search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவபெருமான்"

    • சித்திரை, ஐப்பசி, ஆவணி மாத பரணி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள் யோக பைரவருக்கு சிறப்பான தினங்கள்.
    • எழுதி வைத்து தேய்பிறை அஷ்டமி பவுர்ணமி தினங்களில் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

    ஓம் பயம் போக்குபவரே போற்றி

    ஓம் குதிரை வாகனரே போற்றி

    ஓம் யோகினி தேவதையே போற்றி

    ஓம் கல்லாபினி தேவியே போற்றி

    ஓம் அன்பு வடிவே போற்றி

    ஓம் ஆனந்த உருவே போற்றி

    ஓம் இனியதைச் செய்வாய் போற்றி

    ஓம் பயம் போக்குபவரே போற்றி

    ஓம் குதிரை வாகனரே போற்றி

    ஓம் பொன்கோட்டை வசிப்போய் போற்றி

    ஓம் மீன்கொடி மன்னவா போற்றி

    ஓம் பெரும் செல்வ மகனே போற்றி

    ஓம் மகர ஆலயத் தெய்வமே போற்றி

    ஓம் பாக்யேஸ்வரி பதியே போற்றி

    ஓம் ஆனந்தவல்லி மாக்பரே போற்றி

    ஓம் உல்லாசினி யே போற்றி

    ஓம் நிராகுலியே போற்றி

    ஓம் யோகினி தேவதையே போற்றி

    ஓம் கல்லாபினி தேவியே போற்றி

    ஓம் இதேஸ்வரி தேவியே போற்றி

    ஓம் விநோதினி சக்தியே போற்றி

    ஓம் சட்குல தேவியரே போற்றி

    ஓம் அட்ட பைரவரே போற்றி

    ஓம் அசிதாங்க பைரவரே போற்றி

    ஓம் குரு பைரவரே போற்றி

    ஓம் சண்ட பைரவரே போற்றி

    ஓம் குரோத பைரவரே போற்றி

    ஓம் உன் மத்த பைரவரே போற்றி

    ஓம் கபால பைரவரே போற்றி

    ஓம் பீஷண பைரவரே போற்றி

    ஓம் சம்மார பைரவரே போற்றி

    ஓம் அதிஷ்டம் தரும் பைரவரே போற்றி

    ஓம் சௌபாக்ய பைரவரே போற்றி

    ஓம் ஐஸ்வர்யம் தரும் பைரவரே போற்றி

    ஓம் பொன்மணி தனம் அருள்வாய் போற்றி

    ஓம் யோகங்களைக் கொடுக்கும் யோக

    பைரவ தேவனே போற்றி! போற்றி!

    இந்த போற்றித் திருஉருவை வியாபாரம், நகைக்கடை வைத்திருப்பவர்கள் தங்கள் லாபக்கணக்கு நோட்டு புத்தகம் மற்றும் ரெக்கார்டுகளில் எழுதி வைத்து தேய்பிறை அஷ்டமி பவுர்ணமி தினங்களில் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

    சப்த முகீ என்கிற 7 முக ருத்ராட்சத்தை கல்லாப் பெட்டியில் வைத்து 3 முறை கூறிட யோக பைரவர் அருள் செய்து வியாபார வசியத்தை ஏற்படுத்திட மக்கள் வருவார்கள்.

    சித்திரை, ஐப்பசி, ஆவணி மாத பரணி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள் யோக பைரவருக்கு சிறப்பான தினங்கள்.

    எல்லா மாதங்களிலும் வரும் பவுர்ணமி அன்று அதிகாலை யோக பைரவரை செவ்வரளி, ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்து மார்பில் அத்தர்புணுகு, ஜவ்வாது மார்பில் சாற்றுவது நல்லது என்று பைரவ பூஜை செய்பவர்கள் சொல்வது வழக்கம்.

    • நான்கு திக்குகளிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணிபைரவர், ஒளஷ பைரவர் எனும் நான்கு பைரவர்கள் அமர்ந்துள்ளனர்.
    • அதனுள் இருக்கும் வீதிகளில் கடல், மலை ஆகாசத்தைக் குறிப்பன.

    இவ்வாறு யோக பைரவரையும் அவரது உபதேவதைகளையும் வர்ணிக்கும் படியாக அமைந்திருப்பது தான் சௌபாக்ய பைரவ யந்திர வடிவம் ஆகிறது.

