search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student missing"

    • மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானார்.
    • கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராம த்தைச் சேர்ந்தவர் குண சேகரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் புதுச்சேரி மாநிலம் வில்லி யனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். கல்லூரிக்கு காலை 7 மணிக்கு புறப்ப டும் இவர் மாலை 5.30 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்ற ஆர்த்தி இரவு 7 மணியாகியும் வீடு திரும்ப வில்லை. கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை. இதை யடுத்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார்.
    • இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை, குள்ளப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள செம்ம–நத்தம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது மகள் ரஞ்சனி (வயது 20), சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ நடத்தி வரும் கார்த்தி என்பவர், எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்றி–ருக்கலாம் என தெரிவித்து உள்ளார்.

    இந்த புகாரின் பேரில், ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். 

    • தேனி அருகே மாணவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை கள்ளிப்பட்டி பேயன்அம்பலம் தெருவை சேர்ந்த முருகன் மகன் சூரியபிரசாத் (வயது19). இவர் திருச்சியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். சொந்த ஊரில் நடந்த திருவிழாவை காண்பதற்காக சூரியபிரசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். மீண்டும் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார்.

    இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி வடமால் தெரு வ.உ.சி. நகரை சேர்ந்த நீதிராஜன் மகள் சென்பாஸ்ரீ (17). இவர் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில்இருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் அங்காளஈஸ்வரி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • நிலக்கோட்டையில் பிளஸ்-2 மாணவி திடீரென மாயமானார்
    • மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவர் நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே வீட்டை விட்டு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானார்.
    • வெகு நேரமாகியும் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஐயங்குட்டி. விவசாயி. இவரது மகன் முனியன் (வயது 15)பெருமங்கலத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 26. 7. 2022 ஆம் தேதி அன்று வழக்கம் போல் காலை காலைக்கடன் முடிப்பதற்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து மாணவன் முனியனை போலீசார் தேடி வருகின்றனர். 

    • சிதம்பரத்தில் கடைக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மாயமானர்.
    • சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல புதுத் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன். அவரது மகன் சதீஷ்குமார் (வயது 12). இவர் சிதம்பரத்தில் உள்ள ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அன்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் மாவு வாங்கி வரச் சென்றார்.ஆனால் கடைக்கு சென்ற சதீஷ்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் தந்தை சபரிநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

    • கடைக்கு சென்ற மாணவி மாயமானார்
    • பிளஸ் 2 படித்து வருகிறார்

    திருச்சி :

    திருச்சி உப்பிலியபுரம் மங்களபுரம் சேர்ந்தவர் தனம். இவரது 17 வயது மகள் மங்களாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடைக்கு சென்று விட்டு வருவதாக வீட்டை விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் 3 பேர் மாயமாகினர்
    • பள்ளி மாணவன் மற்றும் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

    தேனி:

    தேனி அருகே தப்புக்குண்டுவை சேர்ந்தவர் மாரிச்சாமி மனைவி சித்ரா(31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சித்ரா திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி ராதாருக்மணி(28). சம்பவத்தன்று கடைவீதிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் மாதவன்(16). இவர் 11-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்பு செல்ல இருக்கிறார். விடுமுறை தினத்தில் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குவது வழக்கம். நேற்று அங்கு சென்ற மாதவன் தனது நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் மேல்மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபி (வயது 21). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் இருந்து கிருஷ்ணகிரி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தாயார் சின்ன பாப்பா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறனர்.
    உவரியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    உவரி பகுதியைச் சேர்ந்த வர் ரமேஷ். இவரது மகள் அல்ட்ரின் ரேஷ்மா (வயது 19). இவர் நெல்லையில் உள்ள விடுதியில் தங்கி இருந்து, ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி கல்லூரி விடுதியில் இருந்து வீடு செல்வதாக கூறி, புது பஸ் நிலையம் சென்றார்.

    ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ரமேஷ், பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.


    மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.

     

    ×