search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student missing"

    தேனி அருகே மாணவி உள்பட 2 பெண்கள் மாயமாகினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    கேரள மாநிலம் உடும்பன் சோலை மேப்பாறையைச் சேர்ந்தவர் பைரவன். இவரது மகள் பூவிதா. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகளில் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுவதையொட்டி பூவிதா போடிக்கு வந்துள்ளார்.

    ஆனால் மறுநாள்தான் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி விட்டு சான்றிதழ் வாங்கி வருவதாக தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் அங்கு செல்லவில்லை.

    இது குறித்து பைரவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே தேவாரம் டி.சிந்தலச்சேரியைச் சேர்ந்தவர் சுருளிராஜ் மகள் ஜாஸ்மின் (வயது 19). 10-வது வரை படித்து விட்டு தேயிலை தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜாஸ்மின் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார்.

    இரவு வேகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவாரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜாஸ்மினை தேடி வருகின்றனர்.

    தக்கலை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    தக்கலை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாதம் 19-ந்தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவியை தேடி பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

    மேலும் மாணவியை கண்டு பிடிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்களும் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியை மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் ராஜகுமார்(வயது22). தொழிலாளி என்பவர் மாணவியை கேரளாவுக்கு கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று ஜெஸ்லின் ராஜகுமார் மற்றும் கடத்தப்பட்ட மாணவியையும் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் இருவரையும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ஜெஸ்லின் ராஜகுமாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    தேனி அருகே கடைக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே தேவாரம் அய்யப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் குட்டிராஜ் மகள் காவ்யா (வயது 18). தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது தேர்வு எழுதி முடித்துள்ளார். சம்பவத்தன்று காவ்யா கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் காவ்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவாரம் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் டி.மூணாண்டி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு அருகே கடைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் வசிப்பவர் ஜீவராஜ், இவரது மகள் தமிழ் செல்வி(வயது 18).

    தமிழ்செல்வி ஈரோட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி மாணவி தமிழ் செல்வி கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிகொண்டு, வெளியே சென்றார், ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும், மாணவியை காணவில்லை.

    இது தொடர்பாக மாணவின் தந்தை ஜீவராஜ் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இது குறித்து விசாரனை நடத்தி மாணவியை தேடி வருகிறார்.

    மாயமான மாணவி அவராக எங்கும் சென்று விட்டாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்று விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    கரிக்கலாம்பாக்கம் அருகே பெற்றோர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கரிக்கலாம்பாக்கம் அருகே பெருங்களூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சிவா (வயது 15). இவன் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    சம்பவத்தன்று சிவா வீட்டில் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை ரோட்டில் வீசினான். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு சைக்கிளில் வீட்டில் இருந்து சென்ற சிவா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் இல்லை.

    இதையடுத்து சிவா மாயமானது குறித்து அவனது பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிவாவை தேடி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 54). விவசாயி.

    இவரது மகள் ஆஷா தேவி(22). பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.விடுமுறை விடப்பட்டால் அவர் தனது தந்தைக்கு தகவல் தெரிவிப்பார். இதையடுத்து தந்தை சிவபிரகாசம் பெருந்துறைக்கு வந்து ஆஷா தேவியை அழைத்து செல்வார்.

    இந்த நிலையில் பாலி டெக்னிக்குக்கு தற்போது விடுமுறை விடப்பட்டது. ஆனால் சிவபிரசாசத்திடம் ஆஷாதேவி பேசவில்லை. எனவே சிவபிரகாசம் கடந்த 11-ந் தேதி விடுதிக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது ஆஷாதேவி 11-ந் தேதி காலையிலேயே விடுதியில் இருந்து சென்று விட்ட தகவல் தெரியவந்தது. ஆஷாதேவி ஊருக்கு வராததால் அவரது தந்தை சிவபிரகாசம் சந்தேகம் அடைந்தார்.