    இதன் நடுவே நமக்கு உடன்பலன் தரக்கூடிய அஷ்ட பைரவர்கள் தளங்களிலும் பதினாறு இதழ்த் தாமரைகளில் 16 லட்சுமிகளும், சக்ர வானகிரி சப்த சாகரங்களில் தேவர்கள் வழிபடப்படுகிறார்கள்.

    நான்கு புறங்களிலும் மூன்று வீதிகள் தனித்தனியாக உள்ளன.

    நான்கு திக்குகளிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணிபைரவர், ஒளஷ பைரவர் எனும் நான்கு பைரவர்கள் அமர்ந்துள்ளனர்.

    அதனுள் இருக்கும் வீதிகளில் கடல், மலை ஆகாசத்தைக் குறிப்பன.

    இந்த அமைப்போடு கூடிய யோக பைரவச் சக்கரத்தை ஸ்தாபனம் செய்து வழிபடுபவன் இக்கலியுகத்தில் ஆபத்துகளிலிருந்து காக்கப்பட்டு தேவர்கள், ஆவரண தேவதைகளின் அருள்பெற்று சௌபாக்ய பைரவர் என்ற பெயருள்ள யோக பைரவ மூர்த்தியின் ஆசீர்வாதத்தினால் சகல உலக போகங்களையும் பெற்றிடுவார்.

    இயற்கைச் சீற்றம், விலங்கு, பறவை, விஷப்பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்று பைரவ கல்டம் உரைக்கிறது.

    யோக பைரவக் கோட்டை எனும் பைரவர் யந்திர வர்ணணையைப் படித்தாலே அவர் புண்ணியக்கதை படித்த பலனால் நலம் அடையலாம்.

    • பொன் வண்ணத்தோடு அகன்ற கண்கள் கொண்ட மீன்கள் அவரிடம் உள்ள செல்வத்திற்கு பாதுகாப்பாளர்களாக உள்ளனர்.
    • வெளிவட்டத்தாமரைப் பொய்கை நடுவே 16 பவள மாளிகைகளில் பொன் பொருள், செல்வங்கள் குவிந்துள்ளன.

    பைரவ பூஜையைப் பற்றிச் சொன்னதும் அசிதாங்க பைரவர், குரு பைரவர், உன்மத்த பைரவர், ப்ரசண்ட பைரவர், சம்ஹார பைரவர், ஸ்வர்ணகெர்ஷண பைரவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றனர்.

    இவர்களில் அதிஷ்டங்களைத் தருகிற யோக பைரவரும் இடம் பெற்றுள்ளார்.

    இந்த யோக பைரவரின் சுற்று தேவதைகளை அறிந்து வணங்கினால் நமக்கு அவயோகங்கள் சுபயோகமாகி அதிஷ்ட யோகங்கள் உண்டாகும்.

    இவர் கற்பகச் சோலைகளுக்கு நடுவே பொங்கு பூம்பினல் நடுவில் உள்ள மகராலயத்தில் வீற்றுள்ளார்.

    மகரங்களால் தாங்கப்படுகிற பொன்மயமான கோட்டையில் சகல பரிவார தெய்வங்களோடு வெண்குதிரையில் இரட்டை வெண் குதிரையில் ஏறி இரு மீன்கள் பொறித்த கொடியோடு மச்ச முத்திரை தாங்கியவராக ஜொலிக்கிறார்.

    பொன் வண்ணத்தோடு அகன்ற கண்கள் கொண்ட மீன்கள் அவரிடம் உள்ள செல்வத்திற்கு பாதுகாப்பாளர்களாக உள்ளனர்.

    பாக்யேஸ்வரி, ஆனந்த வல்லி என்ற இரண்டு மனைவியர் அருகில் அமர்ந்திருக்க மீன் கொடி, நகுலம் என்ற கீரிப்பிள்ளை, சூலம், அமிர்த கலசம் ஆகியவற்றை ஆபரணங்கள் போல வைத்துக் கொண்டுள்ளார்.

    மகராலயம் என்ற அறுகோணக் கோட்டையின் ஆறு பக்க மூலைகளிலும் உப்பரிகை இட்டு உல்லாசச் சிரிப்புடன் உல்லாசினி, நிராகுலி, யோகினி, சல்லாபினி, ஹிதேஸ்வரி, விநோதினி ஆகிய ஆறு யோக சக்தி தேவிகள் உள்ளனர்.

