search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலை"

    மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது, எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி விட முடியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற காரணத்தால்தான் மேல்முறையீடு செய்துள்ளோம், எந்தப் பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்தாலும் காவல்துறையினர் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தியாவிலேயே பா.ஜ.க போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு அவர்கள் உதாரணமாக நேற்றைய தினம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர்,

    மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும்.

    கடந்த ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது ஒருவரது குடோனில் சோதனை நடத்தி அதில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. அது அனைவருக்கும் தெரியும். தற்போதுள்ள ஆட்சியில் எந்த அளவுக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துக் கொண்டுதான் உள்ளோம். இருப்பினும் வெளிமாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அதையும் முடிந்த அளவு தடுத்து கொண்டுதான் உள்ளோம். கஞ்சா விற்பனையை முடிந்தளவு கட்டுப்படுத்தி அது இல்லை என்ற நிலையை கொண்டுவர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது.

    அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியதற்கு, மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும், கோவை தொழில்துறையில் தலைநகராக உள்ளது.

    கோவை:

    அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் வாங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அன்றே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 நாட்கள் உற்பத்தி செய்த மின் அளவை நான் கூறினேன்.

    நாங்களும் இருக்கிறோம் என இருப்பை காட்டிக் கொள்ள வாய்க்கு வந்தபடி அண்ணாமலை பேசு வருகிறார். உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறி வருகிறார். எந்த குற்றச்சாட்டுகள் ஆக இருந்தாலும் ஆவணத்துடன் குற்றம்சாட்ட வேண்டும்.

    சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும், கோவை தொழில்துறையில் தலைநகராக உள்ளது. ரூ.1132 கோடியில் விமான நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரூ.800 கோடி அளவில் செலவிடப்பட்டு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்கள் அடுத்த 3 மாதங்களில் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெறும்.

    தொழில்துறையுடன் முதல்-அமைச்சர் 3 மணி நேரம் அமர்ந்து அவர்களது கருத்துகளை கேட்டுள்ளார். அதனை செயல்படுத்த உத்தரவுகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்திற்கு கடன் சுமைகள் உள்ளன. அதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. மக்கள் 1.41 லட்சம் மனுக்கள் கொடுத்துள்ளனர். 25 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மற்ற மனுக்கள் மீது தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே குடும்பம் என்ற தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே குடும்பம் என்ற தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வினர் ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

    தி.மு.க. முரண்பாடுகளைக் கொண்ட கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 1947-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் 5.5 கோடி கழிப்பிடங்கள்தான் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்மூலமாக 56 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மட்டும் கடந்த 2021-22-ம் ஆண்டில் தமிழகத்தை விட 8 மடங்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. தமிழகத்தில் தொழில்தொடங்க வரும் அந்நிய முதலீட்டாளர்களிடம் 30, 40 சதவீத கமிஷன் தொகையை கேட்கின்றனர்.இதன் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக முதல்வர் தெரிவித்ததுடன், அண்ணாமலை அரசியல் செய்வதாக தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 நாட்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு எடுத்துக்காட்டாகும்.

    பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளில் செய்த சாதனைகளால் தான் என்னால் மேடையில் தைரியமாக பேசமுடிகிறது. இந்த 8 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் ஒரு துறை அமைச்சரின் மீது அலுவலக குண்டூசி திருடியதாகக்கூட புகார் தெரிவிக்க முடியவில்லை. அதே வேளையில், திராவிட மாடல் ஆட்சியில் ஒரு ஆண்டுகூட முடியாத நிலையில் தற்போது நாக்கு தள்ளுகிறது.

    ஆகவே பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதான ஊழல் பட்டியல், ஊழல் புகார்கள், ஊழல் ஆதாரங்களை ஜூன் 5-ந்தேதி காலையில் மதுரையில் இருந்து வெளியிட தொடங்குவார்கள் என்றார்.

    கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன், மாநிலச்செயலாளர் மலர்க்கொடி, செய்தித்தொடர்பாளர் கார்வேந்தன், விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார், மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வரும் 2024-ம் ஆண்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் ஒருவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வார் என மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தாராபுரத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தற்போது மத்திய மந்திரியாக உள்ள முருகன் கடுமையாக உழைத்து சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரவையில் 3 இலாகாக்களை கொடுத்து அழகு பார்த்துள்ளது. இதனால் தாராபுரம் மக்களுக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ஜ.க. தமிழகத்தில் மாற்றத்திற்கான முன்னேற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வார்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட எந்த ஒரு மந்திரி மீதும் சிறிதளவு கூட குறைசொல்ல முடியாது. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்றனர். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். 

    தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம். வரும் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சட்டமன்றத்திற்கு பா.ஜ.க. சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் செல்வார்கள் என தெரிவித்தார்.
    கூட்டத்தில் பா.ஜ.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் இன்று மாலை மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நடக்கிறது. அண்ணா சிலை அருகில் மாலை 5-30மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்   பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இதில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி  மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். மேலும் கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர். 

    தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தைரியமாக நடமாடி வருகின்றனர் என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.
    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள புஷ்பத்தூர் ஊராட்சி வயலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது. ஏனெனில் தேர்தல் வாக்குறுதிகளை எழுதியவர் டி.ஆர்.பாலுதான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்படியெனில் டி.ஆர்.பாலுவை முதல்வராக்கி விடுங்கள். தமிழகத்தில் எது நடந்தாலும் திராவிடமாடல் ஆட்சி என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.

    வயலில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வேஷ்டி-சட்டையுடன் விவசாயம் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஏமாற்றுவேலை. இந்தியாவில் அதிக பொய் பேசுவதில் நம்பர் 1 முதல்-அமைச்சராக ஸ்டாலின் உள்ளார். தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக நான் தெரிவித்தேன். சில அமைச்சர்கள் தற்போது என்னிடம் தூது விடுகின்றனர்.

    எல்லா முடிவுகளும் கோபாலபுரத்தில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்கின்றனர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவில் 2 வங்கிகளை திவால் செய்துவிட்டு வந்தவர். பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினை முதல் உள்நாட்டு நக்சலைட் பிரச்சினை வரை தலையிட்டு குறைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளியை தமிழக முதல்வர் கட்டி தழுவுகிறார்.

    சென்னையில் பட்டப்பகலில் முகத்தை மறைக்காமல் கூலிப்படையினர் கொலை செய்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தைரியமாக நடமாடி வருகின்றனர். தி.மு.க ஆட்சியின் 2-வது வருட தொடக்கத்தில் மகன், மருமகன் ஆகியோரை தொடர்ந்து 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் புகழ்வது 23-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவை மந்திரிகள் புகழ்வது போல் உள்ளது.

    உக்ரைனில் இருந்து தமிழக அரசு மாணவர்களை மீட்க சுவட்டர் கம்பெனிக்கு ரூ.1½ கோடி கொடுத்துள்ளதாக தெரிவித்தது. இதேபோல் டிராவல் ஏஜென்சி கம்பெனிக்கும் பணம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து கச்சத்தீவை தாரை வார்த்ததுடன் மீன்பிடி உரிமையையும் ரத்து செய்தனர். தற்போது கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுக்கிறார்.

    தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை முழுவதையும் மத்திய அரசு கொடுத்துவிட்டது. எனவே இப்போதாவது மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    புதிய கல்வி கொள்கை குறித்த புரிதல் அமைச்சர் பொன்முடிக்கு இல்லை. இதுகுறித்து அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
    திருச்சி :

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் 'சேவை முன்னேற்றம் ஏழைகளுக்கான ஆட்சி' என்ற நிகழ்ச்சி மாவட்டந்தோறும் வருகிற 15-ந் தேதி வரை நடத்தப்படும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் வீடு இல்லாத ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.

    வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.

    கடந்த 2014-ம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி 2 ஜிகாவாட் ஆக இருந்த நிலையில் தற்போது 53 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. போலி ரேஷன்கார்டுகள் ஒழிப்பு கொரோனா காலக்கட்டத்தில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உள்ளது. ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பால் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

    2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளன.

    மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் காங்கிரஸ் நேரடியாகவும், தி.மு.க. மறைமுகமாகவும் இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் குற்ற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது. தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளன.

    தி.மு.க. ஆட்சி குறுநில மன்னர்களின் ஆட்சி, ஷெல் கம்பெனிகளை வளர்க்கக்கூடிய ஆட்சி. தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு என்று தனி இலவச எண்ணை ஆரம்பிக்க யோசித்து வருகிறோம். தமிழகத்தில் 2 துறையில் நடந்த ஊழல் பற்றிய விவரம் வருகிற 4-ந்தேதிக்குள் வெளியிடப்படும்.

    இதுவரை காணாத ஊழலை இனி வரும் 2 ஆண்டுகளில் தமிழகம் காணப்போகிறது. பா.ஜனதா வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து தி.மு.க. தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பா.ஜனதாவின் நோக்கமல்ல.

    புதிய கல்வி கொள்கை குறித்த புரிதல் அமைச்சர் பொன்முடிக்கு இல்லை. இதுகுறித்து அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்களை பா.ஜனதா பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படிக்கலாம்....காஷ்மீர் பள்ளி ஆசிரியை கொலை விவகாரம்: ராகுல் புகார்- அமித்ஷா ஆலோசனை
    பறையர்குடியை இழிவுபடுத்தும் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும், என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியிருந்தார்.
    சென்னை:

    பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பறையர் என்ற சொல்லை அண்ணாமலை பயன்படுத்தியது கடும் சர்ச்சையானது. 

    அண்ணாமலையின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எச்சரிக்கை என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார். 

    “பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை-வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட  மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி  @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும்” என வன்னி அரசு கூறியிருந்தார். 

    வன்னி அரசு

    இதற்கு அண்ணாமலை பதில் அளித்து ட்வீட் செய்திருந்தார். அதில், “அண்ணா வணக்கம்! கத்தியை விட நம் புத்தி கூர்மை  என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி  வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்!’ என குறிப்பிட்டு மேக்மிலன் அகராதியின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பியிருந்தார்.

    இதற்கும் வன்னி அரசு விளக்கம் அளித்தார். ‘பறையா என்பது இழிவுபடுத்த (offensive) பயன்படுத்தப்படும் பெயர் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி குறிப்பிடுகிறது. நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவமதிப்பு. பறையாவும் அப்படிதான். மேலும்,பறையா என்பது வரலாற்று அடிப்படையில் தென்னிந்தியாவில் உள்ள தொல்குடி பறையர் சமூகத்தை சேர்ந்தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறையா என்று சொன்னால்  தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது சட்டம்’ என வன்னி அரசு குறிப்பிட்டார். 

    இந்த விவகாரம் தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், அண்ணாமலை  தனது கருத்து தொடர்பாக மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கை சகோதர சகோதரிகள் நான் ஒரு பதிவில் பயன்படுத்திய 'pariah’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருந்தார்கள்! 

    நான் ‘Pariah' எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன். அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள்

    இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே!

    இவ்வாறு அண்ணாமலை  கூறி உள்ளார்.
    தடையை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டை நோக்கி பா.ஜனதா கட்சி பேரணி நடத்தியது.

    இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திரண்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் நேற்று காலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை தலைமையில் திரண்டு கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பாரதிய ஜனதாவினர் பின்னர் கலைந்து சென்றனர்.

    தடையை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஆண்கள், 1000 பேர் பெண்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பால்கனகராஜ் உள்ளிட்ட 10 மாநில நிர்வாகிகளின் பெயரை குறிப்பிட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    143 ஐ.பி.சி. (அனுமதியின்றி கும்பலாக கூடுதல்), 188 ஐ.பி.சி. (போலீசார் விதித்துள்ள தடையை மதிக்காமல் போராட்டம் நடத்துவது), 41-6 (144 தடை உத்தரவை மீறுதல் ஆகிய 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, சென்னையில் 144 தடை உத்தரவு கொரோனா பரவலுக்கு பிறகு தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு யாருக்கும் அனுமதி இல்லை. தடையை மீறி போராட்டம் நடத்தியதால் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.


    ×