search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DD"

    • முதலில் ஆடிய நெல்லை 159 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்து வென்றது.

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.

    நெல்லையில் டிஎன்பிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 39 ரன் எடுத்தார். ஹரீஷ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. விமல் குமார், ஷிவம் சிங் இருவரும் அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் சிங் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 62 ரன் எடுத்த நிலையில் விமல் குமார் ரன் அவுட்டானார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது திண்டுக்கல் அணி பெறும் 5-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, தமிழ் படங்களை தொடர்ந்து, தெலுங்கில் புதிய படத்தில் நடித்து வருகிறார். #DD
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

    திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.



    டிடி தற்போது தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ்பூரி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது.

    இந்தத் தகவலை டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்த நிலையில் சார்மி அதை பகிர்ந்துள்ளார். ‘டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை மக்கள் பார்க்க இனியும் காத்திருக்கமுடியாது” என்று சார்மி தெரிவித்துள்ளார். டிடிக்கு கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2019 சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக முகமது கைஃப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #IPL2019 #DD
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசனுக்கான வேலைகளில் 8 அணிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 2018-ஐ விட தற்போது சிறப்பாக விளையாடும் வகையில் வீரர்களை தக்கவைத்துக் கொள்வது, வீரர்களை மாற்றுவது, பயிற்சியாளர்களை நியமிப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    பஞ்சாப் அணி தனது தலைமை பயிற்சியாளரை நீக்கியுள்ளது. இந்நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்திய அணியின் முன்னாள் நடுகள வீரரான முகமது கைஃப்-ஐ துணைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்து வருகிறார். ஜேம்ஸ் ஹோப்பும் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.



    முகமது கைஃப் 2017-ல் குஜராத் லயன்ஸ் அணியில் துணைப் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். முகமது கைஃப் இந்திய அணிக்காக 125 ஒருநாள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்க்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். #TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 25-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.



    3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.

    ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், நான்காவதாக பிளேஆப் சுற்றில் நுழைவதில் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
    புதுடெல்லி:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது. 18 புள்ளிகளை பெற்றுள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் 2-வது அணியாக முன்னேறியது. அந்த அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு எஞ்சியுள்ளது.

    நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றது.

    பிளேஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ்
    (14 புள்ளி), மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன. இதில் ராஜஸ்தானுக்கு போட்டிகள் முடிந்து விட்டது. மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு தலா 1 ஆட்டங்கள் உள்ளன.

    டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதால் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்டது. அந்த அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.



    இன்றைய கடைசி நாள் லீக்கில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. டெல்லி பெரோ சா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 8 மணிக்கு புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

    நடப்பு சாம்பியனான மும்பை அணி டெல்லியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடைந்தால் மும்பை அணி வெளியேற்றப்படும்.

    மும்பை வென்று, கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் 14 புள்ளியின் சம நிலையில் இருக்கும். அப்படி நிகழும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். ராஜஸ்தான், பஞ்சாப்பை ஒப்பிடுகையில் மும்பை ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தினால் அந்த அணி வாய்ப்பை பெறும் சூழ்நிலை உருவாகும்.

    இன்றைய ஆட்டங்களில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தோற்றால் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

    மும்பை வென்று, பஞ்சாப் தோற்றால் ராஜஸ்தான், மும்பை அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேடில் ஒரு அணி தகுதி பெறும். மும்பை தோற்று சென்னை அணியை பஞ்சாப் வீழ்த்தினால் ராஜஸ் தான், பஞ்சாப் அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேட்டில் ஒரு அணி நுழையும்.

    பஞ்சாப்பின் ரன்ரேட் -0.49 ஆக உள்ளது. இதனால் அந்த அணி சென்னைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். சென்னை அணி வலுவானது என்பதால் பஞ்சாப் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். முந்தைய ஆட்டத்தில் சூப்பர் கிங்சை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் பஞ்சாப் அணி நம்பிக்கையுடன் உள்ளது.



    மேலும், மும்பை - டெல்லி ஆட்டத்துக்கு பிறகு தான் இந்த ஆட்டம் நடக்கிறது. இதனால் அதன் முடிவுக்கு ஏற்றது போல விளையாடலாம். இந்த போட்டித் தொடரில் தொடக்கத்தில் அபாரமாக ஆடிய பஞ்சாப் பின்னர் தொடர் தோல்வியால் நெருக்கடிக்கு ஆளானது. தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இதனால், சென்னைக்கு எதிராக அதிரடியாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஏற்கனவே வாய்ப்பை இழந்த டெல்லி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி அந்த அணியை வெளியேற்றும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணி கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. இதனால், இன்றைய இரண்டு போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
    ×