search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் - திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது காரைக்குடி காளை
    X

    டிஎன்பிஎல் - திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது காரைக்குடி காளை

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது காரைக்குடி காளை அணி. #TNPL2018 #DDvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஜெகதீசன் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பால்சந்தர் அனிருத் சிறப்பாக ஆடி 53 ரன் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஆர்.விவேக் அதிரடியாக ஆடி 13 பந்தில் 5 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் குவித்தார். இறுதியில், 
    கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    காரைக்கு காளை அணியின் அஷ்வத் முகுந்தன் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதித்யா மற்றும் ஸ்ரீகாந்த் அனிருதா இறங்கினர். இருவரும் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். ஆதித்யா 49 ரன்னிலும், ஸ்ரீகாந்த் அனிருதா 43 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ராஜ்குமார் இறுதி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ராஜ்குமார் 41 ரன்களும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், காரைக்குடி காளை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. #TNPL2018 #DDvKK
    Next Story
    ×