என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே ஆடுகளை காரில் திருடி சென்ற மர்ம நபர்கள்
- ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன.
- அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் அருகே உள்ள ஏராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . விவசாயி. இவர் ஆடுகளை மேய்த்து கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பி கொளஞ்சியப்பன் வீட்டு அருகே தனக்கு சொந்தமான 18 ஆடுகளை கட்டிவிட்டு ஆடு வெளியே செல்லாமல் இருக்க வலைகளை கட்டி நிறுத்தி விட்டு அருகில் உள்ளஅவருடைய வீட்டிற்கு வழக்கம்போல் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆடுகள் சத்தம் போட்டு உள்ளன.
சத்தத்தை கேட்டு வந்து பார்த்தபோது கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கார் அருகே சென்ற போது கார் வேகமாக சென்றுவிட்டது. பிறகு ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன. மீதமுள்ள மூன்று ஆடுகள் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்தபுகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து ஆடு திருடி சென்றவர்களை சின்ன சேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






