

8 அணி–கள் பங்–கேற்–கும் 10-வது தமிழ்–நாடு பிரி–மீ–யர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்–கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 23-ந்தேதி வரை நடக்–கிறது. இதற்–கான வீரர்–கள் ஏலம் அடுத்த மாதம் 3-ந்தேதி நடத்–தப்–ப–டு–கிறது. இதை–யொட்டி ஒவ்–வொரு அணி நிர்வா–க–மும் தக்–க–வைத்த மற்–றும் விடு–வித்த வீரர்–க–ளின் பட்–டி–யலை டி.என்.பி.எல். நிர்–வா–கத்–துக்கு சமர்ப்–பித்–துள்–ளது. அந்த பட்–டி–யல் நேற்று அதிகாரபூர்–வ–மாக வெளி–யி–டப்–பட்–டது.
இதன்–படி 4 முறை சாம்–பி–ய–னான சேப்–பாக் சூப்–பர் கில்–லீஸ் அணி அதி–க–பட்–ச–மாக ஆல்-ரவுண்–டர் அபி–ஷேக் தன்–வரை ரூ.7½ லட்–சத்–துக்–கும், ஸ்வப்–னில் சிங்கை ரூ.6¾ லட்–சத்–துக்–கும், என். ஜெக–தீ–சனை ரூ.3¾ லட்–சத்–துக்–கும் தக்க வைத்–துள்–ளது. மொகித் ஹரி–க–ரன், லோகேஷ் ராஜ், எம்.சிலம்–ப–ர–சன், ஆஷிக், பிரேம்–கு–மார், தினேஷ் ராஜ், ராஜ–லிங்–கம், சுனில் கிருஷ்ணா ஆகி–யோ–ரும் அணி–யில் நீடிக்–கி–றார்–கள். 11 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆல்-ரவுண்–டர் பாபா அப–ரா–ஜித், விஜய் சங்–கர், கிரு–பா–கர், அக்–ரம் கான், ரோகித் சுதர், அவ்–ஷிக் ஸ்ரீனி–வாஸ், சச்–சின், ராஜன், அர்–ஜூன் மூர்த்தி ஆகிய 9 பேர் விடு–விக்–கப்–பட்–டுள்–ள–னர்.
நடப்பு சாம்–பி–ய–னான திருப்–பூர் தமி–ழன்ஸ் அணி கேப்–டன் சாய் கிஷோர் (ரூ.10 லட்–சம்), டி. நட–ரா–ஜன், ஆ.சிலம்–ப–ர–சன், துஷர் ரஹேஜா, பிர–தோஷ் ரஞ்–சன் பால், இசக்–கி–முத்து உள்–பட 14 பேரை தக்–க–வைத்–தது. கே.ராஜ்–கு–மார், டேரில் பெரா–ரியோ உள்–பட 6 பேரை கழற்றிவிட்–டது.
திருச்சி கிராண்ட்–சோ–ழாஸ் அணி–யில் ஜெ.சுரேஷ்–கு–மார் (ரூ.10 லட்–சத்து 6,250), சர–வ–ண–கு–மார், வாஷிங்–டன் சுந்–தர், அதி–ச–ய–ராஜ் டேவிட்–சன், ஆர்.ராஜ்–கு–மார், அந்–தோ–ணி–தாஸ் உள்–பட 13 பேரும், திண்–டுக்–கல் டிரா–கன்ஸ் அணி–யில் வருண் சக்–ர–வர்த்தி (ரூ.7½ லட்–சம்), சந்–தீப் வாரி–யர், பாபா இந்–தி–ர–ஜித் உள்–பட 12 பேரும், கோவை கிங்ஸ் அணி–யில் ஆல்-ரவுண்–டர் ஷாருக்–கான் (ரூ.10 லட்–சம்), சாய் சுதர்–சன், லோகேஷ்–வர், ஆந்த்ரே சித்தார்த் உள்–பட 11 பேரும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி–யில் சோனு யாதவ் (ரூ.10 லட்–சம்), அஜி–தேஷ், சச்–சின் ரதி உள்–பட 15 பேரும், மதுரை பாந்–தர்ஸ் அணி–யில் எம்.கார்த்–திக் (ரூ.5¾ லட்–சம்), அதீக் உர் ரகு–மான், அனி–ருத் சீதா–ராம், விக்–னேஷ், சதுர்–வேத் உள்–பட 11 பேரும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி–யில் எம்.முக–மது (ரூ.11½ லட்–சம்) ஹரி நிஷாந்த், நிதேஷ்–ரா–ஜ–கோ–பால், அஜித் ராம், அபி–ஷேக் உள்–பட 16 பேரும் தக்க வைக்–கப்பட்–டனர்.
8 அணி–களும் சேர்த்து மொத்–தம் 103 வீரர்–களை தக்–க–வைத்–துக் கொண்டு, 56 வீரர்–களை கழற்றி விட்–டுள்–ளன. கடந்த சீச–னில் திண்–டுக்–கல் டிராகன்ஸ் அணிக்–காக ஆடிய மூத்த சுழற்–பந்து வீச்–சா–ளர் ஆர்.அஸ்–வின் ஓய்வு பெற்று விட்–ட–தால் அவ–ரும் விடு–விக்–கப்–பட்–டுள்–ளார்.
விடு–விக்–கப்–பட்ட மற்–றும் புதிய வீரர்–கள் ஏலத்–தில் பங்–கேற்க தங்–க–ளது பெயரை டி.என்.பி.எல். மற்–றும் தமிழ்–நாடு கிரிக்–கெட் சங்க இணை–ய–த–ளத்தில் வரு–கிற 25-ந்தேதி வரை பதிவு செய்து கொள்–ள–லாம்.
இந்த முறை ஒவ்–வொரு அணி–யும் ஏலத்–தில் ரூ.50 லட்–சம் ெசல–விட அனு–ம–திக்–கப்–பட்–டுள்–ளது. தக்க வைத்த வீரர்–க–ளின் ஊதி–யம் போக மீதி தொகையை கொண்டு தேவை–யான வீரர்–களை ஏலத்–தில் எடுக்–க–லாம். அந்த வகை–யில் சேப்–பாக் சூப்–பர் கில்–லீ–சி–டம் ரூ.24 லட்–சம் கையி–ருப்பு உள்ளது.