    எனவே அவர் பெருந்துறைக்கு வந்தார். அங்கு ஆஷாதேவியின் தோழிகளிடம் விசாரித்தார். ஆனால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே அவர் மாயமானது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிவபிரகாசம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் மாயமான ஆஷாதேவி கல்லூரி மாணவர் ஒருவருக்கு செல்போனில் மேசேஜ் கொடுத்துள்ளார். அதில் ‘‘நான் மணி என்பவருடன் போகிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.

    எனவே மணி என்பவர் யார்? அவருக்கும் ஆஷாதேவிக்கும் என்ன தொடர்பு? அவருடன்தான் ஆஷாதேவி சென்றுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரங்கநாதன் நகரை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் சங்கீதா(27). இவர் திருப்பாச்சூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவி சங்கீதா மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி ஹனுமந்த புரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் உமாமகேஸ்வரி (20) அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி கல்லூரிக்கு சென்ற உமா மகேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை தேடி வருகின்றனர். #tamilnews
    கும்பகோணம் அருகே டி.வி.பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கவரத் தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரி (வயது 13). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி யோகேஸ்வரி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அன்று இரவு முழுவதும் யோகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் யோகேஸ்வரி கிடைக்கவில்லை.

    இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் யோகேஸ்வரி பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர் அடுத்த மண வாளநகர் அருகே பிளஸ்- 2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மண வாளநகர் அருகே உள்ள நுங்கம்பாக்கம் கிரா மத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஜான்சி ராணி (வயது 17). அம்பத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே தந்தை சீனிவாசன் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். #tamilnews
    அந்தியூர் அருகே பிளஸ்-2 மாணவன் மாயமான சம்பவம் குறித்து போசலீசார் விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம் பாளையத்தை சேர்ந்தவர், தங்கவேல், கூலி வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் தமிழரசன் (வயது 17). இவர் அந்தியூர் அரசுபள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்வீட்டிற்கு வரவே இல்லை.

    இதனால் பெற்றோர் நண்பர்கள்,உறவினர்கள் வீட்டில் தேடியும் தமிழரசன் கிடைக்கவில்லை.அதனால் தமிழரசனின் தந்தை தங்க வேல் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் போரில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை தேடி வருகின்றனர்.

    மேலும் என்ன காரணத்திற்காக வீட்டை விட்டு மாணவன் வெளியேறினார் என்று போசலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    பள்ளிக்கூடம் சென்ற 2 மாணவர்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை தேடி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி மொடச்சூர் பெரியார்நகர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் சரண் (வயது 14). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அதே பகுதி நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர்கோபாலகிருஷ்ணன்.இவரது மகன் ஸ்ரீராம் (14) இவனும் அதே பள்ளியில் படித்து வருகிறான். இரு மாணவர்களும் நண்பர்கள்.

    கடந்த 11-ந் தேதி நண்பர்கள் இருவரும் பள்ளிக் கூடம் சென்றனர். ஆனால் மாலை வீடு திரும்பி வர வில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.

    மேலும் நண்பர்கள்  வீடு உறவினர் வீடுகளில் தேடியும் மாணவர்கள் கிடைக்க வில்லை. இதனால் பதட்டம் அடைந்த சரணின் தந்தை வெள்ளியங்கிரி இதுகுறித்து கோபி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவர்களையும் தேடி வருகிறார்கள்.

    பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறினார்களா? வேறு என்ன காரணத்துக்காக மாயமானார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான மாணவர்களை தேடி வருகிறார்கள். 

    வாழப்பாடி அருகே மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான மாணவியை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியை அடுத்த மாரியம்மன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி மாது (45). இவரது மனைவி விஜயா(39). குடும்பத்தோடு திருப்பூருக்கு சென்ற இத்தம்பதியர் அப்பகுதியிலேயே தங்கி நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அவர்களது 17 வயது மகள், 11ம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார். சொந்த ஊருக்கு வந்த போது கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்த மாணவி மாயமானர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மாயமான தனது மகளை மீட்டுக் கொடுக்கக்கோரி, தொழிலாளி மாது மனைவி விஜயா, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மாயமான மாணவியை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×