search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchendur Temple"

    • நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    விழாவில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன்,செந்தில் முருகன்,கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு சுகாதார வசதி, குடிநீர், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.

    • 1-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

    விசாக திருநாளான 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இத்திருவிழா 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 2-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நேற்று தொடங்கியது. இத்திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டத்திற்கு எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகியது. பின்னர் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை சுற்றி வலம் வந்தார் வந்தார். பின்னர் சுவாமிக்கு அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். வசந்த திருவிழா நிறைவு நாளான 10-ம் நாள் ஜூன் 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

    • சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான்.
    • ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார்.

    பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.

    ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

    காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

    இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.

    இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

    சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

    அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

    சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான்.

    அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரிக்க செய்தார்.

    அதன்படி தான் முருகன் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளினார். அவருக்கும் சூரனுக்கும் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. 6-வது நாள் சூரனை முருகப் பெருமான் வீழ்த்தினார். அது சூரசம்ஹாரம் எனப்படுகிறது. அந்த போர் எப்படி.

    ஆறுமுகன் அவதாரம்

    தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன.

    அவற்றை வாயு பகவான் ஏந்திச்சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்து போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான்.

    ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

    பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்பில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

    அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வைபட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர்.

    இவர்கள் ஆனைவரும் முருகனின் படைவீரர்களாயினர்.

    இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றிதரும் வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

    அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார்.

    ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.

    சூரபத்மன் இச்செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

    பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப்படையும் கிளம்பிய முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்றனர்.

    அதன் பிறகு முருகப்பெருமாள் சூரபத்மனுடன் போர் நடத்தினார்.

    • வைகாசி விசாக வசந்த திருவிழா 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 1-ந்தேதி, 3-ந்தேதி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    முன்னதாக வைகாசி விசாக வசந்த திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்கச்சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு வைத்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.

    10-ம் நாளான வருகிற 2-ந்தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார்.

    அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடை பெறுகிறது.

    பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்கிறார்.

    இதேபோல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான வருகிற 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர்.
    • இது 2-ம் படைவீடு என்று போற்றப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். 2-ம் படைவீடு என்று போற்றப்படும் இந்த ஆலயம், முருகப்பெருமானின் தனித்துவம் மிக்க கோவில் என்றாலும், சூரபத்மனை அழித்த முருகப்பெருமான் இங்கு, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்திருக்கிறார்.

    அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

    பஞ்ச லிங்கங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஐந்து லிங்கங்களும், முருகப்பெருமானின் மூலவர் கருவறைக்கு பின்புறம் உள்ள தனி அறையில் காணப்படுகிறது.

    • பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்தரை முதல் நாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாரதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

    கோவில் உள் பிரகாரத்தில் விசு கனி தரிசனம் செய்யப்பட்டிருந்தது.

    காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், காலை 10.30 சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
    • காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீதனையும் நடக்கிறது. பின்னர் 8.30 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீதனையும், விளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்துக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களில் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    பிழைப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் இன்று ஒருநாளாவது தங்கள் குல தெய்வங்களான சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

    குலதெய்வம் எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் உள்ளவர்கள் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமியை குலதெய்வமாக நினைத்து அங்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    குலதெய்வம் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்ச்சை கடனாக குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, ஆடு, கோழி, வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    பங்குனி உத்திரம் பெரும்பாலான கோவில்களில் நேற்று பகல் 11 மணிக்கு மேல் இன்று காலை 11 மணி வரை உத்திர நட்சத்திரம் உள்ளதால் ஏராளமானவர்கள் நேற்று தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் அதன் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள குன்று மலை சாஸ்தா கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவெகு விமர்சையாக நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் அதிகாலை முதலே திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு மேல் தவசு காட்சிக்குச் சென்ற வள்ளியம்மனை அழைத்து வர சுவாமி புறப்படுதல், அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளி திருக்கல்யாணம் விமர்சையாக நடக்கிறது.

    • சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

    மாலை 5 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    வார விடுமுறை தினமான நேற்று கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது. அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ. 1500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
    • சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ. 1500-ல் இருந்து ரூ. 5 ஆயிரம் என உயர்த்தப்பட்டது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகார்ச்சனை நடத்த ரூ. 1500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அமலுக்கு வந்தது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில் மூலம் சண்முகார்ச்சனை நடத்த கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ. 1500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

    தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ. 5 ஆயிரம் என உயர்வு செய்ய சட்டவிதிகளின்படி அறிவிப்பு வெளியிடபட்டது.

    இது குறித்து ஆட்சேபனை ஏதும் வரப் பெறாத நிலையில், கோவில் அறங்காவலர் குழு சுற்று தீர்மானம்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ. 1500-ல் இருந்து ரூ. 5 ஆயிரம் என உயர்த்தப்பட்டது. இந்த கட்டணம் இன்று (திங்கட்கிழமை) முதல் கோவில் நிர்வாகத்தால் நடை முறைப்படுத்தப்பட்டது.

    • 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ.1,500 சண்முகார்ச்சனைக்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
    • பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்தி நேர்த்திக்கடன் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில் மூலம் சண்முகார்ச்சனை நடத்த கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

    இதுதொடர்பாக தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.5 ஆயிரம் என உயர்த்தி சட்டவிதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து ஆட்சேபனை ஏதும் வரப்பெறாத நிலையில், கோவில் அறங்காவலர் குழு சுற்று தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

    அதன்படி, கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.5,000 என உயர்த்தப்பட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் கோவில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.

    ஆகவே, பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.5,000 கட்டணத்தை செலுத்தி சண்முகார்ச்சனை நேர்த்திக்கடன் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×