search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தெலுங்கில் கால் பதிக்கும் திவ்யதர்ஷினி
    X

    தெலுங்கில் கால் பதிக்கும் திவ்யதர்ஷினி

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, தமிழ் படங்களை தொடர்ந்து, தெலுங்கில் புதிய படத்தில் நடித்து வருகிறார். #DD
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

    திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.



    டிடி தற்போது தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ்பூரி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது.

    இந்தத் தகவலை டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்த நிலையில் சார்மி அதை பகிர்ந்துள்ளார். ‘டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை மக்கள் பார்க்க இனியும் காத்திருக்கமுடியாது” என்று சார்மி தெரிவித்துள்ளார். டிடிக்கு கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×