search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thief"

    காவலாளி ஒரு திருடன் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொது கூட்டத்தில் பேசியுள்ளார். #RahulGandhi #Modi #CountryWatchman
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை, நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.



    அந்த அளவுக்கு ‘ரபேல்’ விமான பேரத்தில் இந்த அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவை தப்ப விட்டுள்ளது.

    பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில், மோடி சாதாரண மக்களை வங்கி முன்பு வரிசையில் நிற்க வைத்தார். 15 தொழில் அதிபர்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அவரால் விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாதா? இவ்வாறு அவர் பேசினார்.   #RahulGandhi #Modi #CountryWatchman
    ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை மற்றும் பணத்தை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெசலிங்கப்பா. இவரது மனைவி திலகா.

    இந்த நிலையில் நேற்று திலகா ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். அங்கு கொலுசு வாங்கி விட்டு ஒரத்தநாடு- மன்னார்குடி டவுன் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர் சாவடி பஸ் நிறுத்தத்தில் திலகா பஸ்சை விட்டு இறங்கிய போது தான் கொலுசு மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் வைத்திருந்த கைபையை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கூச்சல் போட்டதால் பஸ்சில் இருந்தவர்கள் பஸ்சை நிறுத்த கூறினர். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள், திலகாவிடம் நகை- பணத்தை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து அந்த 3 பெண்களையும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் 3 பெண்களும் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான 3 பெண்களும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும் பிடிபட்ட 3 பெண்களும் தங்களது பெயர்களை மாற்றி மாற்றி கூறி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    மாணவரின் கைப்பையை திருடிக்கொண்டு ஓடியவர் தன்னை விரட்டிப்பிடித்த போலீஸ்காரரின் விரலை கடித்து துண்டாக்கினார். அதை பொருட்படுத்தாமல் போலீஸ்காரர் அவரை கைது செய்தார்.
    கோயம்பேடு:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ஜெகதீஷ்(வயது 17), பள்ளி மாணவர். இவர் நேற்று மாலை காஞ்சீபுரம் சென்றுவிட்டு, அங்கிருந்து கோயம்பேடு பஸ்நிலையம் வந்தார். அவர் கொளத்தூர் செல்வதற்காக ஷேர் ஆட்டோ ஏறுவதற்கு 100 அடி சாலையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒருவர் ஜெகதீஷின் கைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடினார். ஜெகதீஷ் கத்தி கூச்சல்போட்டார். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் கார்த்திக் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தார். அப்போது அந்த நபர் தப்பிக்க போலீஸ்காரர் கார்த்திக்கின் கை விரலை கடித்ததில் விரல் துண்டானது.

    வலியையும் பொருட்படுத்தாமல் கார்த்திக் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை கைது செய்தார். விசாரணையில், அவர் பல்லாவரம் பம்மலைச் சேர்ந்த அய்யப்பன்(24) என்று தெரிந்தது. அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். #tamilnews
    ×