search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thieves"

    • ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன.
    • அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்ன சேலம் அருகே உள்ள ஏராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . விவசாயி. இவர் ஆடுகளை மேய்த்து கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பி கொளஞ்சியப்பன் வீட்டு அருகே தனக்கு சொந்தமான 18 ஆடுகளை கட்டிவிட்டு ஆடு வெளியே செல்லாமல் இருக்க வலைகளை கட்டி நிறுத்தி விட்டு அருகில் உள்ளஅவருடைய வீட்டிற்கு வழக்கம்போல் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆடுகள் சத்தம் போட்டு உள்ளன.

    சத்தத்தை கேட்டு வந்து பார்த்தபோது கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கார் அருகே சென்ற போது கார் வேகமாக சென்றுவிட்டது. பிறகு ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன. மீதமுள்ள மூன்று ஆடுகள் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்தபுகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து ஆடு திருடி சென்றவர்களை சின்ன சேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நம்பிய அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி விமலா கிரேசி இவர் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் நாங்கள் நகைகளை பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறோம். எனவே உங்களிடம் நகை இருந்தால் கொடுங்கள் அதனை நாங்கள் புதியது போன்று பாலீஷ் போட்டு தருகிறோம் என விமலா கிரேசியிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்தார்.

    அப்போது நகையை பாலீஷ் போடுவது போல் நடித்த அவர்கள் விமலா கிரேசியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு நகையை திருடி தப்பிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த சித்ரா கூச்சலிட்டதால் அங்கு இருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
    • செஞ்சி ரோடு,சந்தைமேடு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் காமாட்சி. இவர் திண்டிவனம் சேடன்குட்டை தெருவில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவர் திண்டிவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வட ஆலப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து சாலை ஓரம் நிறுத்தி செல்போன் பேசினார். இதனை சாதகமாக பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் காமாட்சி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். அதே போன்று திண்டிவனம் பகுதியை சேர்ந்த சித்ரா, தனது கணவர் செல்வத்துடன் கோனேரிகுப்பத்தில் இருந்து தனது உறவினரின் வீட்டில் இருந்து திண்டிவனத்திற்கு வந்து கொண்டிருந்தனர் . அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சித்ரா கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயற்சி செய்தார்.

    அதிர்ச்சி அடைந்த சித்ரா கூச்சலிட்டதால் அங்கு இருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அதேபோல திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த சம்யுக்தா தனது கணவர் சத்யராஜ் என்பவருடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இருந்து பட்டணம் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பட்டணம் அருகே இவர்களை பின் தொடர்ந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து திண்டிவனம், ரோசனை, வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் ரோசனை இன்ஸ்பெக்டர்பிருந்தா திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனி பாபு தலைமையான போலீசார் திண்டிவனம், செஞ்சி ரோடு,சந்தைமேடு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    • சின்னசேலம் அருகே கணவன் கண்முன் பெண்ணிடம் தாலியை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
    • அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது கணவர் செல்வகுமாரிடம் வீட்டு வாசல் முன்பு பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மர்ம நபர்கள் 4 பேர் மகாலட்சுமியின் பின்புறமாக அவருக்கு தெரியாமல் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றனர். அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர் கையில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்கள். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் சென்ற4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நாராயணசாமி எழுந்து பார்க்கையில் கதவு திறந்தது உள்ளது டிவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    • அதே தெருவில் 4 செல்போன்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நாவலூர் கிராமத்தில் பழைய காலனி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி( 52) கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வீட்டின் உள்புறம் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு உறங்கி உள்ளனர். வெளிப்புறம் மகன் மணிகண்டன் (31), மரு மகள் நிஷாந்தி ஆகியோர் உறங்கி உள்ளனர். நேற்று இரவு வீட்டின் கதவை லேசாக திறந்து வீட்டில் இருந்த சாம்சங் எல்.இ.டி. டி.வி. 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இன்று அதிகாலை நாராயணசாமி எழுந்து பார்க்கையில் கதவு திறந்தது உள்ளது டிவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசா ருக்கு தகவல்கொடுத்தார். தகவலின்பேரில் டி.எஸ்பி. காவியா நேரில் சென்று விசாரணை செய்தார். இதே போல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே தெருவில் 4 செல்போன்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகு தியில் இது போல் திருடர்கள் நடைபெறுவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • தெருக்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடர்கள் திருடி வருகின்றனர்
    • சி.சி.டி.வி. காமராவில் பதிவான காட்சி புகைப்படங்களை வலைதளங்களில் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பஜார் மற்றும் தெருக்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடர்கள் திருடி வருகின்றனர். அந்த காட்சி சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமராவில் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சி.சி.டி.வி. காமராவில் பதிவான காட்சி புகைப்படங்களை வலைதளங்களில் போலீசார் வெளியிட்டு அந்த நபர் குறித்த தகவல்களை தெரிந்தால் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தை கலக்கிய ஏ.டி.எம். கார்டு கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேர் மீது முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (30).

    நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு, பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து, அசல் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கிக்கொண்டு போலி கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    இருவர் மீதும் கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டு எடப்பாடி பகுதியில், முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த இளைஞர்கள் 5 ஆண்டுகளாக ஏடிஎம் பணக் கொள்கையடித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 38 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் எடப்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

    ×