    அடுத்ததாக எண் கோண வடிவக் கோட்டையில் அஷ்ட பைரவர்களும் வெளிவட்டத்தாமரைப் பொய்கை நடுவே 16 பவள மாளிகைகளில் பொன் பொருள், செல்வங்கள் குவிந்துள்ளன.

    அதனுள் 16 பேறுகளை வழங்கக் கூடிய 16 லட்சுமிகள் கொலு வீற்றிருக்கின்றனர்.

    இவர்களை அடுத்து உள்ள வனத்தில் 64 மாளிகைகளில் 64 யோகினியர்களுடன் 64 பைரவர்கள் அமர்ந்திருக்க உபதேவதை மற்றும் காவலர்களாய் வேதானர்கள் வீற்றுள்ளார்கள்.

    அடுத்ததாக உள்ள மூன்று வட்டங்களில் காடுகள் முதல் வட்டத்திலும் அகழி 2&ம் வட்டத்திலும் மலைகள் மூன்றாம் வட்டத்திலும் உள்ளன. இவற்றில் காட்டில் வனபாலகர்கள், அகழியில் தீர்த்த பாலகர்கள், மலைமேல் & சேத்திர பாலகர்கள் உள்ளனர். 

    • வடநாட்டில் காபாலிகர்கன் என்ற வகையினரும், காணமுகர்கள் என்ற இரு பிரிவினர்கள் வாழ்ந்து வந்தனர்.
    • சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் பைரவ பூஜை சில ஆலயங்களில் மட்டுமே நடைபெற்றது.

    வடநாட்டில் காபாலிகர்கன் என்ற வகையினரும், காணமுகர்கள் என்ற இரு பிரிவினர்கள் வாழ்ந்து வந்தனர்.

    சில காலங்கள் கழித்து இந்தியாவின் தென்னகப் பகுதிக்குள் நுழைந்து, ருத்திர பூமி எனப்படும் சுடுகாட்டில் நுழைந்து இவர்களது வழிபாட்டுக் கடவுளான பைரவரை வணங்கி மது மாமிச வகைகளைப் படைத்து வைதீக சாஸ்திர வழிபாட்டாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தனர்.

    இவைகளை ஈசனும் வெறுத்திட காபாலிகர்களும் கானமுகர்களும் அழிந்தனர்.

    பல்லவர் ஆட்சிக்கால மக்கள் இவர்களை வெறுத்து விட்டாலும் பைரவர் பற்றிய பயம் போகாமல் இருந்தது.

    சிவன் சொத்தை அபகரிப்பவர்களை பைரவர் தண்டிப்பார் என்ற நம்பிக்கை அப்போது நிலவியதால் பைரவர் பற்றிய பயம் குறையாத வேளையில் பைரவரின் 64 வடிவங்கள் பலன்கள் எடுத்துச் சொல்லப்பட்ட போது பெளத்தர்களும் சமணர்களுமே இவரை வழிபட்டனர்.

     சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் பைரவ பூஜை சில ஆலயங்களில் மட்டுமே நடைபெற்றது.

    இன்றோ தேய்பிறை அஷ்டமி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷ கால நந்தி வழிபாடு போல பக்தர்கள் முன்னதாகவே ஆலய வழிபாட்டுக்குச் சென்று விடுகின்றனர்.

    பைரவ வழிபாட்டுக்கு உதவியாக ஆகாச பைரவ கல்வம், ருத்ரயாமனம் போன்ற நூற்கள் இவரை முறையாக வழிபடும் விதியைச் சொல்கிறது.

    • பைரவரை வழிபடும் சிவனடியார்களை அரசர்கள் இவர்கள் வலிமை அறிந்து துன்புறுத்த மாட்டார்கள்.
    • அவர்களும் அரசனுக்குப் பயப்படமாட்டார்கள்.

    ஐந்து இதன் தேவரகசியம் யாதெனில், ஐந்து எண்ணிக்கையில் சப்தமு கீருத்ராட்சத்தை வடக்கு முகமாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச உபசாரங்கள் செய்து யோக பைரவ மூல மந்திரத்தால் ஹோமம் செய்து கடையில் வைக்க வியாபாரத்தில் செழிப்பும் முன்னேற்றத் தகவல்களும் வரக்காணலாம்.

