search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்- இந்திய அணி பேட்டிங்
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்- இந்திய அணி பேட்டிங்

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணிந்தது. #INDvWI
    கொல்கத்தா:

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள எகனா ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெய்ட், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட், குருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், தினேஷ் ராம்டின், ஹெட்மயர், கீரன் பொல்லார்ட், டேரன் பிராவோ, நிகோலஸ் பூரான், கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), பாபியான் ஆலென், கீமோ பால், காரி பியாரே, ஒஷானே தாமஸ். #INDvWI
    Next Story
    ×