search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 match"

    ஒட்டு மொத்த திறமை அளவில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே சிறந்தது என இந்திய கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

    சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.

    ஷார்ட் 29 பந்தில் 33 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்னும் (4 பவுண்டரி) கேரி 19 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    குருணால் பாண்டியா 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 165 ரன் இலக்கை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.

    கேப்டன் விராட் கோலி 41 பந்தில் 61 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) தவான் 22 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 22 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), ரோகித்சர்மா 16 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா, ஸ்டார்க், மேக்ஸ்வேல், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. மெல்போர்னில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவை விட நாங்களே திறமையில் சிறந்து விளங்கினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியுடன் செயல்பட்டனர். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் வரை குவித்து இருக்கலாம் ஆனால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 164 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டனர். இந்த 15 ரன் இடைவெளி மிக முக்கிய பங்கு வகித்தது.

    எங்களது தொடக்க வீரர்கள் (ரோகித் சர்மா, தவான்) தொடக்கத்தில் அதிரடியாக ஆடியதால் எளிதாக அமைந்தது. முடிவில் தினேஷ் கார்த்திக் மிக நேர்த்தியாக விளையாடினார். நானும், அவரும் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் வெற்றி எளிதானது.

    ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஜம்பா சிறப்பாக வீசினார்கள். ஆனால் ஒட்டு மொத்த திறமை அளவில் நாங்களே சிறந்து விளங்கியதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும் போது “பவர் பிளேயில் இந்திய அணியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ரோகித்தும், தவானும் முற்றிலும் மாறுபட்ட பேட்ஸ்மேன்கள். நாங்கள் கடைசிவரை போராடினோம்“ என்றார்.

    இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டில் மோதுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது.

    அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய லெவனுடன் மோதும் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. #AUSvIND #ViratKohli
    மெல்போர்னில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 132 ரன்கள் சேர்த்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. #AUSvIND
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

    ஷார்ட் 14 ரன்களும், லின் 13 ரன்கள், ஸ்டாய்னிஸ் 4, மேக்ஸ்வேல் 19 என ஆட்டமிழந்த நிலையில், மெக்டெர்மாட் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதேசமயம் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 19 ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமான ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    அப்போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து மழை பெய்வதால், ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், அகமது தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மழை தொடரும்பட்சத்தில் டக்வொர்ட் லெவிஸ் விதிப்படி, இந்தியாவிற்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை நிலவரத்திற்கு ஏற்ப ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #AUSvIND
    மெல்போர்ன்:

    3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இதனால் நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே ஆடினார்கள். மழை விதியால் பாதிப்பு ஏற்பட்டது. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

    நாளைய போட்டிக்கான அணியில் விராட்கோலி மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குணால் பாண்ட்யா ரன்களை வாரி கொடுத்தார். இதேபோல கலீல் அகமதுவும் ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் இருவரில் ஒருவர் கழற்றிவிடப்பட்டு யசுவேந்திர சஹாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. பேட்டிங் வரிசையில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது.

    ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி 20 தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மேக்ஸ்வெல், கிறிஸ்லின், கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோரும், பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டோனிஸ ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஸ்டோனிஸ் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்கிறார்.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். #AUSvIND #ViratKohli


    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது முத்திரை பதிக்க கூடியவர்கள்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், கிறிஸ் லின் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், நாதன் கவுல்டர் நைல், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி சமீப காலங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் இந்திய வீரர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம்.

    வீரர்கள் விவரம்:-

    இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், டி'ஆர்கி ஷார்ட், அலெக்ஸ் கேரி, பென்மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரிவ் டை, ஆடம் ஜம்பா, பெரென்டோர்ப், ஸ்டேன்லேக். #AUSvIND #ViratKohli
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணிந்தது. #INDvWI
    கொல்கத்தா:

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள எகனா ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெய்ட், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட், குருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், தினேஷ் ராம்டின், ஹெட்மயர், கீரன் பொல்லார்ட், டேரன் பிராவோ, நிகோலஸ் பூரான், கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), பாபியான் ஆலென், கீமோ பால், காரி பியாரே, ஒஷானே தாமஸ். #INDvWI
    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. #PakvAus #Pakistan #Australia
    துபாய்:

    பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி துபாயில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. பாபர் ஆசம் 40 பந்தில் 50 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அந்த அணி ஏற்கனவே முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இதன்மூலம் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    அந்த அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொடர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. #PakvAus #Pakistan #Australia
    இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. #ENGvAUS #AUSvENG

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக இழந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய பட்லர் அரைசதம் கடந்தார். அவர் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். 



    அவரைத்தொடர்ந்து ஜேசன் ராய் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த இயான் மார்கன் 15 ரன்னில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 24 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஜோ ரூட் 24 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் மிச்செல் ஸ்வீப்சன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 222 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. 



    இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். ஷார்ட் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

    பிஞ்ச் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். ஆனால் எதிர்முனையில் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 10 ரன், டிராவிஸ் ஹெட் 15 ரன், அலெக்ஸ் கேரி 3 ரன், மார்கஸ் ஸ்டாயினிஸ் டக்-அவுட் ஆகினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 72 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 



    அதன்பின் பிஞ்ச் உடன் ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பிஞ்ச் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 41 பந்தில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் ஆண்ட்ரூ டை களமிறங்கினார்.

    அகார் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே புதிதாக களமிறங்கிய கேன் ரிச்சர்ட்சன் கோல்டன் டக்-அவுட் ஆனார். டை 11 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களும், லியாம் பிளங்கீட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். #AUSvENG #ENGvAUS
    இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 222 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. #ENGvAUS #AUSvENG

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக இழந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.



    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய பட்லர் அரைசதம் கடந்தார். அவர் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். 

    அவரைத்தொடர்ந்து ஜேசன் ராய் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த இயான் மார்கன் 15 ரன்னில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.



    அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 24 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஜோ ரூட் 24 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் மிச்செல் ஸ்வீப்சன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 222 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. #AUSvENG #ENGvAUS
    ×