    இன்றைக்குச் சுமார் 1800 ஆண்டுகட்கு முன்பாக ஆதிசைவ சிவாச்சாரியார்கள் என்ற பிரிவினர் பலர் பைரவ ஆராதனையில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

    அவர்கள் செய்த பைரவ உபாசனையின் பலனாகயாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் சைவக் கோவில்களைத் தன்னாட்சி அமைப்பு போன்றே நடத்தி வந்துள்ளனர்.

    பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது ஒரு செப்புத் தகட்டை எடுத்து யோக பைரவ ஸ்வர்ண பைரவ மந்திரத்தை ஜெபித்து பைரவரது பாதத்தில் வைத்து விட்டுச் செல்வர்.

    மறுநாள் கதவைத் திறந்து அந்த செப்புத்தகட்டைப் பார்த்தால் அது தங்கத் தடமாக மாறி இருக்கும்.

    அதைக் கொண்டு அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர் என்று காலச் செய்தி உள்ளது.

    பைரவரை வழிபடும் சிவனடியார்களை அரசர்கள் இவர்கள் வலிமை அறிந்து துன்புறுத்த மாட்டார்கள்.

    அவர்களும் அரசனுக்குப் பயப்படமாட்டார்கள்.

    • கேரள தேசத்தில் லிங்காயத்துகள் போலவே தமிழகத்தில் பைரவ உபாசகர்கள், பக்தர்கள் திரளாக இருக்கின்றனர்.
    • இவர்களில் பொற்கொல்வர்களும், நகை வியாபாரம் செய்பவர்களுமே அதிகம் உள்ளனர்.

    ஆறுமாதத்தில் தொடங்கி ஐந்து வயது முடியும்வரை குழந்தைகளின் இடுப்பில் அரைஞான் கயிறு அணிவிக்கப்படுகிற போது, தாயத்து மணியுடன் சேர்த்து நாய்க்காசு என்று ஒரு பொன் காசைச் சேர்த்து அணிவிப்பது வழக்கமாக இருந்தது.

    குழந்தை வழிதவறிச் சென்று விட்டால் இக்காசுகளில் வாசம் செய்கிற தெய்வம் துணை இருக்கும் என நம்பிக்கை.

    வெள்ளி, தங்கத்தால் செய்யப்பட்ட இக்காசுகளில் அழகான நாய் உருவம் இடம் பெறுவதைக் காணும் போது வேட்டை செய்யும் சமுதாயமாக ஆதி மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்தே நாய் உருவ பைரவர் வாழ்க்கையைப் பாதுகாத்து வரும் கடவுள் என்று அறிகிறோம்.

    மன்னர்கள் தங்களது அரசாங்க முத்திரைகளில் நாய் உருவம் பதித்தது போன்றே பைரவரின் பக்தர்கள் வழிபாட்டுக்குக் கொடி, டாலர்களில் நாய் உருவத்தைப் பதித்து வழிபட்டு வந்தனர்.

    பைரவ மூர்த்தி வகைகளில் யோக பைரவரை பூஜித்துப் பலன் அடைந்தவர்களின் கால வரலாற்றை அறிந்தால் பைரவர் பயம் போக்கி பாதுகாப்பு தந்து பணபலமும், மனபலமும் சேர்ப்பவர் என்று அறிவீர்கள்.

    கேரள தேசத்தில் லிங்காயத்துகள் போலவே தமிழகத்தில் பைரவ உபாசகர்கள், பக்தர்கள் திரளாக இருக்கின்றனர்.

    இவர்களில் பொற்கொல்வர்களும், நகை வியாபாரம் செய்பவர்களுமே அதிகம் உள்ளனர்.

    பொதுவாக நகைக்கடை வைத்திருப்பவர்கள் யோக பைரவரை வழிபடுவதால் மக்களின் போக்குவரத்தும், வாடிக்கையாளர் ஈர்ப்பும், நகைகள் சேர்ந்து வியாபார குவிதலும் ஏற்படும்.

    • இவருக்கு ஸ்வர்ண பைரவர் சௌபாக்ய பைரவர் என்ற பெயர்களும் உண்டு.
    • நரம்பு தொடர்பான நோய்கள் விலகும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

    பைரவ மூர்த்தியை மகிழ்ச்சிப்படுத்தி வரம்பெற அவரது விசேட மூர்த்தமாக விளங்கும் ஸ்ரீயோக பைரவரை முறையோடு வழிபட வேண்டும்.

