட்ரியாட்ஸ் 19.2 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியதால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நூலிழையில் தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திருச்சி வாரியர்ஸ்க்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் எஸ் தினேஷ், கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவுசிக் காந்தி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எஸ் தினேஷ் 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.



    நிதிஷ் ராஜகோபால் 26 பந்தில் 41 ரன்களும், எஸ் அபிஷேக் 27 பந்தில் 30 ரன்களும் அடிக்க ரூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சோனு யாதவ், குமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியின் 18-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (28-ந்தேதி) நடக்கிறது. இதில் கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கவுசிக் காந்தி தலைமையிலான டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. அந்த அணி திருச்சி வாரியர்ஸ் (31 ரன்), மதுரை பாந்தர்ஸ் (26 ரன்), காரைக்குடி காளை (47 ரன்), கோவை கிங்ஸ் (53 ரன்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது.

    இழந்த பெருமையை மீட்கும் வகையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் 4 ஆட்டத்திலும் சேசிங்கில் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ வெல்லும் பட்சத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம்.

    முன்னாள் சாம்பியனான டூட்டி பேட்ரியாட்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி காஞ்சி வீரன்ஸ் (48 ரன்), கோவை கிங்ஸ் (11 ரன்) வீழ்த்தியது. 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் முறையே மதுரை பாந்தர்ஸ் (7 விக்கெட்), திண்டுக்கல் டிராகன்ஸ் (4 விக்கெட்) அணிகளிடம் தோற்றது.

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் டூட்டி பேட்ரி யாட்ஸ் இருக்கிறது.

    நடப்பு சாம்பியனும், முன்னாள் சாம்பியனும் மோதுவதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1, ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுகல் டிராகன்ஸ் அணி மோதின. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் ராஜகோபால் சதீஸ் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திண்டுக்கல் அணியின் மோகன் அபினவ் 2 விக்கெட் வீழ்த்தினார். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

    ஜெகதீசன் 31 ரன்கள், விவேக் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகம்மது ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் டூட்டி பேட்ரியாட்ஸ் மோதுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 14-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதைத் தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் (9 விக்கெட்), கோவை கிங்ஸ் (8 விக்கெட்), காஞ்சி வீரன்ஸ் (7 விக்கெட்) ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தியது.

    இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஜெகதீசன் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தொடக்க வீரரான அவர் 4 ஆட்டங்களில் 183 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். இவர் ஷாருக்கானை (208 ரன்) முந்தி முதல் இடத்தை பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் காஞ்சி வீரன்சையும் (48 ரன்) 2-வது ஆட்டத்தில் கோவை கிங்சையும் (11 ரன்) வென்றது. 3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிராக சதம் (111 ரன்) அடித்து முத்திரை பதித்து இருக்கிறார்.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்து மதுரை அணி 2-வது வெற்றியை சுவைத்தது. #TNPL 2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நத்தத்தில் நேற்று மாலை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், மதுரை பாந்தர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரன்வேகமும் சீராகவே நகர்ந்தது. கேப்டன் கவுசிக் காந்தி 11 ரன்னிலும், தினேஷ் 35 ரன்களிலும் வெளியேறினர்.

    இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆனந்தும் (44 ரன், 35 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), சீனிவாசனும் (42 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இறுதிகட்டத்தில் மதுரை பவுலர்கள் சாமர்த்தியமாக பந்து வீசினர். அதாவது ஸ்டம்பை குறி வைக்காமல் ஆப்-சைடுக்கு சற்று அதிகமாக வெளியே வீசினர். அதை அடித்து ஆட முடியாமல் தூத்துக்குடி வீரர்கள் தடுமாறினர். மதுரை பவுலர்களின் இந்த யுக்தியை கடைசி ஓவரில் ஆல்-ரவுண்டர் சதீஷ் தகர்த்தார். இதே போன்று பவுலிங் செய்த கிரன் ஆகாஷின் பந்து வீச்சில் ஆப்-சைக்கு நகர்ந்து சென்று பந்தை இரண்டு முறை ‘பைன்லெக்’ பகுதியில் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று காணாமல் போய் விட்டது. இன்னொரு முறையும் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

