search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள்"

    • கடந்த 2 வாரங்களாக பக்ரீத் மற்றும் கோவில் திருவிழாக்கள் காரணமாக நல்ல விலை கிடைத்தது.
    • அதிக அளவில் ஆடுகளை ஏற்றி வந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

     மூலனூர்:

    தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 வாரங்களாக பக்ரீத் மற்றும் கோவில் திருவிழாக்கள் காரணமாக நல்ல விலை கிடைத்தது.தற்போது ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆடுகளின் விலை குறைந்துள்ளது. இதனால் ஆடுகளின் விலை சற்று குறைவாகவே இருந்தது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக நல்ல விலை கிடைத்ததை நம்பி அதிக அளவில் ஆடுகளை ஏற்றி வந்த விவசாயிகளுக்கு இந்த வாரம் ஏமாற்றமே கிடைத்தது.

    அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.5,500 ஆகும். இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    • நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.
    • மர்மநபர்கள் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 70).

    வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் பிழைப்புகாக தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இவரிடம் 10 ஆடுகள் இருந்தன.

    பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் அமுதா மாலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குள் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகைக்கு சென்ற போது அங்கு கழுத்து முறிந்து ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் 10 ஆடுகளும் இறந்து கிடந்தன.

    இதைக்கண்டு அமுதா கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆடுகள் எப்படி இறந்தது? ஆடுகள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையிலும் இறந்து கிடப்பதால் இது எப்படி நடந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்.

    மேலும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    10 ஆடுகளையும் மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ஆடுகள் சாவுக்கு காரணம் என்ன? முன்விரோத செயலா? என என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    • காய்கறிகள் விற்கப்படுகிறது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப் பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை செயல் படும் தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறி கள் விற்கப்படுகிறது.

    இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்க ளில் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சந்தை செயல்படும். இதில் ஆடு, மாடு, கோழிகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். அதனால் இவைகள் காலை 9 மணிக்குள் விற்பனை செய்யப்பட்டு விடும். அதன் பின்னர் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் தொடர்ந்து விற்பனை யாகும்.

    வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை வருவதை யொட்டி சுற்று வட்டார கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் ஆடுகள் இன்று விற்பனைக்கு வந்தது. ஆடுகளின் விற்பனை ஜோராக இருந்தது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது. மதியம் வரை ரூ.2 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

    • சிறுவாச்சூர் சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஆட்டுச்சந்தை நடந்தது. பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிந்தனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் குர்பானி கொடுக்க ஆடுகளை வாங்க முஸ்லிம்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர்.

    இதனால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடுகளை பேரம் பேசி வாங்கி சென்றனர். ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், சுமார் ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் சிறுவாச்சூரில் வருகிற செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் மீண்டும் ஆட்டுச்சந்தை நடத்துமாறு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து, 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை பள்ளிவாசல் மைதானத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்தச் சந்தையில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி மதுரை, ராஜகிரி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். இதே போல ஆடுகளை வாங்கவும் ஏரா ளமானோர் வந்திருந்தனர்.

    பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை யானதாக சந்தை ஏற்பா ட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
    • நாய்களால் அப்பகுதி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செந்தட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது39). இவர் செந்தட்டியில் இருந்து வேப்பங்குளம் செல்லும் சாலையில் ஆட்டு கொட்டகை அமைத்து அங்கு சுமார் 41 ஆடுகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு அந்த ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இதில் 24 செம்மறி ஆடுகளும் 8 வெள்ளாடுகளும் உயிரிழந்தன. மேலும் நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன.

    நாய்கள் கூட்டமாக சென்று ஆடுகளைக் கடித்து குதறும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாகவும், அவற்றால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது.
    • அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.

    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, கோம்பை, அப்பாயிபாளையம், வரகூர், பண்ணைகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.

    துறையூர், திருச்சி, கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கி ன்றனர். நேற்று நடந்த வாரச்சந்தைக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் வரத்து அதிகரித் திருந்தது. இதனால் ஒரே நாளில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் 70 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள தங்களாச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சடையாண்டி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் ஒரு முறை வைகாசி பவுர்ணமி அன்று தங்களாச்சேரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி திருவிழா நடந்தது. தங்களாச்சேரி, அம்மாபட்டி, பன்னிக்குண்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நேர்த்திக்கடனாக ஆடுகளை வளர்த்து தானமாக வழங்கினர். அரிசி உள்ளிட்ட பலசரக்கு சாமான்களையும் வழங்கினர். நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட 70 ஆடுகளை வெட்டி சடையாண்டி சுவாமிக்கு படையலிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து காலையில் இருந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×