    இவருக்கு ஸ்வர்ண பைரவர் சௌபாக்ய பைரவர் என்ற பெயர்களும் உண்டு.

    சிவாலய மூர்த்தியான பைரவக் கடவுளை வழிபட விதிகளைக் கூறும் நூல்களாக, மூர்த்தி தியானம், ஸ்ரீபரார்த்த பூஜா விதிகள், பராக்கிய நூல், விஷ்ணு தர்மோத்தரம், சித்திரதர்மம், அம்சுமத் ஆசுமம் ஆகியவனவும், உபநூல்களாக பைரவரின் அருளும் தன்மைகளைக் குறித்துப் பலவகைகளாக வெளிவந்துள்ளன.

    ஸ்ரீபைரவ மூர்த்தியை அஷ்டமி, அமாவாசை தினங்களில் தேனாபிஷேகம் செய்து தயிரன்னம், கடலை சுண்டல், வடை, தேங்காய், பழம் வெற்றிலை தாம்பூலம் வைத்து வழிபட காரியசித்தி உண்டாகும்.

     நரம்பு தொடர்பான நோய்கள் விலகும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

    ஆனால், விசேட மூர்த்தியான யோக பைரவரை வழிபட்டால் பொருளாதார வளமும், வாழ்க்கைப் பாதுகாப்பும் கிடைக்கும் என்று வழிபட்டு வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் குறிப்பிட்டனர்.

    • ஈசனின் அம்சங்களில் ஒருவரான ஸ்ரீபைரவ மூர்த்தியை சிவகணங்கன் வரிசையில் திருத்தலத்தின் காவலர் என்று புகழ்வார்கள்
    • பைரவரை வழிபட்டவர்கள் பல யோகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

    பைரவர் என்றால் எல்லோருக்குமே அவர் ஒரு உக்ரமான தெய்வம் என்றும், நன்மை செய்வாரா மாட்டாரா என்றும் ஒருவித பயம் உண்டாகலாம்.

    ஆனால் பைரவரை வழிபட்டவர்கள் பல யோகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

    மக்களைக் காப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவங்களில மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வழிபடும் மூர்த்தங்களாக, ஒன்பது உள்ளன.

    அவைதான் சிவலிங்கம், லிங்கோத்பவர், சந்திர சேகரர், சோமாஸ்கந்தர், பைரவர், வீரபத்திரர், நிருத்த மூர்த்தி, தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர் ஆகியோர்.

    ஈசனின் அம்சங்களில் ஒருவரான ஸ்ரீபைரவ மூர்த்தியைச் சிவகணங்கன் வரிசையில் திருத்தலத்தின் காவலர் என்று புகழ்வார்கள்,

    சிவாலயங்களில் அர்த்தசாம பூஜை முடிந்த பிறகு ஆலயத்தைப் பூட்டி சாவியை பைரவர் முன்பு வைத்து விட்டால் இரவு முழுவதும் பாதுகாப்பார்.

    திருட்டுப் போகாது என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது.

    • ஒரு வருடங்களுக்குப் பவுர்ணமி தோறும் செய்தால் செல்வந்தர் எனும் பணக்காரர் ஆவார்கள்.
    • இந்த யோகபலன்களை பராசர் தனது ஹோரா நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    ராகு தசை, சனி தசை, கேது, சூரிய தசை நடப்பில் உள்ளவர்கள் பூஜித்துப் பலன் பெறலாம்.

    பயம் இல்லாத பிறவி இல்லை. பைரவர் இல்லாத உயிரியில்லை என்பது பழமொழி.

    மனிதர்களது ஜாதகத்தில் பாரிஜாத யோகம், சங்கமம் யோகம் பேரி யோகம், மிருதங்க யோகம், கஜகேசரி, கமலா யோகம்,

    பஞ்சமகா புருஷ யோகங்களை உடைய 27 நட்சத்திரக்காரர்கள் இந்த யோகங்களைக் கண்டு யோக பைரவ வழிபாட்டை

    ஒரு வருடங்களுக்குப் பவுர்ணமி தோறும் செய்தால் செல்வந்தர் எனும் பணக்காரர் ஆவார்கள்.

    இந்த யோகபலன்களை பராசர் தனது ஹோரா நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    யோக பைரவாய மங்களம்!