    20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. சதீஷ் 24 ரன்களுடன் (10 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். மதுரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    பின்னர் களம் புகுந்த மதுரை அணிக்கு அருண் கார்த்திக்கும், கேப்டன் ரோகித்தும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் (8.2 ஓவர்) சேர்த்த நிலையில் பிரிந்தனர். ரசிகர்களுக்கு விருந்து படைத்த ரோகித் 28 ரன்களும், 6-வது அரைசதத்தை எட்டிய அருண் கார்த்திக் 59 ரன்களும் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து வந்த சந்திரன் (29 ரன்), ஜே.கவுசிக் ஆகியோரும் ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். தூத்துக்குடி கேப்டன் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் மதுரை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    19-வது ஓவரில் பவுண்டரி, சிக்சருடன் ஜே.கவுசிக் இன்னிங்சை வெற்றிகரமாக முடித்து வைத்தார். மதுரை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜே.கவுசிக் 38 ரன்களுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தூத்துக்குடி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3-வது ஆட்டத்தில் ஆடிய தூத்துக்குடி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

    அதே சமயம் 3-வது லீக்கில் விளையாடிய மதுரை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் தோற்கடித்து இருந்தது. முதல் இரு ஆண்டில் எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி, இந்த சீசனில் இந்நாள் சாம்பியனையும், முன்னாள் சாம்பியனையும் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மதுரை கேப்டன் ரோகித் கூறுகையில், ‘இரு சாம்பியன் அணிகளை வீழ்த்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இத்துடன் திருப்திபட்டு விடமாட்டோம். மேலும் வெற்றிகளை குவிக்கும் வேட்கையில் இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டார். #TNPL 2018 #NammaOoruNammaGethu
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மதுரை பாந்தர்ஸ். #TNPL #MaduraiPanthers #TutiPatriots
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டூட்டி பாட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் எஸ்.தினேஷ் ஆகியோர் களமிறங்கினர்.

    தினேஷ் 35 ரன்களும், சுப்ரமண்யன் ஆனந்த் 44 ரன்களும், அக்ஷய் சீனிவாசன் 42 ரன்களும் எடுத்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் சிறப்பாக ஆடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து, ரோகிட் 28 ரன்களும், ஸ்ரீஜித் சந்திரன் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஜெகதீசன் கவுசில் 22 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. #TNPL #MaduraiPanthers #TutiPatriots
    தொடக்க வீரர்களின் அதிரடியால் கோவை கிங்ஸ்க்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ். #TTvLKK #TUTIPatriots
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் கவுசிக் காந்தி, எஸ் தினேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கவுசிக் காந்தி 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, மூன்று சிக்சருடன் 43 ரன்களும், எஸ் தினேஷ் 42 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த சுப்ரமணியன் ஆனந்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய அக்சேய் ஸ்ரீனிவாசன் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்கள் குவித்தார். அக்சேய் ஸ்ரீனிவாசன் அவுட்டாகும்போது டூட்டி பேட்ரியாட்ஸ் 15.4 ஓவரில் 152 ரன்கள் குவித்திருந்தது.



    அதன்பின் டூட்டி பேட்ரியாட்ஸின் ரன்குவிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. கடைசி 26 பந்தில் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால், டூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன், அஜித் ராம், பிரசாந்த் ராஜேஷ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் போட்டியின் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று இரவு நடக்கும் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான தூத்துக்குடி தொடக்க ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று தனது 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    அந்த அணியில் கவுசிக் காந்தி, தினேஷ், ஆனந்த் சுப்பிரமணியம், ஆர்.சதீஷ், சாய்கிஷோர், அபிஷேக், ஆதிசயராஜ், டேவிட்சன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இதில் கவுசிக் காந்தி முதல் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தி இருந்தார். இதனால் பேட்டிங் வரிசை பலமுடன் காணப்படுகிறது. பந்துவீச்சிலும் தூத்துக்குடி திறமையுடன் இருக்கிறது. இதனால் 2-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. காரைக்குடி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. திண்டுக்கல்லிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    அந்த அணியில் அபினவ் முகுந்த், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத், ரோகித், அந்தோணிதாஸ், நடராஜன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கடந்த இரண்டு சீசனில் தூத்துக்குடி அணியில் விளையாடிய அபினவ் முகுந்த் இன்று அந்த அணிக்கு எதிராக களம் இறங்குகிறார்.

    திண்டுக்கல்லுக்கு எதிரான கடந்த போட்டியில் 185 ரன் குவித்தும் கோவை தோற்றது. இதனால் அந்த அணி பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    ×