என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chepauk super gillies"

    • குவாலிபையர்-1ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வியடைந்திருந்தது.
    • எலிமினேட்டரில் திண்டுக்கல் அணி திருச்சியை வீழ்த்தியிருந்தது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் குவாலிபையர்-2 திண்டுக்கல்லில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    குவாலிபையர்-1ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திருப்பூர் அணியிடம் தோல்வியடைந்திருந்தது. எலிமினேட்டர் சுற்றில் திருச்சி அணியை திண்டுக்கல் வீழ்த்தியிருந்தது.

    • விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் விளாசினார்.
    • பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் அடித்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய மதரை பாந்தர்ஸ் 156 ரன்கள் சேர்த்தது, பின்னர். 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது.

    ஆஷிக், ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 17 பந்தில் 22 ரன்களும், ஹரிகரன் 17 பந்தில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது, 14 ஓவரில் 114 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. என். ஜெகதீசன் 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 12.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 7 போட்டிகளில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    • சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழைக் காரணமாக அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் ராம் அரவிந்த், பாலசந்தர் அனிருத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அரவிந்த் ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அனிருத் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் சதுர்வேத் உடன் ஆதீக் உர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மதுரை பாந்தர்ஸ் 6.4 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிலம்பரசன் பந்தில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சரத்குமார் 1 ரன்னில் வெளியேறினார். முருகன் அஸ்வின் அதிரடியாக 34 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    19ஆவது ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. தன்வர் கடைசி ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுக்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்துள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
    • மதுரை பாந்தர்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    மழை பெய்த காரணத்தினால் அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்தது. இதனால் ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மதுரை 6 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.

    • திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
    • பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.

    9-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் கடந்த 5-ந்தேதி கோவையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் போட்டி நடந்தது.

    நெல்லையில் நேற்று இரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி தோற்கடித்தது.

    இத்துடன் நெல்லையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

    கோவை கிங்ஸ் அணி வெளியேற்றப்பட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு 6 புள்ளிகளுடன் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ், தலா 4 புள்ளிகளுடன் உள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. அந்த அணிகளுக்கு தலா ஒரு ஆட்டம் எஞ்சி உள்ளது.

    கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நாளை திண்டுக்கல்லில் தொடங்குகிறது. நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மதியம் 3.15 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட அந்த அணி கடைசி லீக் போட்டியிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக் காமல் பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் முனைப்பில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விஜய் சங்கர், ஜெகதீசன், ஹரி கரன், ஆஷிக், அபிஷேக் தன்வர், பிரேம்குமார், எம். சிலம்பரசன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    சதுர்வேத் தலைமையி லான மதுரை அணி வெற்றி பெற்றால்தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் தொட ரில் இருந்து வெளியேற்றப் படும். இதனால் அந்த அணி வெற்றி நெருக்கடியில் உள்ளது.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட கோவை அணி வெற்றியுடன் தொடரை முடிக்க விரும்பும். இப்போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சேலம் அணி வெற்றிக்காக போராடும்.

    பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.

    • பாபா அபராஜித் 40 பந்தில் 63 ரன்கள் விளாசினார்.
    • விஜய் சங்கர் 46 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 21ஆவது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த பேட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்தது. கே. ஆஷிக், மோஹிக் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து பாபா அபராஜித் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் ஹரிகரன் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபா அபராஜித் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 40 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    4ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17 ஓவரில் 152 ரன்கள் சேர்த்திருந்தது.

    18ஆவது ஓவரின் 4ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 41 பந்தில் அரைசதம் அடித்தார் விஜய் சங்கர். தொடர்ந்து விளையாடிய அவர் 19ஆவது ஓவரில் 46 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 171 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே அடிக்க 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 178 ரன்கள் எடுத்துள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • திருச்சி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 21ஆவது போட்டி திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சேப்பாக் சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும வெற்றி பெற்று பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.

    • சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் 47 ரன்னில் அவுட் ஆனார்.
    • சேப்பாக் அணி தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சேலம்:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி சேலம் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிசாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 31 ரன் எடுத்த நிலையில் நிசாந்த் ஆட்டமிழந்தார்.

    அடுத்த வந்த ராஜகோபால் 7, கவின் 1, ராஜேந்திரன் 3, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் 47 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் சன்னி சந்த் மற்றும் முகமது ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சன்னி சந்து 19 பந்தில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது 11 பந்தில் 28 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
    • சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது.

    சேலம்:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு 7 போட்டிகள் முடிவடைந்தன. 13-ந்தேதி முதல் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் 17- வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் (மதுரை, திருச்சி, திருப்பூர்) வெற்றி பெற்றது. நெல்லையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    • பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன்கள் விளாசினார்.
    • விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன்கள் அடித்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 10ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 144 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது. கே. ஆஷிக், மோகித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 22 பந்தில் 35 ரன்களும், ஹரிகரன் 24 பந்தில் 21 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின் 3ஆவது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன்களும், விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன்களும் விளாசி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 15.1 ஓவரிலேயே 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 போட்டியில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. சேலம் அணியும் 3 வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.

    கோவை அணி இதுவரை விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    • கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 10ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய லைகா கோவை கிங்ஸ் 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார். பிரேம் குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    8 ஆட்டங்கள் முடிவில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.

    திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு சேலத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. வருகிற 19-ந் தேதி வரை அங்கு 9 ஆட்டங்கள் நடக்கிறது. வாடிப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.

    டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. திருப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும். நெல்லையை 41 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஆஷிக், விஜய் சங்கர், ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், ஸ்வப்னில் சிங், பந்துவீச்சாளர் எம். சிலம்பரசன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி தான் மோதியுள்ள 2 ஆட்டங்களிலும் (திண்டுக்கல், மதுரை அணிகளுக்கு எதிராக) தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. கோவை அணியில் பி.சச்சின், லோகேஷ்வர், ஆண்ட்ரே சித்தார்த், ரோ கித், எம். சித்தார்த், ஜதவேத் சுப்பிரமணியன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 ஆட்டத்தில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளன. அந்த அணிகள் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    ×