    • இதை ஆலயத்தில் மட்டுமே செய்தல் முறை.
    • பஞ்ச பூதங்களும் நவக்கிரஹ நாயகர்களும் பொருள் வேண்டி பூஜை செய்திட வருவதாக ஐதீகம் உண்டு.

    தேய்பிறை அஷ்டமி, அமாவாசை அன்று தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய், விளக்கெண்ணெய், இலுப்ப எண்ணெய்

    என்ற 5 வகை எண்ணெய்களைக் கலந்து பூசணிக்காயை உடைத்து சரிபாதிகளை உள் சதைப் பகுதியில் சுத்தம் செய்யும்

    தேங்காயில் இருமூடிகள், ஒரு எலுமிச்சம் பழ மூடி எடுத்து அவற்றில் ஊற்றி பைரவர் முன் ஏற்றி வைத்து

    பைரவர் துதிகள் கூறி ஆத்ம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

    இதை ஆலயத்தில் மட்டுமே செய்தல் முறை. தேய்பிறை அஷ்டமியில் அஷ்டலட்சுமிகளும், அஷ்டதிக் பாலகர்களும்,

    பஞ்ச பூதங்களும் நவக்கிரஹ நாயகர்களும் பொருள் வேண்டி பூஜை செய்திட வருவதாக ஐதீகம் உண்டு.

    இதனால் யோக பைரவரை முறைப்படி யந்திரம் பட ரூபமாக வீட்டில் வழிபட்டு கோவிலில் பஞ்ச தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். 

    • மனதில் சிவப்பு நிற மேனியராக ஆடை, அணிகலன்கள் தரித்தவராகத் தியானம் செய்தால் ராஜச முறை தியானமாகும்.
    • உடல் நலம் சீர்பெறுகிறது.

    நாம் விரும்பிய பலன்களுக்கு ஏற்றபடி பைரவ ரூபத்தை நினைத்துக் கொண்டு மனதில் தியானிக்கலாம்.

    ஸ்படிக நிறத்தில் பாலகன் உருவில் தியானிப்பது சாத்வீக முறை தியானமாகிறது.

    இதனால் அற்ப ஆயுள் தோஷம் நீக்கப்படுகிறது.

    உடல் நலம் சீர்பெறுகிறது.

    மனதில் சிவப்பு நிற மேனியராக ஆடை, அணிகலன்கள் தரித்தவராகத் தியானம் செய்தால் ராஜச முறை தியானமாகும்.

    எதிரிகள் தொல்லை நீங்கி விடும்.

    கருநீல வண்ணத்தில் தோன்றுபவராக தியானிப்பது தாமச முறை தியானமாக உள்ளது. சூன்யங்கள் வைப்புகள் அகலும்.

    முறைப்படியாக மேற்குறிப்பிட்ட ஆபரண தேவதைக் கோடுகளோடு வரையப்பட்ட யந்திர பூஜையோடு சாத்வீக முறையில் யோக பைரவரை தியானிப்பவர்களுக்கு தங்கம் சேரும் பாக்கியமும், அளவற்ற பொருள் நிதியும் சேர்ந்திடும் என்கிறது.

    • இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர்.
    • ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார்.

    எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

    இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம்.

    இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்துப் போன சிவபக்தனான ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான்.

    இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர்.

    ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

    இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார் என்று பாருங்கள்....

    பாடல் எண் : 1

    முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே

    பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே

    வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்

    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 2

    நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்

    பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு

    அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 3

    வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்

    சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்

    சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

    ஆதியாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 4

    குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

    பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

    வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

    அணங்கன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 5

    நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

    பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்

    கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து

    அலமர்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 6

    விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்

    தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்

    எம்மான் ஈசன் எந்தையென் அப்பன் என்பார்கட்கு

    அம்மான்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 7

    செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்

    மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்

    இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 8

    முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல

    வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்

    பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ

    அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 9

    துன்பநும்மைத் தொழாதநாள்கள் என்பாரும்

    இன்பநும்மை ஏத்து நாள்கள் என்பாரும்

    நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்

    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 10

    பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்

    சீரூர்பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்து

    ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்

    ஆரூரன்றன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    அனைவருக்கும் பொருள் புரியும் வண்ணம் எளிதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

    ×