search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பர்மிங்ஹாம் டி20 - ஆஸ்திரேலியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    பர்மிங்ஹாம் டி20 - ஆஸ்திரேலியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. #ENGvAUS #AUSvENG

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக இழந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய பட்லர் அரைசதம் கடந்தார். அவர் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். 



    அவரைத்தொடர்ந்து ஜேசன் ராய் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த இயான் மார்கன் 15 ரன்னில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 24 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஜோ ரூட் 24 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் மிச்செல் ஸ்வீப்சன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 222 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. 



    இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். ஷார்ட் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

    பிஞ்ச் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். ஆனால் எதிர்முனையில் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 10 ரன், டிராவிஸ் ஹெட் 15 ரன், அலெக்ஸ் கேரி 3 ரன், மார்கஸ் ஸ்டாயினிஸ் டக்-அவுட் ஆகினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 72 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 



    அதன்பின் பிஞ்ச் உடன் ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பிஞ்ச் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 41 பந்தில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் ஆண்ட்ரூ டை களமிறங்கினார்.

    அகார் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே புதிதாக களமிறங்கிய கேன் ரிச்சர்ட்சன் கோல்டன் டக்-அவுட் ஆனார். டை 11 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களும், லியாம் பிளங்கீட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். #AUSvENG #ENGvAUS
    Next Story
    ×