search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 19 ஓவரில் 132 ரன்கள்- மழையால் ஆட்டம் நிறுத்தம்
    X

    இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 19 ஓவரில் 132 ரன்கள்- மழையால் ஆட்டம் நிறுத்தம்

    மெல்போர்னில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 132 ரன்கள் சேர்த்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. #AUSvIND
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

    ஷார்ட் 14 ரன்களும், லின் 13 ரன்கள், ஸ்டாய்னிஸ் 4, மேக்ஸ்வேல் 19 என ஆட்டமிழந்த நிலையில், மெக்டெர்மாட் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதேசமயம் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 19 ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமான ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    அப்போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து மழை பெய்வதால், ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், அகமது தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மழை தொடரும்பட்சத்தில் டக்வொர்ட் லெவிஸ் விதிப்படி, இந்தியாவிற்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை நிலவரத்திற்கு ஏற்ப ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. #AUSvIND
    Next Story
    ×